Saturday, July 28, 2018

பிரிட்டனில் வரலாறு காணாத வெப்ப அலை: ‘ஃபர்னெஸ் வெள்ளி’ என்று பெயர் சூட்டல்; இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Published : 27 Jul 2018 20:55 IST
   


படம். | ஏபி.

பிரிட்டனில் கடந்த சில தினங்களாக இருந்து வரும் வெப்ப அலை நிலைமை வெள்ளியன்று உச்சத்தைத் தொட்டுள்ளது.

ஜூலை மாதத்தில் வரலாற்றில் இல்லாத வகையில் பிரிட்டனில் 38.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளத். லண்டன் மற்றும் ஐரோப்பா இடையிலான யூரோஸ்டார் ரயில்கள் பெரிய தொந்தரவுகளுக்கு ஆளாகின. பாலம் உருகியதால் ரயில் போக்குவரத்து பாதிப்படைந்து செயிண்ட் பன்க்ராஸ் ரயில் நிலையத்தில் பயணிகள் நீண்ட வரிசையில் காத்துக் கிடந்தனர்.

ரயில்கள் குறைந்தது ஒரு மணி நேரமாவது தாமதமாகின. இங்கிலிஷ் கால்வாயை இணைக்கும் யூரோடனல் ஏ/சியில் பாதிப்படைந்ததால் பயணங்கள் பெரிதும் பாதிப்படைந்தன. ஆயிரக்கணக்கான யூரோடனல் ஷட்டில் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டன. பல காரேஜுகள் சேவையிலிருந்து நீக்கப்பட்டதால் பயணிகள் சுமார் ஐந்தரை மணி நேரம் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்க நேர்ந்தது.

லார்ட்ஸ் மைதானத்தில் அதன் ஊழியர்கள் மேல் ஜாக்கெட் இல்லாமல் வர எம்.சி.சி.வரலாற்றில் முதல் முறையாக அனுமதிக்கப்பட்டுள்ளது.

பல நாட்களாக உயர் வெப்பநிலைகளையடுத்து இன்று ‘பர்னெஸ் வெள்ளிக்கிழமை’ ஆகியுள்ளது.

ரத்த தானங்களும் இந்த வெயிலினால் முடங்கியுள்ளது, காரணம் தானம் செய்பவர்களில் பலருக்கு உடலில் நீராதாரம் குறைந்துவிட்டது.

ஆனால் இந்த வார இறுதியில் மழை, பலத்த காற்று எதிர்பார்க்கப்படுவதால் வெப்ப நிலை மாறும் என்று எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர் பிரிட்டன்வாசிகள்

1976-ம் ஆண்டுக்குப் பிறகு இந்த தொடர் வெப்ப அலை பிரிட்டனைத் தாக்கியுள்ளது. 30 டிகிரிக்கு மேல் வெயில் செல்லும் என்பதால் மக்கள் சூரிய ஒளியில் படவேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

வெப்ப அலையினால் தீப்பிடிக்க வாய்ப்பு அதிகமுள்ளதால் தீயணைப்பு வண்டிகள் ஆங்காங்கே உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

TAPS takes effect from Jan 1, 2026

TAPS takes effect from Jan 1, 2026  As per the G.O., TAPS will become operational after the notification of rules and completion of statutor...