Monday, May 1, 2017

இன்ஜி., கவுன்சிலிங் ஆன்லைன் பதிவு இன்று துவக்கம்


பதிவு செய்த நாள் 01 மே
2017

00:33 இன்ஜினியரிங் கல்லுாரிகளின், மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, இன்று துவங்குகிறது.

அண்ணா பல்கலை இணைப்பில், 550க்கும் மேற்பட்ட இன்ஜி., மற்றும் ஆர்க்கிடெக்ட் கல்லுாரிகள் செயல்படுகின்றன.இவற்றில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, தமிழக அரசு சார்பில், அண்ணா பல்கலையில் நடத்தப்படும், ஒற்றைசாளர கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும்.
வரும் கல்வி ஆண்டுக்கான கவுன்சிலிங், ஜூன், 27ல், துவங்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதில், பங்கேற்க விரும்புவோர், இன்று முதல் அண்ணா பல்கலையின், https://www.annauniv.edu என்ற இணையதளத்தில், விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும். மே, 31 வரை விண்ணப்பிக்கலாம்.இதற்கான அறிவிக்கை மற்றும் விதிகள், நேற்று வெளியிடப்பட்டன.

ஆன்லைன் வழியே, விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும். விண்ணப்பம் பதிவு செய்தோர், அதன் பிரதியை நகல் எடுத்து, செயலர், தமிழ்நாடு இன்ஜி., கவுன்சிலிங் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.கூடுதல் விபரங்களை, அண்ணா பல்கலை இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Three-Day Absence During COVID Lockdown Not Justification For Compulsory Retirement; Kerala HC Reinstates Railway Employee With Full Benefits

Three-Day Absence During COVID Lockdown Not Justification For Compulsory Retirement; Kerala HC Reinstates Railway Employee With Full Benefit...