Friday, March 30, 2018

ஆடு மேய்ப்பவருக்கு வரித்துறை, 'நோட்டீஸ்'

Added : மார் 29, 2018 20:30

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில், ஆடு மேய்ப்பவருக்கு, வருமான வரி தாக்கல் செய்யும்படி, வருமான வரித் துறை சார்பில், 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.சத்தீஸ்கரில், முதல்வர், ரமண் சிங் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. வருமான வரி செலுத்தாத வர்த்தகர்களுக்கு, வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பி வருகிறது. இந்நிலையில், ராய்ப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் அவத்ராமுக்கு, வருமான வரி செலுத்தும்படி, நோட்டீஸ் வந்துள்ளது.இதுகுறித்து அவத்ராம் கூறியதாவது:விவசாய வேலை செய்தும், ஆடு மேய்த்தும், குடும்பத்தை நடத்தி வருகிறேன். இந்நிலையில், வருமான வரியை தாக்கல் செய்யும்படி, எனக்கு நோட்டீஸ் வந்துள்ளது. இதற்கு முன், வருமான வரி செலுத்தியதில்லை. இந்த நோட்டீசை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசில், 'நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு மேல் வருமானம் உள்ள அனைவரும், வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்; இல்லாவிட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, கூறப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment

NEWS TODAY 14.01.2026