Sunday, May 14, 2017

சுரங்க மெட்ரோ ரயிலை சேதப்படுத்தினால் 10 ஆண்டுகள் ஜெயிலாம்! 




சென்னை: திருமங்கலம்- நேரு பூங்கா இடையே நாளை முதல் இயக்கப்படவுள்ள மெட்ரோ ரயிலை சேதப்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னையில் உள்ள போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில், மெட்ரோ ரயில் திட்டங்கள் தொடங்கப்பட்டன. முதல் கட்டமாக கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரை தொடங்கி கடந்த ஆண்டு முதல் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இரண்டாவது கட்டமாக சின்னமலை- கோயம்பேடு வரை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 3-ஆவது கட்டமாக திருமங்கலத்திலிருந்து நேரு பூங்கா வரை நாளை முதல் சுரங்க ரயில் இயக்கப்படுகிறது. இதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைக்கிறார்.

 மது அருந்திவிட்டு பயணம்...

மது அருந்தி விட்டு பயணம் செய்பவர்கள், பயணிகளுக்குத் தொல்லை கொடுப்பவர்களுக்கு, மெட்ரோ ரயில் சொத்துகளுக்கு கேடு விளைப்பவர்களுக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்படும். ஆபத்தான பொருட்களை (பட்டாசு, வெடிபொருள்கள்) கொண்டு செல்பவர்களுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 5 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும்.
போஸ்டர் ஒட்ட கூடாது

மெட்ரோ ரயில் சொத்துகளில் போஸ்டர் ஒட்டுவது, எழுதுவது, வரைவது ஆகியவற்றுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படும். மெட்ரோ ரயில் கூரை மீது பயணம் மேற்கொள்ள முயன்றால் ஒரு மாதம் சிறைத்தண்டனை, ரூ. 50 அபராதம் விதிக்கப்படும்.
தண்டவாளங்களில் நடந்தால்...

மெட்ரோ ரயில் தண்டவாளங்களில் நடந்தால் 6 மாதம் சிறைத்தண்டனை அல்லது ரூ. 500 அபராதம் விதிக்கப்படும். ஓடும் ரயிலை தடுத்து நிறுத்தினாலோ, தாக்குதல் நடத்தினாலோ 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். ரயிலில் உள்ள தொலைத்தொடர்பு சாதனங்களைத் தேவையில்லாமல் பயன்படுத்தினாலோ, அவசர கால பொத்தானை தவறாகப் பயன்படுத்தினாலோ ஓராண்டு சிறைத் தண்டனை, ரூ.1,000 அபராதம் பெறப்படும்.
நோ மார்க்கெட்டிங்

உணவுப் பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு ரூ.500 அபராதம், 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும். ரயிலை விபத்துக்குள்ளாக்குவது, கொலை முயற்சி, சக பயணிகளைத் தாக்கி குற்றங்களில் ஈடுபட்டால் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும். மெட்ரோ ரெயில் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்களுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


source: oneindia.com
Dailyhunt

தெய்வமகள் காயத்ரி கொலை.... அண்ணியாருக்கு அஞ்சலி செலுத்திய டுவிட்டர்வாசிகள்


சென்னை: சன்டிவியில் ஒளிபரப்பாகும் தெய்வமகள் சீரியலில் தனது அண்ணியார் காயத்ரியை பிரகாஷ் குத்தி கொலை செய்து மலையில் இருந்து உருட்டி விட்டு விட்டார். காயத்ரி இறந்து போனதாக நம்பி பிரகாஷ், குமார் போய் விட்டனர். ஆனால் காயத்ரி உயிரோடு இருக்கிறாளா? இல்லையா என்பது இயக்குநரின் கையில்தான் இருக்கிறது.

சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் தெய்வமகள் சீரியல் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது. சீரியலின் மிக முக்கியமான காட்சி இன்று ஒளிபரப்பானது. தன்னையும், தன் அண்ணனையும் கொல்ல வந்த கயாத்ரியை கொழுந்தன் பிரகாஷ் குத்தி கொலை செய்து விட்டான்.

காயத்ரி ரசிகர்களுக்கு இது அதிர்ச்சியாகவே இருந்திருக்கும். நான் நினைத்தது போலவே சமூக வலைத்தள பக்கங்களில் காயத்ரிக்கு அஞ்சலி செலுத்தி பதிவிட்டுள்ளனர் அவரது ரசிகர்கள்.

என்ன... இரும்புப் பெண்மணி அண்ணியார் கொல்லப்பட்டாரா... ஐயகோ. அவருக்கு அஞ்சலி என்று பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர்.
அண்ணியாரை கொன்னுட்டீங்களா? கேபிளை கட் பண்ணுங்கப்பா என்கின்றனர்.
source: one india

திருமங்கலம் - நேரு பூங்கா சுரங்கப்பாதையில் மொபைல் போன் பயன்படுத்த முடியாது?

சென்னை : சென்னை திருமங்கலம் - நேரு பூங்கா சுரங்கப்பாதையில் ரயில் சேவை நாளை(மே14) துவங்கப்பட உள்ளது. இந்த ரயிலில் பயணம் செய்யும் போது மொபைல் போன் பயன்படுத்த முடியாது என கூறப்படுகிறது.
 
திருமங்கலம் - நேரு பூங்கா இடையேயான ரயில் நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. சுரங்க மெட்ரோ ரயிலின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்து, செய்முறை மூலம் விளக்கியும் காட்டினர். இருப்பினும் மெட்ரோ ரயில், சுரங்க வழி பாதையில் செல்வதால், ரயில் பயணத்தின்போது மொபைல் போன் சிக்னல் கிடைக்க வாய்ப்புகள் இல்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், தற்போது உள்ள மொபைல் போனின் அத்தியாவசிய தேவையை அறிந்து விரைவில் சுரங்க ரயில் நிலையங்களில் மொபைல் போன் சிக்னல் கிடைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர்.
Dailyhunt

முதுநிலை மருத்துவம்: நிர்வாக ஒதுக்கீட்டுக்கான தகுதிப்பட்டியல் வெளியீடு

முதுநிலை மருத்துவப் படிப்புகளில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான தகுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு மே 8 முதல் 11-ஆம் தேதி வரை நடைபெற்றது. 756 முதுநிலை மருத்துவ இடங்கள் மற்றும் 19 முதுநிலை பல் மருத்துவ இடங்களுக்கு நடைபெற்ற கலந்தாய்வின் முடிவில் 38 காலியிடங்கள் ஏற்பட்டன. தனியார் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் நிர்வாக ஒதுக்கீட்டுக்கும் மாநில அரசே கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து அதற்கான பணிகளையும் மருத்துவக் கல்வி தேர்வுக்குழு கவனித்து வருகிறது.

