Tuesday, May 16, 2017

என் வீட்டுக்காரருக்கு சாப்பாடு போடாதீங்க: மலிவு விலை உணவகத்தில் மனைவி புகார்

:பிண்டி: 'ஏழை மக்களுக்காக துவக்கப்பட்ட, அரசின் மலிவு விலை உணவகத்தில், அரசு ஊழியரான என் கணவருக்கு உணவு அளிக்க வேண்டாம்' என, மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பெண், புகார் அளித்துள்ளார்.

ம.பி., மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஏழை மக்கள் வயிறார உணவருந்தும் வகையில், தீன்தயாள் உணவகம் திறக்கப்பட்டது. இங்கு, முழு சாப்பாடு, ஐந்து ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. அதில், சப்பாத்தி, பருப்பு, சாதம், காய்கறி கூட்டு, சாம்பார் போன்றவையும் உண்டு.

தனியார் நிறுவனம் இந்த உணவகத்தை நிர்வகித்து வருகிறது. பிண்டி மாவட்டம், நிராலா ரங் விஹாரில் துவக்கப்பட்ட மலிவு விலை உணவகத்துக்கு வந்த ஒரு பெண், ஒரு கடிதத்தை, அதன் நிர்வாகியிடம் கொடுத்தார்.

அதில், அவர் எழுதியிருந்ததாவது: என் கணவர் மின்சார வாரியத்தில் பணியாற்றுகிறார்; மாதச் சம்பளம், 55 ஆயிரம் ரூபாய். சமீபகாலமாக, நான் கொடுத்து அனுப்பும் மதிய உணவு, அப்படியே திரும்பி வருகிறது. விசாரித்தபோது, என் கணவர், இந்த மலிவு விலை உணவகத்தில், மதிய உணவு சாப்பிடுவது தெரியவந்தது.

ஏழை மக்களுக்காக துவக்கப்பட்ட இந்த உணவகத்தில், என் கணவர் போன்ற அதிக வருமானம் உள்ளவர்களுக்கு, தயவு செய்து உணவு அளிக்க வேண்டாம். அதிக வருமானம் உள்ளவர்கள் சாப்பிடுவதால், ஏழைகளுக்கு உணவு கிடைக்காமல் போய் விடும்.இவ்வாறு அந்த கடிதத்தில், அவர் எழுதியிருந்தார். இந்த சம்பவம், மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள...

DINAMANI வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்...