Sunday, May 14, 2017

முதுநிலை மருத்துவம்: நிர்வாக ஒதுக்கீட்டுக்கான தகுதிப்பட்டியல் வெளியீடு

முதுநிலை மருத்துவப் படிப்புகளில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான தகுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு மே 8 முதல் 11-ஆம் தேதி வரை நடைபெற்றது. 756 முதுநிலை மருத்துவ இடங்கள் மற்றும் 19 முதுநிலை பல் மருத்துவ இடங்களுக்கு நடைபெற்ற கலந்தாய்வின் முடிவில் 38 காலியிடங்கள் ஏற்பட்டன. தனியார் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் நிர்வாக ஒதுக்கீட்டுக்கும் மாநில அரசே கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து அதற்கான பணிகளையும் மருத்துவக் கல்வி தேர்வுக்குழு கவனித்து வருகிறது.

இந்நிலையில், தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கான நிர்வாக ஒதுக்கீட்டுக்கான தகுதிப் பட்டியல் சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. 8 தனியார் கல்லூரிகளுக்கு 2,680 பேர் கொண்ட பட்டியலும், 8 நிகர்நிலைப் பல்கலைக்கழக இடங்களுக்கு 4,107 பேர் கொண்ட தகுதிப்பட்டியல் சுகாதாரத் துறையின் www.tnhealth.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு குறித்த அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Dailyhunt

related stories

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...