Sunday, May 14, 2017

தள்ளுபடி?
சுப்ரீம் கோர்ட்டில் சசி தாக்கல்
செய்த மறு ஆய்வு மனு

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள, சசிகலா, தனக்கு விதிக்கப்பட்டுள்ள தண்ட னையை மறு ஆய்வு செய்யும் படி, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனு, தள்ளுபடி ஆகும் என கூறப்படுகிறது. ஏனெனில், தீர்ப்பில் எந்த குறையும் இல்லை என்பதால், மனுவை நீதிபதிகள் விசாரிக்க வாய்ப்பு இல்லை என, சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இந்த விவகாரத்தில், 27ம் தேதிக்குள் முடிவு தெரியும் என, அவர்கள் நம்புகின்றனர்.



சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில், சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு, நான்கு ஆண்டு சிறை தண்டனை, தலா, 10 கோடி ரூபாய் அபராதத்தை உறுதி செய்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வராய் அடங்கிய, 'பெஞ்ச்' 2017 பிப்., 14ல் தீர்ப்பளித்தது.

இந்த உத்தரவுக்கு பின், சசிகலா உள்ளிட்ட மூவரும், பெங்களூரு, பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். உச்ச நீதிமன்ற தீர்ப்பால், முதல்வராகும் சசிகலா வின் கனவு, தவிடு பொடியானது.உச்ச நீதி மன்ற உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி, தீர்ப்பு வழங்கிய ஒரு மாதத்துக்குள், மனு தாக்கல் செய்ய வேண்டும்.

அதன் படி, ஜெயலலிதாவுக்கு எதிரான மேல்

முறையீட்டை விலக்கியதை எதிர்த்தும், 100 கோடி ரூபாய் அபராதத்தை வசூலிக்கவும் கோரி, கர்நாடக அரசு, மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது.

அந்த மனுவை, நீதிபதிகள் பி.சி.கோஷ், அமித்வராய் அடங்கிய, 'பெஞ்ச்' தள்ளுபடி செய்து விட்டது. தங்கள் உத்தரவில் மாற்றம் செய்ய முடியாது என, அறிவித்து விட்டது.

அதைத்தொடர்ந்து, மறு ஆய்வு மனுவை, சசிகலா தாக்கல் செய்த தகவல், சமீபத்தில் வெளியாகி உள்ளது. இம்மனுவும், விரைவில் விசாரணைக்கு எடுக்கப்படும். ஏனென்றால், தீர்ப்பளித்த நீதிபதி களில் ஒருவரான பி.சி.கோஷ், 27ல் ஓய்வு பெறுகிறார்.

எனவே, அவர் ஓய்வு பெறுவதற்கு முன், மறு ஆய்வு மனு மீதான விசாரணை முடிந்து விடும் என, எதிர் பார்க்கப்படுகிறது. மறு ஆய்வு மனுவைப் பொறுத்த வரை, நீதிமன்றத்தில் விசாரணை நடக்காது. நீதிபதி களின் அறைகளில், மனுவை பரிசீலித்து, உத்தரவு பிறப்பிக்கப்படும்.

பெரும்பாலும், மறு ஆய்வு மனுக்கள் தள்ளுபடி ஆகி விடும். தீர்ப்பில் வெளிப்படையாக தவறுகள் தெரிந் தால் மட்டுமே, மறு ஆய்வு மனு விசாரணைக்கு ஏற்கப்படும். ஏற்கனவே, கர்நாடக அரசின் மனு தள்ளுபடியாகி உள்ளதால், சசியின் மனுவும் தள்ளுபடியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர், ஆதி.குமரகுரு கூறியதாவது:

ஒருஉத்தரவை மறுபடியும் ஆய்வு செய்ய வேண் டும் என்றால், பெரிய அளவில் அநீதி இழைக்கப் பட்டிருக்க வேண்டும் அல்லது நடைமுறையில் மிகப்பெரிய குறைபாடு இருந்திருக்க வேண்டும். கிரிமினல் வழக்குகளில், பெரும்பாலும் மறு ஆய்வுக்கு வாய்ப்பில்லை. ஏனென் றால்,

கீழ் நீதிமன்றத் தில் இருந்து, ஒவ்வொரு கட்டத்தையும் தாண்டி, வழக்கு விசாரணை வருவதால், அனைத்து விபரங்களும் தெரிந்து விடும். தவறு ஏற்பட, பெரும்பாலும் வாய்ப்பில்லை. 'ரிட்' வழக்கு என்றால், சந்தர்ப்ப சூழ்நிலை களில் மாற்றம் எப்போதும் நிகழலாம் என்ப தால், மறு ஆய்வு கோர முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

வழக்கறிஞர், சி.ராஜசேகரன் கூறும் போது, ''மறு ஆய்வு மனுவில், புதிதாக எந்த முகாந் திரங்களையும் எழுப்ப முடியாது. பொதுவாக, மறு ஆய்வு மனுவை, நீதிபதிகள் ஏற்பது என்பது அரிதானது. சட்ட ரீதியான இறுதி கட்ட மனுவாக கருதப்படும், 'கியூரேட்டிவ்' மனுவை தாக்கல் செய்ய முடியும்,'' என்றார்.

வழக்கறிஞர், ஏ.பி.சூரியபிரகாசம் கூறும் போது, ''மறு ஆய்வு மனு மீது, வழக்கறிஞர்கள் ஆஜராகி, வாதங்களை எடுத்து வைக்க முடி யாது; மறு ஆய்வு மனுவை ஏற்பது, அபூர்வ மாக நடக்கும் விஷயம். ''நீதிபதிகளின் அறை களிலேயே, முடிவு தெரிந்து விடும். இந்த வழக் கில், மறு ஆய்வுக்கு பெரிய அளவில் முகாந்தி ரம் இருப்பதாக, எனக்கு தெரியவில்லை,'' என்றார். - நமது நிருபர் -

No comments:

Post a Comment

Madras HC relief for SC medico denied government quota

Madras HC relief for SC medico denied government quota Affirmative action is not exception or bounty, but is constitutional right of student...