Saturday, March 24, 2018

பணிப்பெண்ணை அறைந்த விமான ஊழியர்

Added : மார் 24, 2018 01:15

மும்பை: விமான பயணிக்கு, சைவ உணவுக்கு பதில் அசைவ உணவு பரிமாறிய பணிப்பெண்ணை, விமான ஊழியர் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து, ஏர் இந்தியா நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:கடந்த வாரம், டில்லியில் இருந்து, பிராங்க்பர்ட் சென்ற விமானத்தில், பணிப்பெண் ஒருவர், பயணிக்கு, சைவ உணவுக்கு பதில், தவறுதலாக, அசைவ உணவை வழங்கினார். இது குறித்து, விமான மேற்பார்வையாளரிடம் தெரிவித்த பயணி, புகார் எதுவும் அளிக்கவில்லை. தவறுக்கு, பயணியிடம் மன்னிப்பு கேட்ட பணிப்பெண், அவருக்கு சைவ உணவு வழங்கினார்.இருப்பினும், நடந்த தவறை சுட்டிக்காட்டிய மேற்பார்வையாளர், பணிப்பெண்ணின் கன்னத்தில் அறைந்ததால், ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து, விமான பணிப்பெண் அளித்த புகாரின் மீது, விசாரணை நடந்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.01.2026