சென்னையின் முதல் சுரங்கப் பாதை மெட்ரோ ரயில் சேவை, நாளை முதல் தொடங்குகிறது.
சென்னையில்
கோயம்பேட்டில் இருந்து பரங்கிமலை வரையும், சின்னமலை முதல் விமான நிலையம்
வரையிலான மெட்ரோ ரயில் சேவை ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,
திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரையிலான சுரங்கவழி மெட்ரோ ரயில் சேவை நாளை
தொடங்குகிறது.
சுமார் எட்டு கி.மீ தொலைவுக்கு இந்த சுரங்க
ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு மெட்ரோ கட்டுப்பாட்டு அறையில்
இருந்து, இந்த ரயில் சேவை இயக்கப்பட உள்ளது.
இதற்கிடையே, நாளை
தொடங்க உள்ள சென்னை திருமங்கலம்- நேரு பூங்கா வரையிலான சுரங்க மெட்ரோ
ரயிலில், செல்போன் சிக்னல் கிடைக்காது என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து,
மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் திட்ட இயக்குநர் ராஜீவ் ப்ரீவீதி
செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "சுரங்கப்பாதையில்
ரயிலை இயக்க அதிகசெலவாகும் என்பதால், கட்டணம் குறையாது. இந்தாண்டு
இறுதிக்குள், சென்ட்ரல் வரையிலான, மெட்ரோ சேவை தொடங்கப்படும்.
மெட்ரோ சுரங்கப்பாதையில் செல்போன் சிக்னல் வசதியை சரிசெய்ய, இன்னும்
இரண்டு மாதங்கள் ஆகும். குறிப்பாக, சிக்னல் வசதியை மேம்படுத்த ஒப்பந்தம்
கோரப்பட்டுள்ளது. சென்னையில், அடுத்தாண்டு முழு மெட்ரோ ரயில் சேவையும்
பயன்பாட்டுக்கு வரும்" என்றார்.
No comments:
Post a Comment