Friday, July 20, 2018

யு.ஜி.சி., கலைப்பு கருத்துகேட்பு இன்று முடிவு

Added : ஜூலை 19, 2018 22:53

சென்னை, யு.ஜி.சி.,க்கு பதில், புதிதாக உயர் கல்வி கமிஷன் அமைப்பது குறித்து, பொது மக்களிடம் கருத்து பெறுவதற்கான அவகாசம், இன்றுடன் முடிகிறது.நாட்டில் உள்ள பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளை, மத்திய அரசின் யு.ஜி.சி., அமைப்பு கண்காணித்து வருகிறது. இந்நிலையில், யு.ஜி.சி.,யை கலைத்து விட்டு, புதிதாக உயர் கல்வி கமிஷன் அமைக்க உள்ளதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு, பலதரப்பில் எதிர்ப்புகள் உள்ளன. அதேநேரம், கல்வியாளர்கள், பொது மக்கள், தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என, மத்திய அரசு அறிவித்தது. இதற்கு, ஜூலை, 7 வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. பின், அவகாசம் நீட்டிக்கப்பட்டது. கூடுதல் அவகாசம் இன்றுடன் முடிகிறது.பொது மக்கள், தங்கள் கருத்துகளை, reformofugc@gmail.com என்ற, இ - மெயில்முகவரிக்கு தெரிவிக்கலாம்.

No comments:

Post a Comment

Annamalai University staff begin indefinite sit-in over pending dues

Annamalai University staff begin indefinite sit-in over pending dues The members also sought settlement of retirement benefits, including co...