Saturday, May 13, 2017

ப்ளஸ் டூ விடைத்தாள் நகல் பெற விரும்புவர்கள் கவனத்துக்கு...! #PlusTwo
 வி.எஸ்.சரவணன்

மாணவர்கள் ஒரு வருடம் சிரமப்பட்டு படித்து, எழுதிய ப்ளஸ் டூ தேர்வின் முடிவைக் காணும் நாள் இன்று. சில மாணவர்கள் தாங்கள் எழுதிய விடைகள் மீது உறுதியான நம்பிக்கை கொண்டிருப்பர். ஒவ்வொரு தேர்வு முடியும் நாளின்போதும் அந்தத் தேர்வில் தான் எழுதிய விடைகளை, புத்தகத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து, இந்தத் தேர்வில் இத்தனை மதிப்பெண்கள் நிச்சயம் வரும் எனக் குறித்து வைத்திருப்பார்கள். ஆனால், தேர்வின் முடிவில் அந்த மதிப்பெண்களை விட சற்றுக் குறைவாக வந்திருக்கலாம். அதனால், அவர்கள் தங்கள் விடைத்தாள் நகல் பெறவோ மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க நினைப்பார்கள். அவர்களுக்கு உதவும் விதத்தில் அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு விடுத்துள்ளது.

எங்கு விண்ணப்பிப்பது: மாணவர்கள் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு தங்கள் பள்ளியின் வழியாக விண்ணபிக்கலாம். பள்ளியின் வழியே அல்லாமல் தனித்தேர்வு மூலம் எழுதியவர்கள் அவர்கள் தேர்வு எழுதிய மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

என்றைக்குக் கடைசி நாள்: விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு 12/05/2017 முதல் 15/05/2017 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இடையில் 14/05/2017 அன்று ஞாயிற்றுக்கிழமையாக இருப்பதால் அன்றைய தினம் விண்ணப்பிக்க முடியாது. கால அவகாசம் மூன்று நாள்கள்தான் இருக்கிறது. விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் ஒரு நாளைக்கூட தள்ளிப்போடக் கூடாது.

கவனிக்க வேண்டியவை: மாணவர்கள் தாங்கள் எந்தப் பிரிவில் விண்ணப்பிக்கப் போகிறோம் என்பதில் தெளிவு வேண்டும். ஏனெனில், விடைத்தாளின் நகலுக்கு விண்ணப்பித்தவர்கள் மட்டுமே மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும். மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு மறுமதிப்பீடு செய்ய இயலாது. அதேபோல விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிப்பவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க கூடாது.

விடைத்தாள் நகல் பெற்றவர்கள், அதன்பிறகு மறுமதிப்பீடு / மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்.

விடைத்தாள் நகல் பெற கட்டணம்:

மொழிப்பாடத்துக்கு (பகுதி 1) - ரூ. 550, மொழி (பகுதி 2 -ஆங்கிலம்) - ரூ. 550, மற்ற பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.275

மறுகூட்டலுக்கான கட்டணம்.

மொழி (பகுதி-1), மொழி (பகுதி-2), மற்றும் உயிரியல் ஒவ்வொன்றுக்கும்  - ரூ 305, மற்ற பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் - ரூ.205.

இந்தக் கட்டணத்தை விண்ணப்பிக்கும் பள்ளியிலேயே தொகையாகச் செலுத்த வேண்டும். அப்போது அவர்கள் தரும் சீட்டினை மாணவர் பத்திரமாக வைத்துகொள்ள வேண்டியது அவசியம். அந்த சீட்டில் கொடுக்கப்பட்டிருக்கும் எண்ணைக் கொண்டே உங்களின் விடைத்தாளின் நகலினை இணையதளம் மூலம் டவுன்லோட் செய்ய முடியும். அதேபோல மறுக்கூட்டலின் முடிவுகளைத் தெரிந்துகொள்ளவும் முடியும்.

விடைத்தாள் நகல் பெறுதல் அல்லது மறுகூட்டல் விண்ணப்பிப்பவர்கள் மேற்கூறியவற்றிலுள்ள வழிமுறைகளைப் பின்பற்றலாம். அதே சயமத்தில் தேர்வு முடிவுகளைப் பாஸிட்டிவாக எதிர்கொள்ளும் திறனை வளர்த்துள்ளவும் வேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 18.12.2025