இந்நிலையில், தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கான நிர்வாக ஒதுக்கீட்டுக்கான தகுதிப் பட்டியல் சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. 8 தனியார் கல்லூரிகளுக்கு 2,680 பேர் கொண்ட பட்டியலும், 8 நிகர்நிலைப் பல்கலைக்கழக இடங்களுக்கு 4,107 பேர் கொண்ட தகுதிப்பட்டியல் சுகாதாரத் துறையின் www.tnhealth.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு குறித்த அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Dailyhunt

related stories


அன்னையர் தினத்தை சிறப்பித்த 'கூகுள் டூடுல்'

உலக அன்னையர் தினத்தையொட்டி தாய்மையை போற்றும் "கூகுள் டூடுல்" இன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. கூகுள் சர்ச் இஞ்சினின் முகப்பு பக்கமான டூடுலில், இன்று உலகம் முழுவதும் உள்ள அன்னையரை போற்றும் வகையில் ஸ்பெஷலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அம்மாக்களின் தியாகத்தை கார்டூன் வாயிலாக கதையாக வெளிப்படுத்தி உள்ளது. ஒரு கள்ளிச்செடியின் கர்ப்பம் தொடங்கி, குழந்தை பிறப்பு, வளர்ப்பு உள்ளிட்டவற்றை அழகான எளிமையான அனிமேஷன் மூலம் கதையாக வெளிப்படுத்தி உள்ளது.


Dailyhunt

'ஜோடி பொருத்தம் சரியில்லையே...' வருத்தப்படும் பிரான்ஸ் மக்கள்

பாரிஸ்: பிரான்சில், வயது குறைந்த இளம் அதிபராக இம்மானுவேல் மக்ரோன், 39, தேர்வாகியுள்ள நிலையில், அவரது மனைவிக்கு, 63 வயது என்பதால், அந்நாட்டு மக்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில், சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில், ஐரோப்பிய யூனியன் ஆதரவாளர் இம்மானுவேல் மக்ரோன், அபார வெற்றி பெற்றார்.
 
வாழ்த்து இளம் வயதில் அதிபராக தேர்வாகியுள்ள அவருக்கு, உலக நாடுகளின் தலைவர்கள் மட்டுமின்றி, அந்நாட்டு மக்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.மக்ரோன், விரைவில் அதிபராக பொறுப்பேற்க உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மக்ரோனின் மனைவி டிராகனஸ், 63. இந்த தம்பதிக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளனர். குழந்தைகள் கணவன் மக்ரோனை விட, 24 வயது மூத்தவரான டிராகனஸுக்கு, முதல் கணவர் மூலம் பிறந்த குழந்தைகளுக்கு திருமணம் நடந்து அவர்களுக்கும் குழந்தைகள் உள்ளனர்.பிரான்சில், இளம் வயது அதிபர் தேர்வாகியுள்ள நிலையில், அவரது மனைவிக்கு, அவரை விட, 24 வயது அதிகம் என்ற தகவல், தற்போது பிரான்சில் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது.
 
பிரான்சில் இதுவரை பதவி வகித்த அதிபர்கள் யாருக்கும் இதுபோன்ற நிலை இல்லை.ஒரு சில அதிபர்கள், தங்களை விட, சில வயது அதிகம் உடையவர்களை திருமணம் செய்துள்ளனர். ஆனால், மக்ரோனை போன்று, 24 வயது மூத்த பெண்ணை திருமணம் செய்த அதிபர்கள் இல்லை.இதுபற்றி, பிரான்ஸ் மட்டு மின்றி பல நாடுகளிலும், ஊடங்களில் செய்திகள் வந்தபடி உள்ளன. பிரான்ஸ் மக்களும், தங்கள் அதிபரை விட, அவரது மனைவிக்கு, அதிக வயது இருப்பது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளனர்.

Dailyhunt

ரூ.2,000 கோடி முறைகேடு: சிக்கும் சோனியா மகள்

புதுடில்லி:'நேஷனல் ஹெரால்டு' தொடர்பான, 2,000 கோடி ரூபாய் முறைகேடு வழக்கில், காங்கிரஸ் தலைவர் சோனியா, துணை தலைவர் ராகுலை தொடர்ந்து, பிரியங்காவும், வருமான வரித்துறையின் வளையத்திற்குள் சிக்குகிறார்.மறைந்த பிரதமர் ஜவகர்லால் நேருவால் துவக்கப்பட்ட, 'நேஷனல் ஹெரால்டு' உள் ளிட்ட பத்திரிகைகளை நடத்தி வந்த, ஏ.ஜே. எல்., எனப்படும் அசோசியேட்டட் ஜர்னல் லிமிடெட் நிறுவனம், நிதி நெருக்கடிக்கு ஆளானது.
 
 இதையடுத்து, அந்நிறுவனத்திற்கு,2008ல் காங்கிரஸ் கட்சி, 90 கோடி ரூபாயை, வட்டி இல்லா கடனாக அளித்தது. அபகரிப்பு புகார் மேலும்,சோனியா, ராகுல் இயக்குனர்களாக உள்ள, 'யங் இந்தியா' நிறுவனம், 2010ல், ஏ.ஜே.எல்., நிறுவ னத்தை விலைக்கு வாங்கியது.இதை தொடர்ந்து, ஏ.ஜே.எல்., நிறுவனத்தின், 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை, சோனியாவும், ராகுலும் அபகரிக்க முயன்றதாக கூறி, பா.ஜ., மூத்த தலைவ ரான சுப்பிர மணியன் சாமி, டில்லி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். 'நோட்டீஸ்' யங் இந்தியா நிறுவனம் தாக்கல் செய்த வருமான வரி கணக்கில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில், சோனியா, ராகுல் உள்ளிட்டோருக்கு வருமான வரித்துறை ஏற்கனவே, 'நோட்டீஸ்' அனுப்பிஉள்ளது.
 
இந்நிலையில், இந்த வழக்கில், சோனியாவின் மகள் பிரியங்காவும் சிக்குகி றார். இந்த விவகாரத்தில், முறைகேடு நடக்க உடந்தையாக இருந்ததாக கூறி, வரு மான வரித்துறை அனுப்பியுள்ள நோட்டீசில், பிரியங்கா பெயரும் இடம் பெற்றுள்ளது.நேஷனல் ஹெரால்டு வழக்கில், சோனியா, ராகுலை தொடர்ந்து, பிரியங்காவும் சிக்கியுள் ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
Dailyhunt

தமிழகத்தில் நாளை போக்குவரத்து ஊழியர்கள்...ஸ்டிரைக்?

