Friday, May 26, 2017

நீட்' தேர்வை எதிர்க்கும் மனு: அவசரமாக விசாரிக்க மறுப்பு

பதிவு செய்த நாள்
மே 26,2017 01:44


புதுடில்லி: நாடு முழுவதும் உள்ள, மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லுாரிகளில் சேருவதற்காக, 'நீட்' எனப்படும், தேசிய பொது நுழைவுத் தேர்வு, கடந்த, 7ல் நடந்தது. நாடு முழுவதும், 1,900 மையங்களில், 11 லட்சம் பேர், இந்தத் தேர்வை எழுதினர்.

'பீஹாரில், இந்த நுழைவுத் தேர்வுக்கான கேள்வித்தாள் முன்னதாகவே வெளியானது; அது, ராஜஸ்தான், மேற்கு வங்கத்திலும் கிடைத்தது. அதனால், இந்த நுழைவுத் தேர்வை ரத்து செய்துவிட்டு, மீண்டும் நுழைவுத் தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. 'இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்' என, வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதை விசாரித்த, நீதிபதிகள், நாகேஸ்வர ராவ், நவின் சின்ஹா அடங்கிய, சுப்ரீம் கோர்ட்டின் கோடைக்கால அமர்வு, நேற்று கூறியதாவது: 'நீட்' தேர்வில், ஆங்கிலம் மற்றும் தமிழில் கேட்கப்பட்ட கேள்விகளில், வேறுபாடுகள் இருந்ததாக தொடரப்பட்ட வழக்கில், 'நீட்' தேர்வு முடிவை வெளியிடுவதற்கு, சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.

காரணங்கள் எதுவாக இருந்தாலும், நுழைவுத் தேர்வு முடிவுகளை வெளியிட, தற்போது இடைக்கால தடை உள்ளது. அதனால், இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை.இவ்வாறு சுப்ரீம் கோர்ட் அமர்வு கூறியுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2025