Thursday, May 25, 2017

ஸ்ரீவி., ராஜபாளையத்தில் மழை

பதிவு செய்த நாள்24மே2017 23:57

ஸ்ரீவில்லிபுத்துார், ஸ்ரீவில்லிபுத்துார் மற்றும் ராஜபாளையத்தில் நேற்று மாலை 6:00 மணி முதல் இடி, மின்னலுடன் 50 நிமிடத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது. கடந்த சில நாட்களாக காலையில் வெயில் அதிகமாக இருந்தாலும், மாலையில் வெப்பம் தணிந்து காணப்படுகிறது. 

கடந்த 2 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் லேசான சாரல் மழை பெய்ததால், பேயானாற்று படுகையில் நீர்வரத்து காணப்பட்டது. ஆனால், வாட்ஸ் ஆப்பில் அதிகளவில் தண்ணீர் செல்வது போல் ஒரு வீடியோ வைரலாக பரவியது. இதை வனப்பகுதியில் வசிப்பவர்கள் மறுத்துள்ளனர்.
நேற்று மாலை பெய்த மழையால் குளிர்ந்த வானிலை காணப்பட்டது மக்களுக்கு சற்று ஆறுதலை தந்தது.ராஜபாளையத்தில் வாறுகால் அடைப்பட்டதால் கழிவு நீருடன் மழை நீரும் பெருக்கெடுத்து ஓடியது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2025