தமிழகத்தில், நாளை முதல் போக்குவரத்து ஊழியர்கள், காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். கோரிக்கைகள் தொடர்பாக, அமைச்சர், அதிகாரிகளுடன் நடந்த, பல சுற்றுப் பேச்சு தோல்வி யில் முடிந்ததால், மாநிலம் முழுவ தும், அரசு பஸ்கள் இயக்கம் முடங்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.தமிழக அரசின் போக்குவரத்து கழகத்தில், 1.43 லட்சம் ஊழியர்கள்உள்ளனர். அவர்களுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. அதன்படி, 12வது ஊதிய உயர்வு ஒப்பந்தம், 2016 ஆக., மாதம் முடிந்தது. ஜெயலலிதா மறைவு உள்ளிட்ட அரசியல் குழப்பங்களால், 13வது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சு தாமதமானது. நீண்ட இழுபறிக்கு பின், மார்ச், 7ல், போக்குவரத்துத் துறை அமைச்சர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள், தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சு நடத்தி னர். இதுவரை, அமைச்சர் தலைமையில், மூன்று கட்டமாகவும், அதிகாரிகள் தலைமை யில், ஒரு கட்ட பேச்சும் நடத்தப்பட்டன. ஆனால், எந்த முன்னேற்ற மும் இல்லாமல், தோல்வி யில் முடிந்தன.ஊழியர்கள் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் நிலுவை தொகைக்காக, 750 கோடி ரூபாய் ஒதுக்குவதாக, அமைச்சர் அறிவித்திருந்தார். அதை ஏற்க, தொழிற்சங்க நிர்வாகிகள் மறுத்து விட்டனர். இந்நிலையில், இறுதி கட்டமாக, சென்னை, தேனாம்பேட்டை யில் உள்ள தொழிலாளர் நல வாரிய அலுவல கத்தில், தொழிலாளர் நல, தனி துணை கமிஷனர், போக்குவரத்து அதிகாரிகள், தொழிற் சங்க நிர்வாகிகள் இடையே, முத்தரப்பு பேச்சு, இரு நாட்களாக நடந்தன; அதிலும், உடன்பாடு ஏற்படவில்லை.

இதை தொடர்ந்து, நாளை முதல், காலவரை யற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக, தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ள னர். இதனால், அரசு பேருந்துபோக்குவரத்து சேவை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அண்ணா தொழிற்சங்க செயலர், சின்னசாமி, முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேசினார். பின் அவர், ''தொழிற்சங்க நிர்வாகிகளுடன், அமைச்சர், இன்று ஐந்தாவது கட்ட பேச்சு நடத்த உள்ளார்; அதில், அதிக நிதி ஒதுக்க உள்ளார்,'' என, தெரிவித்தார்.

இதுகுறித்து, தொழிற்சங்கத்தினர் கூறியதாவது: போக்குவரத்து துறையில் உள்ள நிதி பற்றாக் குறையை சமாளிக்க வும், பணியில் உள்ள ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நிலுவை தொகை வழங்கவும், 10 ஆயிரம் கோடி ரூபாய் தேவை. ஆனால், அரசு, 750 கோடி ரூபாய் மட்டும் ஒதுக்குவதாக கூறுகி றது. இதனால், பிரச்னைக்கு தீர்வு கிடைக்காது; ஊதிய ஒப்பந்தம் பேசவும் முடியாது. எனவே, திட்டமிட்டபடி, நாளை முதல், ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவர்.

இந்த சூழ லில், அமைச்சர் நல்ல முடிவை அறிவிப்பார் என, நம்புகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர். நாளை பஸ் ஓடாது! அரசு போக்குவரத்து கழகஊழியர்சம்மேளனம் - சி.ஐ.டி.யு., துணைத் தலைவர்,அன்பழகன் கூறியதாவது:ஓய்வு பெற்ற, 64 ஆயிரம் பேரின் குடும்பங்களுக்கு வழங்கப்பட வேண்டிய, 1,700 கோடி ரூபாயை ஒதுக்க வலியுறுத்தினோம். தற்போது, பணியில் உள்ளவர்களுக்கு, பஞ்சப் படி உயர்வு நிலுவைத் தொகை வழங்க, 300 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என்றோம்.

ஆனால், அரசின் சார்பில், 750 கோடி ரூபாய்க்கு மேல் தர இயலாது என்றனர். அதனால், 'ஸ்டிரைக்' தவிர, வேறு வழியில்லை. இதில், ஆளுங்கட்சி ஆதரவு, அண்ணா தொழிற் சங்கத்தில், நிர்வாக பொறுப்பில் உள்ளவர் களை தவிர, அனைத்து தொழிலாளர்களும் ஈடுபடுவது உறுதியாகி உள்ளது. எனவே, நாளை முதல் பேருந்துகள் ஓடாது.இவ்வாறு அவர் கூறினார்.

ஐ.என்.டி.யு.சி., எதிர்ப்பு 'போக்குவரத்து ஊழியர்கள், வேலை நிறுத் தத்தை தவிர்க்க வேண்டும்' என, காங்கிரஸ் ஆதரவு ஐ.என்.டி.யு.சி., தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.தமிழக ஐ.என்.டி. யு.சி., தலைவர், கோவிந்தராஜன், பொதுச் செயலர், வில்சன் வெளியிட்டுள்ள அறிக்கை:போக்குவரத்து துறை அமைச்சருடன் நடந்த பேச்சில், முதல் கட்டமாக, 750 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நிர்வாகம் ஏற்கனவே, மிகப்பெரிய நஷ்டத்தில் இயங்கி வருகிறது. வேலை நிறுத்தம் செய்வ தால், கடும் நிதி நெருக்கடி மற்றும் பொருளா தார வீழ்ச்சி ஏற்படும்.

எனவே, தற்போதைய வேலை நிறுத்தம் தேவையற்றது என, ஐ.என்.டி.யு.சி., கருதுகிறது. நஷ்டத்தை தவிர்க்க, வேலை நிறுத்தத்தை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளனர்.
Dailyhunt

ரூ.10 கட்டணத்தில் திகிலூட்டும் சுரங்க ரயில் பயணம் - ஏழரை நிமிடத்தில் 7 ஸ்டேஷன்கள்

 
சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் பயணம் என்பது சென்னை மக்களுக்கு திகில் அனுபவமாக இருக்கும். திருமங்கலத்தில் இருந்து நேரு பூங்காவுக்கு ஏழரை நிமிடத்தில் வந்து சேர முடியும்.

முதற்கட்டமாக, 10 நிமிடத்துக்கு ஒரு ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பயணிகள் கூட்டம் அதிகம் இருக்கும் பட்சத்தில் கூடுதல் ரயில் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய 2 முறையை அறிமுகப்படுத்தியுள்ளனர். ரூ.10 கட்டணத்தில் டிக்கெட் பெற்று கொண்டு செல்லலாம். நமக்கு தேவையான பட்சத்தில், அதனை செல்போன் போன்று தேவையான தொகைக்கு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

அதேபோல், கவுன்ட்டரில் ‘டோக்கன்’ வடிவிலான டிக்கெட் வாங்கி பயணம் செய்யலாம். உயர்மட்டப் பாதையில் இந்த 2 முறையும் டிக்கெட் எடுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால், சுரங்க ரயில் நிலையங்களில் ‘டோக்கன்’ வடிவிலான டிக்கெட் கிடைக்காது. நமக்கு தேவையான பயண அட்டையை பெற்று கொண்டு இருந்தால், மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

சுரங்கத்தில் உள்ள 7 ரயில் நிலையங்களிலும் ரூ.10 கட்டணம் செலுத்தி பயண அட்டை பெற்று கொள்ளலாம்.



Dailyhunt

தமிழக MBBS அட்மிஷன் நடப்பது எப்படி? ப்ளஸ் டூ மதிப்பெண் கணக்கில் வருமா? நீட் மதிப்பெண் மட்டுமே தீர்மானிக்குமா? அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை !! 

courtesy: SSTA

நியூட்டன் அறிவியல் மன்றம்

MBBS, BDS அட்மிஷன் நடைபெறும் விதம்!

1) தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த
அனைவரின் பட்டியல் எடுத்துக் கொள்ளப் படும்.

2) இந்தப் பட்டியலில் இருந்து ப்ளஸ் டூவில் தோல்வி  அடைந்தவர்கள் இருந்தால் அவர்களின் பெயர்கள்  நீக்கப்படும்.


3) அடுத்து, இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய  மூன்று பாடங்களிலும், ஒவ்வொரு பாடத்திலும்  குறைந்தது 40 சதம் மதிப்பெண் பெறாத SC/ST/OBC  மாணவர்களின் பெயர்கள் நீக்கப் படும்.

அதுபோல  50 சதம் மதிப்பெண் பெறாத பொதுப்பிரிவு (unreserved) மாணவர்களின் பெயர்கள் நீக்கப் படும்.

4) இவ்வாறு நீக்க வேண்டியவர்களை நீக்கிய பிறகு  மீதி உள்ளவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஆயத்தமாக இருக்கும். இந்தப் பட்டியல் ELIGIBILITY உள்ளவர்களின் பட்டியல் ஆகும்.

5) அடுத்து, மேற்கூறிய பட்டியலில் இருந்து,
 நீட் தேர்வில் தகுதி பெறாத (not qualified)
மாணவர்களின் பெயர்கள் நீக்கப் பட்டு, நீட்டில்
தகுதி பெற்ற (QUALIFIED) மாணவர்களின் மதிப்பெண்கள்  பதியப்பெற்ற பட்டியல் தயாரிக்கப் படும்.

6)(SC/ST/OBC பிரிவின் QUALIFYING தகுதி: 40th percentile ஆகும்

பொதுப்பிரிவின்   QUALIFYING தகுதி: 50th percentile ஆகும்)

PERCENTILE வேறு PERCENTAGE வேறு என்பதைப்  புரிந்து கொள்ள வேண்டும்.

7) பத்தி 5இல் கூறிய பட்டியலே மிகவும் முக்கியமான பட்டியல் ஆகும். இப்பட்டியலில் நீட் தேர்வில் மாணவர்கள்  பெற்ற மதிப்பெண்கள் தரவரிசை (RANK) அடிப்படையில்
பதியப்படும்.

8) இந்தப் பட்டியல் தயாரிக்கப் படும்போது, தமிழகத்தில் உள்ள 69 சத இட ஒதுக்கீடு பின்பற்றப்படும்.

9) அதாவது, தமிழகத்தில் சுமார் 3000 MBBS இடங்கள் என்று வைத்துக் கொண்டால், இந்த 3000 இடங்களில் 69 சதமுள்ள  இடங்கள் SC/ST/OBCக்கும் மீதியுள்ள 31 சத இடங்கள் பொதுப்பிரிவினரைக் கொண்டும் தயாரிக்கப் படும்.

10) இதுவரை கூறிய அனைத்தும் தமிழ்நாட்டுக்குரிய  85 சதம் இடங்களுக்கானது என்பதை வாசகர்கள் கவனம் கொள்ள வேண்டும். எனவே இந்த இடங்களைப் பெறுவதற்கு மாணவர்கள் இரண்டு நிபந்தனைகளை
பூர்த்தி செய்ய வேண்டும்.

அ) மாணவர்கள் தமிழ்நாட்டில் வசிக்க வேண்டும்.
(domicile status: Tamilnadu)

ஆ) மாணவர்கள் தமிழ்நாட்டில் உள்ள மேநிலைப்
பள்ளிகளில் ப்ளஸ் டூ படித்து இருக்க வேண்டும்.

11) இப்படித்தான் MBBS அட்மிஷன் நடைபெறும்.

12) இங்கு மாணவர் என்பது மாணவியர் மற்றும்
மூன்றாம் பாலினத்தவரையும் குறிக்கும்.

13) பொதுப்பிரிவு உடல் ஊனமுற்றோருக்கு
முன்னர்க்கூறிய 50 சத மதிப்பெண் என்பது
45 சதம் ஆகும்.

14) இப்படித்தான் அட்மிஷன் நடைபெறுகிறதே
அல்லாமல் வேறு எப்படியும் அல்ல.

பின்குறிப்பு-1: தமிழ்நாட்டில் உள்ள மேநிலைப்
பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் வசிப்பிடச்
சான்றிதழ் (DOMICILE CERTIFICATE) சமர்ப்பிக்கத்  தேவையில்லை

பின்குறிப்பு-2: பெற்றோரின் இடமாற்றல் காரணமாக மாணவன் வெளி மாநிலத்தில் படிக்க நேர்ந்தால், அவன் DOMICILE CERTIFICATE  சமர்பிக்க வேண்டும்  ......
வ.கோபாலகிருஷ்ணன், ப.ஆசிரியர்,நகராட்சி உயர்நிலைப் பள்ளி, குமரானந்தபுரம்\
 

Plus two exam news


 GH gets more facilities

Minister commissions equipment in Sivaganga hospital

Minister for Khadi and Village Industries Board G. Baskaran on Saturday inaugurated new facilities at the Government Medical College Hospital here.


Accompanied by Dr. P. Soundara Rajan, Dean of the hospital and RDO N. Sundaramurthy, the Minister inaugurated the facilities, including two reverse osmosis plants, established at a cost of Rs. 13.5 lakh with funds provided by local MP P. R. Senthilnathan under the constituency development fund.
 Secretariat employee commits suicide

A 35-year-old government official committed suicide at his residence in Arputham Nagar, West Tambaram, on Friday night.

Police said the victim, Deepan Chakravarthy, was an assistant section officer in the agriculture department at the Secretariat.

He was living with his mother Vanita, wife Sudha (30) and two children.
After reaching home on Friday evening, Chakravarthy locked himself in his room till 8.30 p.m.
His mother and wife repeatedly knocked on the door but he did not respond.
They called their neighbours who broke down the door and found Chakravarthy hanging from the ceiling fan. A case has been filed.

Those in distress can call 104 or 044-24640050 orhelp@snehaindia.org

 Porur flyover likely to be opened in two weeks

Deepa H. Ramakrishnan

475m facility was built over 7 years at a cost of Rs. 54 crore

After seven years of work that went on in fits and starts, the Highways Department is giving the finishing touches to the Rs. 54 crore flyover at the Porur junction on Mount Poonamallee Road. It is expected to be ready in two weeks.

Work on the 475 metre long and 17.2 metre wide flyover that began in 2010 had to be put on hold when huge underground water mains came in the way. Though construction resumed in 2015, it progressed slowly due to the lack of permission for traffic diversion and work had to be carried out during late nights only.

Soil conditions
Many residents expressed relief at the work finally coming to an end. Settu, an autorickshaw driver in Devi Nagar, recalled that the project had to be put on hold due to the presence of water mains and the soil condition.

“On some days, it takes more than 45 minutes for us to travel from Sri Ramachandra Hospital to the other side of the flyover. Once the flyover is completed, it will be used by vehicles of school, colleges and IT companies, leading to a reduction in congestion,” he said, adding that Arcot Road too should be widened to allow free movement of traffic.


