Tuesday, May 9, 2017

வெளிநாட்டு மாணவர் 'அட்மிஷன்' : அண்ணா பல்கலை அறிவிப்பு

பதிவு செய்த நாள் 08 மே2017 23:43


சென்னை: அண்ணா பல்கலையில், வெளிநாட்டினருக்கான, இன்ஜி., மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டு உள்ளது. அண்ணா பல்கலை, இன்ஜி., கல்லுாரிகளில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மாணவர்களுக்கு தனித்தனியே, மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. வரும் கல்வி ஆண்டிற்கான, வெளிநாட்டு மாணவர்களுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 பி.இ., - பி.டெக்., மற்றும் எம்.எஸ்சி., ஐந்தாண்டு படிப்புகளுக்கு, வளைகுடா நாடுகளில் பணியாற்றுவோரின் குழந்தைகள், வெளிநாட்டில் வாழும் இந்தியர் மற்றும் வெளிநாட்டினர், ஜூன், 20 வரை, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
 வெளிநாட்டினருக்கு, ஜூன் 28; வளைகுடா நாடுகளில் பணியாற்றுவோரின் குழந்தைகள் மற்றும் வெளிநாட்டில் வாழ் இந்தியர்களுக்கு, ஜூன், 29லும், கவுன்சிலிங் நடக்கும்

எம்.இ..., - எம்.டெக்., மற்றும் எம்.எஸ்சி., இரண்டு ஆண்டு படிப்புகளுக்கு, ஜூலை, 20 வரை, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஜூலை, 28ல் கவுன்சிலிங் நடத்தப்படும். கூடுதல் விவரங்களை, https://www.annauniv.edu/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...