Tuesday, March 27, 2018

ஆர்.டி.ஐ., பெயரில் தொல்லை : அதிகாரிகள் பதிலால் சர்ச்சை

27.03.2018  dinamalar

திருப்பூர்,: ''அலுவலருக்கு தொல்லை தரும் நோக்கமே மனுவில் உள்ளது,'' என்று, ஆர்.டி.ஐ., கேள்விக்கு, திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் அளித்த பதில், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.




தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், 'நாளைய திருப்பூர்' மக்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தரபாண்டியன் என்பவர், திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்திடம், சில கேள்விகளை கேட்டிருந்தார்.
அம்ரூத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி, புதிதாக அமைக்கப்பட்ட சாலைகளின் விபரம், 2016க்கு

பின் கடை வாடகை உயர்த்தப்பட்டதற்கான அரசாணை நகல், கழிப்பறை மற்றும் பூங்கா விபரம் உட்பட,31 கேள்விகளை, கேட்டிருந்தார்.

இதற்கு, திருப்பூர் மாநகராட்சி செயற்பொறியாளர்கள் தமிழ்செல்வன், திருமுருகன் அளித்த பதில், அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இருவரும், ஒரே பதிலை அளித்துள்ளனர். பதிலில் தெரிவித்திருப்பதாவது:இந்த மனுவில், தகவல் பெற வேண்டும் என்ற நோக்கத்தை விட, தகவல் அலுவலருக்கு தேவையற்ற தொல்லை தர வேண்டும் என்ற நோக்கமே மேலோங்கி உள்ளதுபொது அதிகார அமைப்பின் பணியாளர்கள், அவர்களின், 75 சதவீத நேரத்தை, இதுபோன்ற தகவல்களை சேகரிக்கவும், மனுதாரருக்கு வழங்கவுமே செலவிட .வேண்டியுள்ளது .இதுபோன்ற

Advertisement காட்சியை, நாடு காண விரும்பவில்லை. இவ்வாறு பதிலில் கூறப்பட்டுள்ளது.மனுதாரர், சுந்தரபாண்டியன், ''மக்களுக்காக உருவாக்கப்பட்ட ஆர்.டி.ஐ., சட்டத்தை, அதிகாரிகள் சிறிதும் மதிப்பதில்லை.
''திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகளின் பதில், அதிருப்தியளிக்கிறது. உரிய பதில் தராமல், சப்பைக்கட்டு கட்டியுள்ளனர். எனவே, மேல்முறையீடு செய்துள்ளேன்,'' என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 3.4.2025