Thursday, March 22, 2018

அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க திட்டமில்லை: மத்திய அரசு விளக்கம்
By DIN | Published on : 22nd March 2018 01:13 AM |

அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60இல் இருந்து 62ஆக அதிகரிக்கும் திட்டமில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, மக்களவையில் மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக பதில் தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60இல் இருந்து 62ஆக அதிகரிக்கும் திட்டம் அரசிடம் இல்லை. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி), ரயில்வே ஆள்கள் தேர்வு வாரியம் (ஆர்ஆர்பி) உள்ளிட்ட பணித் தேர்வு அமைப்புகள் மூலம் அரசுப் பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவோரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

2014-15ஆம் ஆண்டில் அரசு வேலைகளுக்கு 1,13,524 பேர் தேவைப்பட்டனர். இந்த எண்ணிக்கை 2015-16ஆம் ஆண்டில் 1,11,807 ஆக இருந்தது. ஆனால், 2016-17ஆம் ஆண்டில் அப்பணியிடங்களுக்கு 1,00,933 பேரே பரிந்துரைக்கப்பட்டனர். ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடங்களுக்கு ஆள்களை தேர்வு செய்யும் யுபிஎஸ்சி அமைப்பானது, 2014-15ஆம் ஆண்டில் 8,272 பேரையும், 2015-16ஆம் ஆண்டில் 6,866 பேரையும், 2016-17ஆம் ஆண்டில் 5,735 பேரையும் பரிந்துரைத்திருந்தது. இதேபோல், ஊழியர்கள் தேர்வு குழு (எஸ்.எஸ்.சி.), ரயில்வே ஆள்கள் தேர்வு வாரியம் ஆகியவையும் பணியிடங்களுக்கு இருக்கும் தேவைகள் எண்ணிக்கையைக் காட்டிலும் குறைவான எண்ணிக்கையிலேயே பரிந்துரைகள் அளித்துள்ளன. வேலையில்லாமல் இருக்கும் நபர்களுக்கு, படித் தொகையை அளிக்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை.

சிபிஐக்கு பணிச்சுமை: உயர் நீதிமன்றங்களால், சிபிஐ அமைப்புக்கு அதிக எண்ணிக்கையில் வழக்குகள் பரிந்துரைக்கப்படுகின்றன. இதனால் சிபிஐ அமைப்புக்கு பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் சிபிஐக்கு 121 வழக்குகள் அனுப்பப்பட்டுள்ளன. அதில் 85 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

வங்கிகளுக்கு எதிராக அதிக புகார்: கடந்த 3 ஆண்டுகளில், வங்கிகள், தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு எதிராகவே அதிக எண்ணிக்கையில் புகார்கள் வந்துள்ளன. கடந்த 2015இல் வங்கிகளுக்கு எதிராக 53,776 புகார்களும், 2016இல் 88,850 புகார்களும் வந்துள்ளன. கடந்த 2015ஆம் ஆண்டில் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு எதிராக 63,929 புகார்களும், 2016இல் 67,551 புகார்களும் வந்துள்ளன என்று அந்தப் பதிலில் ஜிதேந்திர சிங் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...