Thursday, March 1, 2018

மருத்துவக் கல்வி இயக்குனர் நியமனம் : வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்

Added : மார் 01, 2018 01:30

மதுரை: மருத்துவக் கல்வி இயக்குனர் நியமனத்திற்கு எதிரான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.கோவை அரசு மருத்துவக் கல்லுாரி டீனாக இருந்த எட்வின் ஜோவை, மருத்துவக் கல்வி இயக்குனராக (டி.எம்.இ.,) தமிழக அரசு நியமித்தது. இதை எதிர்த்து கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி டீன் ரேவதி உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். எட்வின் ஜோவை நியமித்த அரசாணையை தனி நீதிபதி ரத்து செய்தார். இதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.நீதிபதிகள், 'எட்வின் ஜோவை டி.எம்.இ.,யாக நியமித்த அரசாணை மற்றும் ரேவதியை டி.எம்.இ.,யாக நியமிக்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்துசெய்கிறோம். தகுதி, திறமை, பணி மூப்பின்படி மறு பரிசீலனை செய்து, டி.எம்.இ.,யை அரசு நியமிக்க வேண்டும்' என உத்தரவிட்டனர். ரேவதி தாக்கல் செய்த மனுவில், 'நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததால், சுகாதாரத்துறை முதன்மைச் செயலர்ராதாகிருஷ்ணன் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்தார்.மீண்டும் டி.எம்.இ., யாக எட்வின் ஜோ நியமிக்கப்பட்டதை எதிர்த்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி அமர்வு நேற்று தள்ளுபடி செய்தது.

நேற்று ரேவதிக்கு பணி நிறைவு நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Peon, an MA in Eng, checks Hindi answer sheets at college in MP

Peon, an MA in Eng, checks Hindi answer sheets at college in MP Amarjeet.Singh@timesofindia.com 10.04.2025 Bhopal : Twice ‘outsourced’, the ...