Friday, March 16, 2018

உ.பி. இடைத்தேர்தலில் பாஜக தோல்வி: யோகி ஆதித்யநாத் மீது சுப்ரமணியன் சுவாமி மறைமுகமாக விமர்சனம்



உ.பி. இடைத்தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததையடுத்து, யோகி ஆதித்யநாத் மீது சுப்ரமணியன் சுவாமி மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார். #SubramaniamSwamy #YogiAdityanath

மார்ச் 16, 2018, 07:12 AM

புதுடெல்லி,

வட இந்திய மாநிலங்களில் பெரும்பாலானவை பாஜக ஆட்சியில் உள்ள நிலையில், உத்தரபிரதேசம் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற மக்களவை இடைத்தேர்தலில் பா.ஜ.க. அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. குறிப்பாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடர்சியாக 5 முறை வெற்றி பெற்ற கோரக்பூர் தொகுதியிலும் பா.ஜ.க. தோல்வி அடைந்தது.

இந்நிலையில் இந்த இடைத்தேர்தலில் பா.ஜ.க. தோல்வி அடைந்ததற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தனது சொந்த தொகுதியில் பா.ஜ.க.வை ஜெயிக்க வைக்க முடியாதவர்களுக்கு மந்திரி பதவி கொடுப்பது பற்றி பா.ஜ.க. ஆட்சி மன்றக் குழு நிச்சயம் மறுபரிசீலனை செய்ய வேண்டும், என கூறியுள்ளார். அதேபோல், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான ராம்கந்த் யாதவும் யோகி ஆதித்யநாத்தை மிக கடுமையாக விமர்சித்துள்ளார்.

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...