Sunday, March 18, 2018

முதுநிலை மருத்துவ படிப்பு: 25ல் கவுன்சிலிங் துவக்கம்

Added : மார் 18, 2018 02:00

சென்னை, முதுநிலை மருத்துவப் படிப்புக்கான, அகிலஇந்திய மருத்துவகவுன்சிலிங், வரும், 25ல் துவங்குகிறது.அரசு மருத்துவக் கல்லூரி களில் உள்ள, எம்.டி., - எம்.எஸ்., - எம்.டி.எஸ்., போன்ற, முதுநிலைமருத்துவப் படிப்புகளில், 50 சதவீத இடங்கள், அகில இந்திய கவுன்சிலிங்குக்கு செல்கின்றன.

இதற்கான கவுன்சிலிங்கையும், நிகர்நிலை பல்கலை மற்றும் மத்திய பல்கலையில் உள்ள இடங்களுக்கான கவுன்சிலிங்கையும், மத்தியசுகாதாரத் துறையின், சுகாதார சேவைகள் இயக்ககம்நடத்துகிறது.இவற்றுக்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, நேற்று துவங்கியது;வரும், 24ம் தேதி வரை, ட்ஞிஞி.ணடிஞி.டிண என்ற, இணையதளத்தில் பதிவுசெய்யலாம்.முதற்கட்ட கவுன்சிலிங்,'ஆன்லைன்' முறையில், 25, 26ம் தேதிகளில்நடைபெற உள்ளது.இதற்கான முடிவுகள், 27ல் வெளியிடப்படும்.இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கிற்கான ஆன்லைன் பதிவு, ஏப்., 6 முதல், 8ம் தேதி வரை நடைபெறும்; கவுன்சிலிங், ஏப்., 9, 10ம் தேதிகளில் நடக்கிறது.இடம் கிடைக்கப்ப பெற்றவர்கள் குறித்தவிபரம், ஏப்., 11ல்வெளியிடப்படும்.அகில இந்தியஒதுக்கீட்டில் நிரம்பாத இடங்கள், அந்தந்த மாநிலஅரசுகளிடம், ஏப்ரல், 22ல்ஒப்படைக்கப்படும்.நிகர்நிலை பல்கலைகளுக்கான இறுதி கட்ட கவுன்சிலிங், மே, 1516ம் தேதிகளில் நடைபெறும். அதில், மீதமுள்ள இடங்கள், அந்தந்த மருத்துவ பல்கலை நிர்வாகத்திடம், மே, 26ல்ஒப்படைக்கப்படும்.


No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...