Traffic snarls are common on the road that leads to Sriperumbudur and beyond. Pedestrians too struggle to cross the road. “It takes up to 15 minutes before you can finally cross the road. A subway beneath the flyover and pedestrian crossings on the sides where it lands would help pedestrians,” said S. Sanathkumar, who works in a power tools repair shop on Mount Poonamallee Road.
A bus stop on the Poonamallee side is just at the point where the flyover lands. It has to be shifted to prevent traffic jams on the service lane, Mr. Sanathkumar added.

Sources in the Highways Department said the priority now is to complete the flyover.
“We had to deal with a huge bunch of telecom cables last month and that delayed the construction. Painting, electrification and laying of BT topping will be taken up soon,” an official said.

Groundwater table dips by nearly 2m

 Survey shows water levels are at a depth of 6-10m beneath the ground in key localities

While the city’s wait for a good spell of summer showers continues, the groundwater table is witnessing a steady dip. In April, the water table declined by nearly two metres in various parts of the city when compared to same period last year.
According to a survey on water levels conducted by Rain Centre, a city-based voluntary organisation, the water table has dropped up to six metres below ground level in Nesapakkam, West Mambalam and Triplicane and beyond 10 metres in localities such as Mylapore and Adyar.
The varying water table in the localities across the city indicates the level of extraction of groundwater and the decline also depends on the soil condition in each area, Metrowater officials say.
For instance, Anna Nagar has had only a marginal dip in the water table in April.
The survey covered many areas in southern and central Chennai along the Adyar and Cooum rivers by monitoring water levels in 90 open wells identified per sq. km.
The rapid incease in the number of borewells has also added to the stress on groundwater.

Mathangi Narayanan, a resident of Okkiampet, said: “Last year, we had water in our open well because of bountiful rainfall in 2015 and good recharge through rainwater harvesting. But this summer, I am worried about the decreasing water level in the well probably due to overdrawal in the neighbourhood.”
Rain Centre director Sekar Raghavan said the dip in the water table in April was not alarming. “This could probably be due to the volume of water supply by Metrowater till last month. Moreover, this also indicates that people are not extracting from the shallow aquifer that is available in open wells and are instead digging deeper by sinking borewells and exhausting resources in deep aquifers,” he said.
Sustaining resources
Residents must alternate between tapping groundwater in open wells and deep borewells to sustain resources throughout the year. The cost for digging a 3.25 feet dia and 25 ft. deep open well is estimated to be Rs. 60,000 and that of 4.25 feet dia will cost Rs. 85,000, he said.
May 14 2017 : The Times of India (Chennai)
 
Another Nirbhaya brutalised & killed, this time in Rohtak
Chandigarh: 
 


Barely seven days after the Supreme Court upheld the death sentence for Nirbhaya's rapists, another starkly similar case has rocked Haryana. Two men from Sonipat not only kid napped and repeatedly raped a 23-year-old woman divorcee in Rohtak, they also inserted a sharpedged weapon in her private parts before raping her again.After all this, they smashed her head with a brick so that it would be difficult to identify her.
 
The woman's decomposed body was noticed by passersby in an open plot in the Industrial Model Township (IMT) area of Rohtak on Thursday . The men noticed that the body was being mauled by stray dogs.Police officers said that by the time they reached the spot, dogs had already eaten up parts of her face and stomach.Police have arrested two men for the brutal crime, one of them is the victim's neighbour in Sonipat, Sumit Kumar, while the other is his friend, Vikas Kumar. Cops said the brutal crime was committed because the woman refused to marry Sumit. He also suspected that she was having an affair with another man.

CCTV footage of the factory in Sonipat where the woman worked showed that she had left with the two men, who were later arrested on Friday . On Tuesday , Sumit and Vikas took the woman to Rohtak on the pretext of taking her to see a local lake. Instead, they took her to a hotel. Police officials say that during interrogation Sumit admitted that he and his friend raped the woman for a day after giving her a drink that made her drowsy .

Despite being drowsy and being sexually abused, the woman told the men that she would have them both arrested and that she would not hesitate to inform the cops. According to senior police officers this made Sumit angrier and both men brutalised her again. The doctors who performed the postmortem said the two men also had unnatural sex with her before inserting a sharp-edged weapon in her private parts.

Kolkata labourer rapes 75-yr-old, held

A 28-year-old labourer was arrested on Saturday for allegedly raping a 75-year-old woman in Kolkata.Police said Moidul Islam knocked on the woman's door around 2.30am on Saturday, and, when she refused to let him in, broke in. When Islam was leaving around 5.30am, the woman tried to trip him.Enraged, he caught her by the hair and threw her out on the street. Morning walkers later found her lying unconscious.Islam later joined angry locals as they confronted police demanding better security in the area. TNN
May 14 2017 : The Times of India (Chennai)
 
Aadhaar operator tries to apply for card in name of Osama, booked
Jaipur: TNN 
 


Police booked a 35-year-old Aadhaar operator in Rajasthan's Bhilwara district on Friday, for allegedly trying to get an Aadhaar card in the name of slain terrorist Osama Bin Laden. The accused Saddam Mansuri -who runs an Aadhar registration centre in Mandal -allegedly attempted to enroll an Aadhaar card in Bin Laden's name, a few days ago. “Mansuri filled Abbottabad, Bhilwara district as Bin Laden's address, and also uploaded a blurred picture of the terrorist in the profile. He, however, didn't input any identification proof, such as a thumb impression,“ Mandal deputy SP Chanchal Mishra said.

Following this, Mansuri's application came under the scanner of the Unique Identification Authority of India (UIDAI), which detected several elements of suspicion in the enrolment application, including the absence of thumb or iris impression, as well as the registered address provided.
“Our team in New Delhi found the anomalies highly suspicious and informed the Rajasthan department of information and technology . I received a call from Jaipur office and immediately filed an FIR,“ said Sanjay Aludia, IT department circle officer, Mandal.

Police said they are waiting for documentary evidence from the IT department to ascertain why Mansuri ­ booked under the IT Act tried to get an Aadhaar in the name of a terrorist.
May 14 2017 : The Times of India (Chennai)
 
Delay in result finds CBSE Class XII students in a fix


Admissions After State Board Result 
 
The delay in CBSE Class XII results, likely by May-end, is likely to affect students of CBSE-affiliated schools in the state as colleges began admissions on Friday , when the Class XII state board reaults were out.Chances of seats for popular courses like BCom and BSc computer science being filled by then are high.
 
About half of TN's 600 CBSE schools offer higher secondary course that 13,180 students cleared last year.

This year, 8.22 lakh students, including two lakh from commerce stream, cleared the Class XII state board exam. Given the high number of students, the 1,000-odd arts and science colleges begin admissions the day the Class XII state board results are out.

This is a violation of the statutes of state government universities, said Tamil Nadu Government College Teachers Association vicepresident C Veeramani.“Each arts and science college has to give 10 days to students to submit applications for admission. On the 11th day , the college should publish the rank list based on the Class XII state board score.“

The statutes also mandate colleges to conduct admission through the single-window format, but very few follow it, he said.

