Thursday, March 29, 2018


ஏர் இந்தியா விமான பங்குகள் 76 சதவீதம் விற்க மத்திய அரசு ஒப்புதல்

Added : மார் 28, 2018 18:43 



  புதுடில்லி: மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியாவின் 76 சதவீத பங்குகளை விற்பனை செய்ய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இது குறித்து கூறப்படுவதாவது: கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரை குழு கூட்டத்தில் ரூ.50 ஆயிரம் கோடிக்கு கடன் சுமை கொண்ட ஏர் இந்தியாவின் பங்குகளை விற்பனை செய்வதற்கான கொள்கையை கோரி இருந்தது. மேலும் விமானப்போக்குவரத்துதுறையும் ஏர் இந்தியாவின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தது. இதனையடுத்து அதன் பங்குகளை 76 சதவீதம் அளவிற்கு விற்பனை செய்து கொள்ள மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 3.4.2025