Sunday, May 14, 2017

விருதுநகரில் இல்லை மருத்துவ கல்லூரி:பிளஸ்2 ல் முதலிடம் பெற்றும் புறக்கணிப்பு

பதிவு செய்த நாள் 14 மே2017 02:08

சிவகாசி:விருதுநகர் மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லுாரி நிறுவ வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கடந்த 1987ம் ஆண்டு பிரித்து புதிதாக உருவானதே விருதுநகர் மாவட்டம். கடந்த 30 கல்வி ஆண்டுகளில் கால்நுாற்றாண்டிற்கு மேலாக விருதுநகர் மாவட்டமே பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் முதல் இடத்தை தக்க வைத்து வகிறது.

ஒரு சில ஆண்டுகளில் மட்டுமே சற்றே சரிவை சந்தித்தாலும் 2 ம் அல்லது 3 ம் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. அரசு பள்ளிகளும் 100 சதவீத தேர்ச்சி பெற்று வருகிறது. இந்தாண்டும் முதல் இடத்தை தக்க வைத்துள்ளது.
கிடப்பில் திட்டம்

இத்தகையை சிறப்பு வாய்ந்த கல்விக்கு பெயர் பெற்ற மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் உயர் கல்வி நிறுவனங்களை ஏற்படுத்த முயற்சிக்க இல்லை. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2014 ம் ஆண்டு சட்டசபை விதி எண் 110 ன் கீழ் விருதுநகரில் அரசு மருத்துவ கல்லுாரி துவங்கப்படும் என அறிவித்தார். முந்தைய தி.மு.க., ஆட்சி காலத்தில் விருதுநகர் கலெக்டர் அலுவலகம் அருகே மருத்துவ கல்லுாரி அமைய இடம் தேர்வு செய்யும் பணி நடந்தது. ஆனால் திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த மாதம் தற்போதைய முதல்வர் பழனிசாமி விருதுநகரில் பல்மருத்துவ கல்லுாரி அமைய அரசாணை பிறப்பித்தார். இதன்படி இக்கல்வியாண்டில் விருதுநகரில் அரசு பல் மருத்துவ கல்லுாரி அமைய வாய்ப்பு உள்ளது. தனியார் பல் மருத்துவ கல்லுாரிகளில் அரசு ஒதுக் கீட்டு இடங்களில் கூட மாணவர்கள் விரும்பி சேர்வதில்லை.
பலன் தரும் மாவட்டம்

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு உருவான தேர்ச்சி விகிதத்தில் பின் தங்கிய திருவாரூர், தேனி, சிவகங்கை போன்ற மாவட்டங்களில் அரசு மருத்துவகல்லுாரிகள் துவங்கப்பட்டுள்ளன. தென் மாவட்டங்களில் வணிகம் மற்றும் உற்பத்தியில் தமிழக அரசிற்கு அதிக வருவாய் ஈட்டித்தருவது விருதுநகர் மாவட்டமே. இதுபோன்று அரசிற்கு பல்வேறு பலன் தரும் மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லுாரி அமைய வேண்டும் என, மாணவர்கள், ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இங்கு மருத்துவ கல்லுாரி துவங்கப்பட்டால் பட்டாசு ஆலைகளால் சூழ்ந்து இருக்கும் சிவகாசியில், அடிக்கடி நிகழும் வெடி விபத்தில் காயமடையும் தொழிலாளிகளை எளிதில் காப்பாற்ற முடியும். பெருமளவு உயிரிழப்பையும் தடுக்க முடியும்.

No comments:

Post a Comment

Employer Can't Alter Recorded D.O.B. Of Government Employee Beyond Prescribed 5-Year Period From Date Of Initial Appointment : Calcutta HC

Employer Can't Alter Recorded D.O.B. Of Government Employee Beyond  Prescribed 5-Year Period From Date Of Initial Appointment : Calcutta...