Asked if 10 days were enough to give an equal chance to CBSE students, Veeramani said he felt applications should be accepted till May-end. “Unfortunately , statutes do not allow that.“ The situation in engineering and agriculture universities is better. Anna University , Chennai accepts applications till June 3, while Tamil Nadu Agricultural University , Coimbatore, does it till June 4.
A professor of an aided institution said arts and science colleges adopted stepmotherly treatment towards CBSE students. “Most such students are admitted under management quota. Only a few colleges keep apart some seats in the merit category , depending on the vacancies at the end of day one of admissions, he said.“

Principal of St Joseph's College, Trichy , S Andrew, said his institution reserved at least 10 seats for CBSE students in specific courses under merit category .
தனியார் பஸ்களில் அலறுது ஸ்பீக்கர்கள்தாங்கமுடியல...: அலைபேசியில் கூட பேசமுடியாத சப்தம்

பதிவு செய்த நாள் 14 மே2017 02:06

ஸ்ரீவில்லிபுத்துார்,:விருதுநகர் மாவட்டத்தில் இயங்கும் தனியார் பஸ்களில் அலறும் ஸ்பீக்கர்களால் பஸ்களில் பயணிகள் நிம்மதியாக பயணிக்க முடியவில்லை. அவசரத்துக்கு அலைபேசியில் கூட பேசக்கூட முடியாத அளவிற்கு சப்தம் இருப்பதால், பாதிக்கிறார்கள். இதை தவிர்க்க மாவட்ட அரசு போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மாவட்டத்தில் ராஜபாளையம், சிவகாசி, கோவில்பட்டி, அருப்புக்கோட்டையிலிருந்துமதுரை, ஸ்ரீவில்லிபுத்துாரிலிருந்து தென்காசி மற்றும் திருநெல்வேலி, சிவகாசியிலிருந்து துாத்துக்குடி உட்பட பல்வேறு வழித்தடங்களில் தனியார் பஸ்கள் இயங்கி வருகிறது. பல்வேறு தனியார் நிறுவனங்களை சேர்ந்த நுாற்றுக்கு மேற்பட்ட பஸ்கள் மாவட்டத்தில் இயங்கி வருகிறது.


மக்கள் மத்தியில் நற்பெயர்

அரசு பஸ்களை விட சொகுசு, கட்டணம் குறைவு, அதிவிரைவு போன்ற காரணங்களால் ஏற்கனவே மக்கள் கூட்டம் தானாகவே தனியார் பஸ்களுக்கு காத்திருந்து பயணித்து வருகின்றனர். சில நேரங்களில் இருக்க இடம் இல்லாமல் நின்று கொண்டே மதுரைக்கு பயணிப்பவர்களும் உண்டு. சரியான நேரத்தில் சென்றடைவதால் இந்த பஸ்களுக்கு பொதுமக்கள் மத்தியில் நற்பெயர், நம்பிக்கையும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

அவசரத்திற்கு பேசமுடியல

இந்நிலையில் தனியார் பஸ்கள் ஒவ்வொன்றும் புத்தம் புதியதாக, புதிய வண்ணங்களிலும் மிளிர்கிறது. இப்பஸ்களில் பொதுமக்களை ஈர்ப்பதற்காக, மோட்டார் வாகன சட்ட விதிகளுக்குமாறாக அலறும் ஸ்பீக்கர்கள், நவீன தொலைகாட்சி பெட்டிகள் இருந்த நிலையில், தற்போது வை-பை வசதிகளும் இருக்கும் அளவிற்கு கூடுதல் வசதிகள் செய்ய ப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான தனியார் பஸ்களில் இருக்கும் ஸ்பீக்கர்களில் மிகவும் அதிகளவு சப்தத்துடன் பாடல்கள் ஒலிபரப்பப்படுகிறது.

இதனால், பஸ்களில் பயணிக்கும் முதியவர்கள், சிறு குழந்தைகள், நோயாளிகள் பாதிக்கபடுகின்றனர். அத்தகைய பஸ்களில் பயணிக்கும் அரசு மற்றும் தனியார் துறை அலுவலர்கள் அவசரத்திற்கு அலைபேசியில் உயர்அதிகாரிகளிடம் பேசக்கூட முடியவில்லை. அதிலும் ஒரு சில தனியார் பஸ்களில் இருக்கும் ஸ்பீக்கர்களின் அதிர்வினால், வயது முதிர்ந்த இருதய நோயாளிகள் மிகவும் பாதிக்கின்றனர்.

போக்குவரத்து அதிகாரிகள்

அரசு பஸ்களில் இருந்த ஸ்பீக்கர்களால் உருவாகிய பல்வேறு பிரச்னைகளினால், அதை உடனடியாக அகற்ற, விருதுநகர் அரசுபோக்குவரத்து கழக பொதுமேலாளர் உத்தரவின்படி, பெரும்பாலான பஸ்களில் ஸ்பீக்கர்கள் அகற்றப்பட்டுள்ளது. சில பஸ்களில் மட்டும் இன்னும் அகற்றப்படவில்லை. அரசு பஸ்களில் ஸ்பீக்கர்கள் அகற்றப்பட்டுள்ளதால், அப்பஸ்களில் பயணிக்கும் பயணிகள் சற்று  மதியடைந்துள்ளனர்.இதேபோல் தனியார் பஸ்களில் அலறும் ஸ்பீக்கர்களை அகற்றியோ அல்லது ஒலியின் அளவை குறைத்து வைத்தோ, கேட்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத நிலையை ஏற்படுத்த மாவட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.காது ஜவ்வு கிழியுது

ஸ்ரீவில்லிபுத்துார் சசிக்குமார், ''போக்குவரத்து விதிகளுக்கு மாறாக, ஓட்டுனர்களின் கவனத்தை திசைதிருப்பும் விதத்தில் தனியார் பஸ்களில் ஸ்பீக்கர்கள் அலறுகிறது. அதிலும் ஓட்டுனர்களே ஒலிபெருக்கிகளை கையாள்வது விபத்தை ஏற்படுத்தும் நிலையை உருவாக்குகிறது. அதிக ஒலியினால் பஸ்களுக்குள் இருக்க முடியவில்லை. அதிலும் ஒருசில பஸ்களில் காது ஜவ்வு கிழியும் அளவிற்கு சப்தம் பயணிகளை பயமுறுத்துகிறது. மாவட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து பயணிகளின் நலன்காக்கவேண்டும்,''என்றார்.
இன்ஜி., கவுன்சிலிங்கில் 'டாப்பர்ஸ்' முறை ரத்து?

இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், 'டாப்பர்ஸ்' பட்டியல் வெளியிடுவதை, ரத்து செய்வது குறித்து, ஆலோசிக்கப்பட்டு வருகிறது.



பிளஸ் 2 தேர்வு முடிவில், ரேங்கிங் முறை ரத்தானதால், மாணவர்களுக்கு, எந்த பிரச்னை யும் ஏற்படவில்லை; பல தரப்பிலும், வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த அதிரடி நடவடிக்கை யால், மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு, மன அழுத்தம், ஏமாற்றம் போன்ற பிரச்னை களில் இருந்து விடுதலை கிடைத்தது. அதே நேரத்தில், அதிக மதிப்பெண் எடுத்த

மாணவர்களை பயன்படுத்தி, வணிக நோக்கில் செயல்படும் பள்ளிகளுக்கு, இந்த நடவடிக்கை அதிர்ச்சியை அளித்துள்ளது.இதற்கிடையில், உயர் கல்வித் துறையிலும்,'டாப்பர்ஸ்' பட்டியல் வெளியிடுவதை நிறுத்த தீர்மானிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வி துறை அமைச்சர்கள், செயலர்கள் தரப்பில் ஆலோசனையும் நடத்தப்பட உள்ளது.

