Thursday, May 25, 2017

தென்னிந்தியாவின் காஷ்மீர் மூணாறில் இது பீக் சீஸன்... வெயிலுக்கு இதமாக சில்லுன்னு ஒரு ட்ரிப் போகலாமே!
By கார்த்திகா வாசுதேவன் | Published on : 23rd May 2017 08:22 AM |




கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பசுமைப் போர்வை போர்த்திய கடவுளின் தேசமான மூணாறில் மக்கள் தொகையைக் காட்டிலும் ரிஸார்ட்டுகள் எனப்படும் உல்லாச விடுதிகள் தான் அதிகமிருக்கும் என்று தோன்றுகிறது. ஊருக்கு வெளியே பத்துப் பதினைந்து கிலோமீட்டரில் இருந்தே ஆரம்பித்து விடுகின்றன ரிஸார்ட்டுகளுக்கு வழிகாட்டக் கூடிய குறியீட்டுக் கம்பங்கள். இந்த முறை கோடை விடுமுறையைக் கழிக்கச் சென்று அங்கே தங்கிய நாட்களை சொர்க்கம் என்றால் தவறில்லை. சென்னை திரும்பி மூன்று நாட்கள் கடந்த பின்னும், இன்னும் நுரையீரல் முதல் கதகதப்பான உள்ளங்கால் வரையிலும் மிச்சமிருக்கிறது பசுந்தேயிலை வாசம் மணக்கும் மூணாறின் சில்லென்ற காற்றின் ஸ்பரிசம்.

இந்த மலைச் சிறு நகரில் திடீர் திடீரென கிளைமேட் மாறி விடுவது அதன் அதிசயத் தக்க அம்சம். நாங்கள் தங்கியிருந்த நாட்களில் இளவெயிலும் மென் மழைத் தூறலுமாக அந்த மலைநகர் மாயாஜாலம் காட்டாத குறை! சென்னையின் அக்னி நட்சத்திரக் கொடுமையில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தவர்களின் மனக்கிலேசத்தை இதை விடப் பொருத்தமாக வேறு எப்படிக் கூறுவது?!

சென்னை - மூணாறு செல்லும் வழித்தடங்கள்:



சென்னையிலிருந்து மூணாறு செல்ல இரண்டு மார்க்கங்கள் உள்ளன. ஒன்று உடுமலைப்பேட்டை மார்க்கம் மற்றொன்று தேனி வழியாக போடி மார்க்கம். நாங்கள் சென்னையிலிருந்து கிளம்பும் போது கோயம்பத்தூர் மார்க்கமாகவும் மூணாறில் இருந்து திரும்பும் போது தேனி மார்க்கமாகவும் பயணித்தோம். ஏனெனில் அப்போது தான் மூணாறில் காண வேண்டிய இடங்களில் பெரும்பாலானவற்றை நம் பயண நேரத்தின் இடையிலும் கூட கவர் செய்து கொள்ள முடியும். மித வேகத்தில் விரையும் வாகனங்களில் செளகரியமாக அமர்ந்து கொண்டு திடீர், திடீரெனக் குறுக்கிடும் பசும் மலைச்சரிவுகள் வரும் போதெல்லாம் ஜன்னலோர இருக்கையில் உள்ளம் அதிர ஜிலீரென உணரும் திரில் இருக்கிறதே அது மலைப்பயணங்களைத் தவிர வேறெதிலும் வாய்ப்பதில்லை. ஆகவே மலைகளில் பயணிக்க கார், வேன்களை விடவும் பேருந்தும், திறந்தவெளி ஜூப்பும் தான் உகந்தது என்பேன் நான்.

மூன்று நாட்களாவது தேவை மூணாறு முழுவதும் சுற்றிப் பார்க்க!



மலை ஏறும் பொழுதை விட இறங்கும் போது தான் மலைக்காட்சிகளின் எழில் வெகு ரம்மியமாக இருந்தது.

மூணாறு செல்ல நினைப்பவர்களுக்கு பொதுவாக முதலில் தோன்றும் ஒரு எண்ணம்; தேயிலை எஸ்டேட்டுகளைத் தாண்டி அங்கே அப்படி என்ன இருக்கிறது? என்பதாகவே இருக்கும்... எங்களுக்கும் அப்படித் தான் இருந்தது. ஆனால் அங்கே சென்ற பிறகு தான் தெரிந்தது. முழுதாக மூணாறைச் சுற்றிப் பார்த்து கண் கொள்ளாமல் அதன் அழகை நிரப்பிக் கொள்ள வேண்டுமெனில் குறைந்த பட்சம் 5 நாட்களாவது தேவை என்பது! நின்று நிதானித்து ரசித்து மகிழ அங்கே நிறைய இடங்கள் உண்டு. நாம் தேர்ந்தெடுக்கும் ரிஸார்ட்டுகளிலேயே மூணாறில் பார்க்க வேண்டிய இடங்கள் குறித்த டிராவல் கைடு தந்து விடுகிறார்கள். மொத்தத்தையும் கவர் செய்ய 5 நாட்களாகும். குறைந்த பட்சம் மூன்று நாட்களேனும் இருந்தால் தவற விடக் கூடாத முக்கியமான இடங்களையாவது கவர் செய்து விடலாம். அப்படி நாங்கள் கண்ட இடங்கள்;

மூணாறில் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்கள்:



1. இறவிக்குளம் நேஷனல் பார்க்: தமிழ்நாடு அரசின் தேசிய விலங்கான வரையாடுகளை இங்கு காணலாம், தென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரமான ஆனைமுடி மலைச்சிகரம் இங்கு உள்ளது)



2. மாட்டுப்பட்டி டேம்: ஹட்ஸன் தயிர் விளம்பரத்தில் மேயும் ஜெர்ஸி ரகப் பசுக்களைக் காண வேண்டுமெனில் நாம் மாட்டுப்பட்டி பண்ணைக்குச் செல்லலாம். பண்ணை தவிர இங்கே அணை ஒன்றும் உண்டு அதை மாட்டுப்பட்டி டேம் என்கிறார்கள். இந்த டேமில் படிகளைக் கொஞ்சம் செப்பனிடலாம். இப்போதிருக்கும் சிதிலமடைந்த படிகள் சற்று வயதானவர்கள் இறங்கிச் சென்று காண வசதியாக இல்லை. தடுமாறி விழுந்தால் நிச்சயம் பற்கள் மட்டுமல்ல எலும்புகளும் உடையும் வாய்ப்பு உண்டு. அந்த வசதிக் குறைவைத் தாண்டியும் ஏரியின் அழகு உளமயக்கம் தருகிறது. சித்திரத்தில் உறையும் ஏரி போல அத்தனை நிசப்தமான ஏரி இது. அங்கே நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளலாம்.


No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2025