Tuesday, May 16, 2017

போதையில் பஸ் ஓட்டிய டிரைவர் : பாதியில் இறக்கி விட்ட பயணியர்

பதிவு செய்த நாள் 15 மே
2017
22:06

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில், போதையில் பஸ் ஓட்டிய டிரைவரை, பயணியர் பாதி வழியில் இறக்கி விட்டனர். போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தை அடுத்து, தற்காலிக டிரைவர்கள், அண்ணா தொழிற்சங்க டிரைவர்களை வைத்து, பஸ்களை இயக்கி வருகின்றனர்.

முந்தைய நாள் பணிக்கு பின், ஓய்வில் மது அருந்தி, போதையில் இருந்த டிரைவரை, ராமநாதபுரம் போக்குவரத்துக் கழக அதிகாரிகள், பணியில் ஈடுபடுத்தினர். ராமநாதபுரம் அரண்மனையில் இருந்து, 18 கி.மீ.,யில் உள்ள பாண்டியூர் கிராமத்திற்கு, நேற்று மதியம், 12:00 மணிக்கு சென்ற டவுன் பஸ்சை, போதையில் டிரைவர் கண்டபடி ஓட்டினார். இதை பார்த்த பயணியர், உயிர் பயத்தில் அலறினர். டிரைவர் போதையில் இருப்பதை அறிந்ததும், பயணியர் வலுக்கட்டாயமாக, பஸ்சை நிறுத்தி, டிரைவரை இறக்கி விட்டனர். வேறு டிரைவர் வரவழைக்கப்பட்டு, பஸ் இயக்கப்பட்டது. போதை டிரைவர், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

No comments:

Post a Comment

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள...

DINAMANI வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்...