வழக்கமாக, அண்ணா பல்கலை இன்ஜி., கவுன்சி லிங்கில், 'கட் ஆப்' மதிப்பெண் படி, ரேங்க் பட்டியல் வெளியிடப்படும்.அதில், முதல், 10 இடங்களை பெற்ற மாணவ, மாணவியரின் பெயர், புகைப்படம், முகவரி,மொபைல் போன் எண் போன்றவை இடம் பெறும். அவர்களிடம் பேட்டி எடுத்து வெளியிடுவது, ஊடகங்களின் வழக்கம்.

அதில், அவர்கள் படித்த பள்ளி, எதிர்கால லட்சியம், அதிக மதிப்பெண் எடுத்தது எப்படி போன்ற விஷயங் கள் இடம்பெறும். எனவே, அதையும் தடுக்கும் வகை யி, கவுன்சிலிங்கில், 'டாப்பர்ஸ்' பட்டியல்

வெளி யிடுவதை நிறுத்துவது குறித்து,அரசு தரப்பில் ஆலோசிக்கப் படுகிறது. அதே நேரத்தில், மாணவர்கள் சேர்க்கையை பொறுத்தவரை, வழக்கம் போல, மதிப்பெண் அடிப்படையில், 'கட் ஆப்' நிலவரம் வெளியிடப் பட்டு, அதன்படி இடங்கள் ஒதுக்கப்படும்.

- நமது நிருபர் -
தள்ளுபடி?
சுப்ரீம் கோர்ட்டில் சசி தாக்கல்
செய்த மறு ஆய்வு மனு

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள, சசிகலா, தனக்கு விதிக்கப்பட்டுள்ள தண்ட னையை மறு ஆய்வு செய்யும் படி, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனு, தள்ளுபடி ஆகும் என கூறப்படுகிறது. ஏனெனில், தீர்ப்பில் எந்த குறையும் இல்லை என்பதால், மனுவை நீதிபதிகள் விசாரிக்க வாய்ப்பு இல்லை என, சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இந்த விவகாரத்தில், 27ம் தேதிக்குள் முடிவு தெரியும் என, அவர்கள் நம்புகின்றனர்.



சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில், சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு, நான்கு ஆண்டு சிறை தண்டனை, தலா, 10 கோடி ரூபாய் அபராதத்தை உறுதி செய்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வராய் அடங்கிய, 'பெஞ்ச்' 2017 பிப்., 14ல் தீர்ப்பளித்தது.

இந்த உத்தரவுக்கு பின், சசிகலா உள்ளிட்ட மூவரும், பெங்களூரு, பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். உச்ச நீதிமன்ற தீர்ப்பால், முதல்வராகும் சசிகலா வின் கனவு, தவிடு பொடியானது.உச்ச நீதி மன்ற உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி, தீர்ப்பு வழங்கிய ஒரு மாதத்துக்குள், மனு தாக்கல் செய்ய வேண்டும்.

அதன் படி, ஜெயலலிதாவுக்கு எதிரான மேல்

முறையீட்டை விலக்கியதை எதிர்த்தும், 100 கோடி ரூபாய் அபராதத்தை வசூலிக்கவும் கோரி, கர்நாடக அரசு, மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது.

அந்த மனுவை, நீதிபதிகள் பி.சி.கோஷ், அமித்வராய் அடங்கிய, 'பெஞ்ச்' தள்ளுபடி செய்து விட்டது. தங்கள் உத்தரவில் மாற்றம் செய்ய முடியாது என, அறிவித்து விட்டது.

அதைத்தொடர்ந்து, மறு ஆய்வு மனுவை, சசிகலா தாக்கல் செய்த தகவல், சமீபத்தில் வெளியாகி உள்ளது. இம்மனுவும், விரைவில் விசாரணைக்கு எடுக்கப்படும். ஏனென்றால், தீர்ப்பளித்த நீதிபதி களில் ஒருவரான பி.சி.கோஷ், 27ல் ஓய்வு பெறுகிறார்.

எனவே, அவர் ஓய்வு பெறுவதற்கு முன், மறு ஆய்வு மனு மீதான விசாரணை முடிந்து விடும் என, எதிர் பார்க்கப்படுகிறது. மறு ஆய்வு மனுவைப் பொறுத்த வரை, நீதிமன்றத்தில் விசாரணை நடக்காது. நீதிபதி களின் அறைகளில், மனுவை பரிசீலித்து, உத்தரவு பிறப்பிக்கப்படும்.

பெரும்பாலும், மறு ஆய்வு மனுக்கள் தள்ளுபடி ஆகி விடும். தீர்ப்பில் வெளிப்படையாக தவறுகள் தெரிந் தால் மட்டுமே, மறு ஆய்வு மனு விசாரணைக்கு ஏற்கப்படும். ஏற்கனவே, கர்நாடக அரசின் மனு தள்ளுபடியாகி உள்ளதால், சசியின் மனுவும் தள்ளுபடியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர், ஆதி.குமரகுரு கூறியதாவது:

ஒருஉத்தரவை மறுபடியும் ஆய்வு செய்ய வேண் டும் என்றால், பெரிய அளவில் அநீதி இழைக்கப் பட்டிருக்க வேண்டும் அல்லது நடைமுறையில் மிகப்பெரிய குறைபாடு இருந்திருக்க வேண்டும். கிரிமினல் வழக்குகளில், பெரும்பாலும் மறு ஆய்வுக்கு வாய்ப்பில்லை. ஏனென் றால்,

கீழ் நீதிமன்றத் தில் இருந்து, ஒவ்வொரு கட்டத்தையும் தாண்டி, வழக்கு விசாரணை வருவதால், அனைத்து விபரங்களும் தெரிந்து விடும். தவறு ஏற்பட, பெரும்பாலும் வாய்ப்பில்லை. 'ரிட்' வழக்கு என்றால், சந்தர்ப்ப சூழ்நிலை களில் மாற்றம் எப்போதும் நிகழலாம் என்ப தால், மறு ஆய்வு கோர முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

வழக்கறிஞர், சி.ராஜசேகரன் கூறும் போது, ''மறு ஆய்வு மனுவில், புதிதாக எந்த முகாந் திரங்களையும் எழுப்ப முடியாது. பொதுவாக, மறு ஆய்வு மனுவை, நீதிபதிகள் ஏற்பது என்பது அரிதானது. சட்ட ரீதியான இறுதி கட்ட மனுவாக கருதப்படும், 'கியூரேட்டிவ்' மனுவை தாக்கல் செய்ய முடியும்,'' என்றார்.

