Thursday, March 1, 2018

ஏப்ரல்-15 ம் தேதியுடன் ஏர்செல் நெட்வொர்க்கை மூட உள்ளதாக டிராய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

By DIN | Published on : 28th February 2018 10:06 PM

மும்பை: ஏப்ரல்-15 ம் தேதியுடன் ஏர்செல் நெட்வொர்க்கை மூட உள்ளதாக டிராய் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் MNP மூலம் வேறு நெட்வொர்க்கிற்கு மாற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த வாரம் இந்தியா முழுக்க ஏர்செல் சிக்னல் வழங்கிய 8 ஆயிரம் டவர்கள் வரை தற்போது செயல் இழந்து இருந்தது. முக்கியமாக தென்னிந்தியாவில் அனைத்து டவர்களும் செயல் இழந்து உள்ளது. அவர்களின் இணையதளமும் செயலிழந்துள்ளது.

இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் டவர் மீண்டும் செயல்பட தொடங்கியது. மேலும் இன்னும் 15 வருடங்களுக்கு கண்டிப்பாக செயல்படும் என்றும் அதிகாரிகள் கூறியிருந்தனர். இதனால் ஏர்செல் வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்தனர்.

டவர் நிறுவனத்துடன் பிரச்சனை ஏற்பட்டு இருப்பதால் மீண்டும் செயல்படாது என்று கூறப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் ஏப்ரல்-15 ம் தேதியுடன் ஏர்செல் நெட்வொர்க்கை மூட உள்ளதாக டிராய் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 7.4.2025