Sunday, March 25, 2018

மளிகை கடையை பிரபலப்படுத்துவது எப்படி

Added : மார் 25, 2018 03:31

தமிழர் ஒருவர் ஆரம்பித்த 'ஜஸ்ட் டயல்' இன்று சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது. உங்களுக்கு ஒரு கம்பெனியின் போன் நம்பர் தேவை அல்லது ஒரு சர்வீஸ் தேவை (பிளம்பர், டெய்லர் உள்பட) என்றால், தேவையான போன் நம்பரை கொடுப்பதுதான் இவர்கள் வேலை. இதற்காக, பெரிய கால் சென்டர் வைத்து நடத்துகின்றனர். 'வெப்சைட்' மூலமாகவும் விவரம் தருகின்றனர்.இந்தியாவில் ஒரு கோடியே 20 லட்சம் மளிகை கடை இருக்கின்றன. இவர்களுக்கு ஒரு 'ஐஸ்ட் டயலாக' இருக்க விரும்புகிறாது 'ஓ2ஓ' என்ற இணையதளம். இது ஒரு ஸ்டார்ட் அப். இவர்களின் ஆப் 'டவுன்லோட்' செய்தால், அது உங்களுக்கு அருகிலிருக்கும் மளிகை கடைகளை இனம் காட்டும்.பொருட்கள் வாங்கினால், ஆன்லைன் மூலமாக பணம் கட்டும் வசதியும் இருக்கிறது. மேலும், உங்கள் மளிகை கடையை, மொபைல் மற்றும் வெப்சைட் மூலமாக அணுக முடியும். கடையை தொடர்ந்து விளம்பரங்கள் மூலம் 'புரமோட்' செய்வர். 4 கிலோ மீட்டர் வரை இலவசமாக டோர் டெலிவரி செய்ய ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.'ஓ2ஓ' கம்பெனியில் இதுவரை, 600 மளிகை கடைகள் இணைந்துள்ளனர். மாதாமாதம் இது, 20 சதவீதம் கூடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்றுமதி உலகம்நாம், வெளிநாட்டில் சென்று ஒரு கம்பெனி ஆரம்பிக்க வேண்டும் என்று கனவு கண்டுகொண்டிருப்போம். பலருக்கு அது எப்படி செய்வது என்று தெரியாமல் இருக்கிறது. இந்திய பொருட்களை வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்ல துபாய் ஒரு கேந்திரமாக இருக்கிறது. இதற்கு அருகில் இருக்கும் சார்ஜாவில், 'ஹாமாரியா ப்ரீ ஜோன் அத்தாரிட்டி', இந்தியர்கள் தங்களது கம்பெனிகளை 25 வருட லீசுக்கு மிகக் குறைந்த செலவில் வைத்து கொள்ளலாம் என்ற வகையில் அனுமதி அளிக்கின்றனர்.கூடுதல், விவரங்களுக்கு, www.hfze.ae

'ஆர்கானிக்' பொருட்கள்ஆர்கானிக் பொருட்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கூடி வருகிறது. விலை கூடுதலாக இருந்தாலும் உடலுக்கு தீங்கு வரக்கூடாது என்று ஆர்கானிக் பொருட்களை வாங்குகின்றனர். இவற்றை உற்பத்தி மற்றும் விற்பனை செய்பவர்களில், ஐந்து கம்பெனிகள் சிறப்பாக இருக்கின்றன. ஏற்றுமதியும் செய்கின்றனர். அவைகளின் இணையதள முகவரி:www.back2basics.com, www.isayorganic.com, www.farm2kitchen.com, www.mygreenkart.com, wwww.24organicmantra.com

சந்தேகங்களுக்கு: இ-மெயில்: sethuraman.sathappan@gmail.com, அலைபேசி:098204-51259

- -சேதுராமன் சாத்தப்பன்- -

No comments:

Post a Comment

NEWS TODAY 24.01.2026