மதுரை காமராஜர் பல்கலை.யில் 4100 பேருக்கு தபாலில் பட்டம் வழங்கல்
By DIN | Published on : 23rd May 2017 03:50 AM |
மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் 2 ஆண்டுகளாக பட்டமளிப்பு விழா நடைபெறாத நிலையில், 4100 பேருக்கு தபால் மூலம் பட்டம் வழங்கப்பட்டு வருகிறது.
இப்பல்கலைக் கழகத்தில் துணைவேந்தராக இருந்த கல்யாணிமதிவாணன் கடந்த 2015 ஏப்ரலில் பணிநிறைவு பெற்றுச் சென்றார். அதன்பின் தற்போது வரை துணைவேந்தர் நியமிக்கப்பட வில்லை. இதனால், உயர்கல்வித்துறைச் செயலர் தலைமையில் பல்கலைக் கழக நிர்வாகக் குழு செயல்பட்டது. கடந்த 2014-15 பட்டமளிப்பு விழா நடந்தாலும், துணைவேந்தர் கையெழுத்தின்றி பட்ட சான்றை வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. காமராஜர் பல்கலைக் கழகம், அதன் உறுப்புக் கல்லூரிகள், தொலைநிலைக் கல்வி மற்றும் பல்கலைக் கழக அங்கீகாரம் பெற்ற தனியார், உதவி பெறும் கல்லூரிகளிலும் பட்டம் வழங்க முடியாத நிலை உள்ளது. பட்டம் பெறாமல் ஆயிரக்கணக்கானோர் உயர் கல்வி, ஆய்வுகள், வேலை வாய்ப்பு என எதற்கும் விண்ணக்க முடியாத நிலையில் அவதியடைந்தனர்.
இதனிடையே பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவை, உயர்கல்வித்துறை செயலர் முன்னிலையில் நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது. நீதிமன்ற உத்தரவை அடுத்து இப்பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவை ஜூனில் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அதே நேரத்தில் கடந்த 2014-15, 2015-16 ஏப்ரல் வரையிலான பட்டங்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பல்கலைக் கழகத்துக்கு துணைவேந்தர் இல்லாத நிலையில், அவரது கையெழுத்துக்குப் பதிலாக உயர்கல்வித்துறை முதன்மைச் செயலர் சுனில்பாலிவால் கையெழுத்துடன் பட்டங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் மற்றும் கல்லூரிகளில் பயின்ற 4,100 பேருக்கு பட்டம் வழங்க வேண்டியிருந்த நிலையில், தற்போது உயர்கல்வித்துறை முதன்மைச் செயலர் கையெழுத்துடன் பட்டச் சான்றுகள், தேர்வாணையர் மூலம் சம்பந்தப்பட்டோருக்கு தபாலில் அனுப்பி வைக்கப்படுகின்றன.
இதுகுறித்து பல்கலைக் கழக தேர்வாணையர் பேராசிரியர் கே.முத்துச்செழியனிடம் கேட்ட போது, உயர்கல்வித்துறை செயலர் சுனில்பாலிவால் கையெழுத்துடன் கூடிய 2015 ஏப்ரல் வரையிலான பட்டச் சான்றுகள் சம்பந்தப்பட்டோருக்கு தபாலில் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
இதுவரை 3 ஆயிரம் பேருக்கும் மேல் சான்றுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றார்.

No comments:
Post a Comment