Tuesday, May 23, 2017

Posted Date : 05:50 (23/05/2017)
Last updated : 07:29 (23/05/2017)

vikatan news

விரைவில் தமிழக அரசு ஊழியர்களுக்கு, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம்!



MUTHUKRISHNAN S

மத்திய அரசின் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளைத் தமிழகத்தில் அமல்படுத்துவதற்கான பணிகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதன் அடிப்படையில், `ஊதியக் குழு ஊதிய மாற்றம் - ஊதியக் குழு அறிக்கைக்கு முன் ஊதிய மாற்றம்செய்தல் தொடர்பான பரிசீலனைக்குத் தமிழக அரசு அனைத்துத் துறைகளிலிருந்தும் விவரம் கோரியுள்ளது.

அதாவது, 'அரசுத் துறைகளில் 01.05.2017 அன்று பணியாற்றுவோர் விவரம், அவர்களின் ஊதிய விவரம், காலிப்பணியிட விவரம், 2017 முதல் 2022 ஆம் ஆண்டு வரை ஓய்வுபெறுவோர் விவரம், தர ஊதிய அடிப்படையில் வெவ்வேறு நிலைகளில் வீட்டு வாடகை படிபெறுவோர் விவரம்' ஆகியவற்றையும் 30.6.2017-க்குள் கோரியுள்ளது. இந்தத் தகவல் கிடைத்த பிறகு, மத்திய அரசு அறிவித்த ஏழாவது ஊதியக்குழுவுக்கு இணையான சம்பளம் தமிழக அரசு ஊழியர்களுக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2025