Wednesday, March 28, 2018

மருத்துவ கவுன்சிலிங் முடிவு இன்று வெளியீடு

Added : மார் 28, 2018 05:16 



 

சென்னை : முதுநிலை மருத்துவ படிப்புகளில் இட ஒதுக்கீடு பெற்றவர்கள் பட்டியலை, மத்திய சுகாதார சேவை இயக்கம் இன்று(மார்ச் 28) வெளியிடுகிறது.

முதுநிலை மருத்துவ படிப்புகளில், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு, 50 சதவீத இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு ஆன்லைன் வாயிலான முதற்கட்ட கவுன்சிலிங் நேற்று நடந்தது. இதில், இட ஒதுக்கீடு பெற்றவர்களின் பட்டியல், www.mcc.nic.in என்ற இணைய தளத்தில், இன்று வெளியிடப்பட உள்ளது.

பட்டியலில் இடம் பெறுவோர், ஏப்., 3க்குள் கல்லுாரிகளில் சேர வேண்டும். இரண்டாம் கட்ட கவுன்சிலிங், ஏப்., 9, 10ம் தேதிகளில் நடத்தப்பட்டு, ஏப்., 11ல் முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.

No comments:

Post a Comment

NEWS TODAY 3.4.2025