வறண்டு காட்சியளிக்கும் கும்பகோணம் மகாமக குளம்..!

உலக பிரசித்தி பெற்றது கும்பகோணம் மகாமக திருவிழா. அத்திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சி மகாமக குள புனித நீராடல். மகாமக குளத்தில் நீராடுவதை பக்தர்கள் பெரும் புண்ணியமாக கருதுவார்கள். ஆனால், அடிக்கும் வெயிலுக்கு இச்சிறப்பு வாய்ந்த குளமும் தப்பிக்கவில்லை. பல லட்சம் பக்தர்கள் புனித நீராடிய மகாமக குளம் தற்போது வறண்டுபோய் தண்ணீரின்றி காட்சி அளிக்கிறது. இதனால் வெளியூர்களிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் குளத்தில் தண்ணீர் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.
இந்திய அளவில் மூன்று முக்கியமான தீர்த்தங்கள் என காசி, ராமேஸ்வரம், கும்பகோண மகாமக தீர்த்தங்களைத்தான் சொல்வார்கள். இந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த மகாமக ளம் வறண்டுள்ளது. குளத்தின் ஒட்டுமொத்த பரப்பளவு 4.96 ஏக்கர். ஆழம் 22 அடி. இந்தக் குளத்துக்கு அரசலாற்றில் இருந்துதான் தண்ணீர் வந்துகொண்டு இருந்தது. இதன் நீர்வழிப் பாதை ஆக்கிரமிப்புகளால் தடைபட்டதும், நகராட்சியின் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் இருந்து மகாமக குளத்துக்குத் தண்ணீர்விட்டனர். தற்போது, அதுவும் நிறுத்தப்பட்டு குளம் வறண்டு காட்சியளிக்கிறது.
No comments:
Post a Comment