Friday, July 13, 2018

உலக செய்திகள்

சுகாதார குறைபாடு: ஐக்கிய அரபு அமீரகத்தில் செயல்பட்டு வந்த இந்திய ஓட்டலை மூட உத்தரவு




சுகாதார குறைபாட்டுடன் இருந்ததாக கூறி ஐக்கிய அரபு அமீரகத்தில் செயல்பட்டு வந்த இந்திய ஓட்டலை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

பதிவு: ஜூலை 13, 2018 06:33 AM

துபாய்,

அபுதாபியில் உள்ள முக்கிய சாலையில் பிரபல இந்திய உணவகத்தில், அபு தாபி உணவு கட்டுப்பாட்டு ஆணைய அதிகாரிகள் சில மாதங்களுக்கு முன்பு ஆய்வு செய்தனர். அப்போது உணவகத்தில் சுகாதார குறைபாடுகள் இருப்பதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து நடவடிக்கை எதுவும் எடுக்காததால் நேற்று அந்த ஓட்டலுக்கு சென்ற அதிகாரிகள் உடனடியாக அந்த ஓட்டலை மூட உத்தரவிட்டனர்.



No comments:

Post a Comment

NEWS TODAY 28.01.2026