Saturday, March 17, 2018

இரண்டு அலைபேசி எண்களால் காஸ் முன்பதிவு செய்யும் வசதி

Added : மார் 17, 2018 02:24

காரைக்குடி: இரண்டு அலைபேசி எண்கள் மூலம் சமையல் காஸ் முன் பதிவு செய்யும் வசதியை எண்ணெய் நிறுவனங்கள் ஏற்படுத்தியுள்ளன.சமையல் காஸ் முன்பதிவுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் பதிவு செய்ய, இன்டேன் வாடிக்கையாளர்கள் ஐ.ஓ.சி., என டைப் செய்து, இடைவெளி விட்டு, ஏஜன்சியின் தரைவழி இணைப்பு எண், கஸ்டமர் எண்ணை பதிவு செய்து 81240 24365 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்ப வேண்டும்.ஐ.வி.ஆர்.எஸ்.,ல் (குரல் வழி) பதிவு செய்ய மேற்கண்ட அலைபேசி எண்ணுக்கு அழைப்பு விடுத்து, புக்கிங் செய்யலாம். கடந்த ஐந்து ஆண்டுக்கு முன் நுகர்வோரின் அலைபேசி எண்களை காஸ் ஏஜன்சிகள் பதிவேற்றம் செய்தன. அலைபேசி எண்ணை மாற்றினால், ஏஜன்சிக்கு சென்று மாறிய எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும்.சமீபத்தில் 'ஏர்செல்' நிறுவனம் தனது அலைபேசி சேவையை நிறுத்தியதை தொடர்ந்து, நுகர்வோர்கள் புக்கிங் செய்ய முடியாமல் திணறினர். இதை தொடர்ந்து ஒரு நுகர்வோர், இரண்டு அலைபேசி எண்களை ஏஜன்சியில் பதிவு செய்து, அந்த இரண்டிலிருந்தும் முன்பதிவு செய்யலாம், என எண்ணெய் நிறுவனங்கள் உத்தரவிட்டுள்ளது.----

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...