Saturday, May 13, 2017

பிளஸ்2 தேர்வில் அசத்திய 85 கைதிகள்!

 கார்த்திக்.சி

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ்2 தேர்வு முடிவு இன்று வெளியானது. சிறையில் இருந்து தேர்வு எழுதியவர்களில் 85 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், மார்ச் 1-ம் தேதி பிளஸ்2 வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்தத் தேர்வை எழுதியிருந்தனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று தேர்வு முடிவுகள் வெளியானது. இதில், இரு மாநிலங்களையும் சேர்த்து 92.1 சதவிகித மாணவ, மாணவிகள் தேர்ச்சிபெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டைவிட 0.7 சதவிகிதத் தேர்ச்சி அதிகரித்துள்ளது. மாணவர்களைவிட 5.2 சதவிகித மாணவிகள் தேர்ச்சிபெற்றுள்ளனர்.  94.5 சதவிகித மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 89.3 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிறைக்கைதிகள் 95 பேர் பிளஸ்2 தேர்வை எழுதினர். அதில், 85 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 18.12.2025