Wednesday, May 10, 2017

இன்று வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்
சித்ரா பவுர்ணமியான இன்று, மதுரை வைகை ஆற்றில், காலை, 6:15க்கு மேல், 7:00 மணிக்குள், கள்ளழகர் இறங்குகிறார்.

வைகை ஆற்றில், வையாழி ஆனவுடன், வீரராகவ பெருமாளுக்கு, மாலை சாற்றுதல் நடக்கிறது.

பின், அங்கிருந்து புறப்படும் கள்ளழகர், மதியம், 12:00 மணிக்கு, ராமராயர் மண்டபத்திலும், இரவு, 11:00 மணிக்கு, வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோவிலிலும் எழுந்தருள்கிறார்.

நாளை காலை, 9:00 மணிக்கு, வண்டியூர் கோவிலில் இருந்து, சேஷ வாகனத்தில் புறப்பாடாகி, தேனுார் மண்டபத்திற்கு காலை, 11:00 மணிக்கு எழுந்தருள்கிறார். அங்கு திருமஞ்சனமாகிய பின், கருட வாகனத்தில் எழுந்தருளி, மண்டூக முனிவருக்கு சாபம் தீர்த்து அருள்பாலிக்கிறார்.

No comments:

Post a Comment

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...