Thursday, March 29, 2018

தவறு இருந்தால் கைது செய்யட்டும்'

Added : மார் 29, 2018 01:07

சென்னை: 'என் மீது தவறு இருந்தால், தாராளமாக கைது செய்யட்டும்' என, இளவரசி மகன், விவேக் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை: சிங்கப்பூரில் வசிக்கும், என் உடன்பிறந்த சகோதரி வழியாக, வெளிநாடுவாழ் இந்தியர் என்ற பிரிவில், முறையான சான்றிதழ்களை சமர்ப்பித்த பின், கல்லுாரியில் சேர்ந்தேன். இப்போதும், அது சம்பந்தமான சான்றிதழ்களை சமர்ப்பிக்க, தயாராக இருக்கிறேன்.மூத்த அமைச்சராக இருக்கும், ஜெயகுமார், இது குறித்த உண்மைகளை அறியாமல், என்னை கைது செய்யப் போவதாகவும் கூறியுள்ளார். என் மீது தவறு இருந்தால், தாராளமாக கைது செய்யட்டும். இவ்வாறு விவேக் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 14.01.2026