வழக்கறிஞர், ஏ.பி.சூரியபிரகாசம் கூறும் போது, ''மறு ஆய்வு மனு மீது, வழக்கறிஞர்கள் ஆஜராகி, வாதங்களை எடுத்து வைக்க முடி யாது; மறு ஆய்வு மனுவை ஏற்பது, அபூர்வ மாக நடக்கும் விஷயம். ''நீதிபதிகளின் அறை களிலேயே, முடிவு தெரிந்து விடும். இந்த வழக் கில், மறு ஆய்வுக்கு பெரிய அளவில் முகாந்தி ரம் இருப்பதாக, எனக்கு தெரியவில்லை,'' என்றார். - நமது நிருபர் -
மின் வைப்பு தொகை பதிவு அலட்சியத்தால் மக்கள் அதிர்ச்சி

பதிவு செய்த நாள் 14 மே03:18


மின் பயன்பாடு கணக்கு எடுக்கும் ஊழியர்கள், மின் கட்டணம், கூடுதல் வைப்பு தொகை விபரத்தை, தனித்தனியாக குறிப்பிடாமல், மொத்தமாக எழுதுவதால், அதிக கட்டணத்தை பார்த்து, மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மின் வாரியம், புதிய மின் இணைப்பு வழங்கும் போது, மின் நுகர்வோரிடம் இருந்து, காப்பு வைப்பு என்ற பெயரில், குறிப்பிட்ட தொகை வசூலிக்கிறது. இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை, அந்த வைப்பு தொகை மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, மின் இணைப்பு பெறும் போது, குறிப்பிட்டிருந்த அளவை விட, மின் பயன்பாடு அதிகரித்தால், கூடுதல் வைப்பு தொகை வசூலிக்கப்படுகிறது. மின் பயன்பாடு குறைந்திருந்தால், வைப்பு தொகை கிடையாது.

தற்போது, அதிக மின் பயன்பாடு உள்ள நுகர்வோரிடம் இருந்து, கூடுதல் வைப்பு தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது. மின் ஊழியர்கள், மின் கட்டணத்தையும், வைப்பு தொகையையும் மொத்தமாக சேர்த்து கணக்கிட்டு, அட்டையில் எழுதுவதால், மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மின்சார ஒழுங்குமுறை ஆணைய விதிகளின்படி, வீட்டு நுகர்வோரிடம் இருந்து, கூடுதல் வைப்பு தொகை வசூலிக்கப்படுகிறது. அதற்கு வட்டியும் தரப்படுகிறது. மின் பயன்பாடு கணக்கு எடுக்கும் போது, மின் கட்டணம், வைப்பு தொகையை தனித்தனியாக குறிப்பிட்டு எழுதும்படி, ஊழியர்களிடம் தெரிவிக்கப்பட்டது; ஆனால், அதை பலர் கடைபிடிக்கவில்லை.

இருப்பினும், மின் கட்டண ரசீதில், கூடுதல் வைப்பு தொகை எவ்வளவு செலுத்த வேண்டும்; ஏற்கனவே உள்ள வைப்பு தொகை இருப்பு எவ்வளவு; அதற்கு வழங்கப்பட்டுள்ள வட்டி ஆகிய விபரங்கள் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளன. அதை பார்த்து, மக்கள் தெரிந்து கொள்ளலாம். தற்போது, கூடுதல் வைப்பு தொகையை, தவணை முறையிலும் செலுத்தலாம். அதற்கான விபரங்கள் தேவைப்படுவோர், தங்களின் உதவி பொறியாளர்களை அணுகலாம். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -
வெளியேற்றம்?
ஐ.டி., ஊழியர்கள் 56 ஆயிரம் பேர்...
விசா நெருக்கடியால் நிறுவனங்கள் முடிவு 

DINAMALAR

புதுடில்லி:அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், 'எச் --- 1 பி' விசாவுக்கு விதித்துள்ள கட்டுப்பாடு காரணமாகவும், புதிய தொழில்நுட் பத்தின் வரவாலும், இந்த ஆண்டு, 56 ஆயிரம் ஊழியர்களை, ஆட்குறைப்பு செய்ய, ஏழு முக்கிய, ஐ.டி., எனப்படும், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.



அமெரிக்காவில், அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசு பதவியேற்ற பின், அங்கு பணியாற்றும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும், 'எச் - 1 பி' விசாக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கூடுதல் சம்பளம்

மேலும், 'வெளிநாடுகளை சேர்ந்த கம்ப்யூட்டர் புரோகிராமர்களை, எச் - 1 பி விசா மூலம் அமெரிக்காவுக்கு வரவழைத்து பணியமர்த்தும் போது, அவர்களுக்கு கூடுதல் சம்பளம் தர வேண்டும்' எனவும் நிபந்தனைகள் விதிக்கப் பட்டுள்ளன.

இதனால், அமெரிக்காவில் செயல்பட்டு வரும், இந்திய, ஐ.டி., நிறுவனங்கள், இந்தியாவில் இருந்து ஊழியர்களை பணியமர்த்துவதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதையடுத்து, கூடு தல் சம்பளம் மற்றும் விசா கெடுபிடி காரண மாக, பணியில் இருக்கும் ஊழியர்களை ஆட் குறைப்பு செய்ய, ஐ.டி., நிறுவனங்கள் முடிவு செய்துஉள்ளன.

இன்போசிஸ், டெக் மகேந்திரா உட்பட, ஏழு முக்கிய, ஐ.டி., நிறுவனங்கள், இந்த ஆண்டில், 56 ஆயிரம் ஊழியர்களை, ஆட்குறைப்பு செய்ய திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி யுள்ளது.இது குறித்து, ஐ.டி., நிறுவன வட்டாரங்கள் கூறியதாவது:

சர்வதேச போட்டி, தொழில் மந்தநிலை போன்ற காரணங்களால், இந்திய, ஐ.டி., துறை, கடுமை யான நெருக்கடியை சந்தித்து வருகிறது. பல் வேறு வாய்ப் புகளும், வெளிநாட்டு நிறுவனங் களுக்கு செல்கின் றன. இந்நிலையில்,அமெரிக்காவில், அதிபர் டொனால்டு டிரம்ப் அரசு, எச் - 1 பி விசாவுக்கு விதித்து வரும் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக, ஊழியர்களுக்கான செலவு அதிகரித்து வருகிறது; செலவை கணிசமாக குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

ஆட்குறைப்பு

எனவே, திறன் குறைந்த மற்றும் மிக அதிக சம்பளம் பெறும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இந்திய - ஐ.டி., துறை மதிப்பீட்டின் படி, இந்த ஆண்டில், 56 ஆயிரம் ஊழியர்கள் வரை, ஆட்குறைப்பு செய்யப்பட வாய்ப் புள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின. ஐ.டி., நிறுவனங்களின் இந்த முடிவால், அத்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் கலக்கத்தில் ஆழ்ந்து உள்ளனர்.

புதிய தொழில்நுட்பம்

ஐ.டி., துறையில், சமீபகாலமாக, நவீன தொழில்நுட் பங்கள் புகுத்தப்பட்டு வருகின்றன. பல, ஐ.டி., புரோகிராமர்கள் செய்யும் வேலையை, ஒரே ஒரு புரோகிராமர் மூலம், செய்வதற்கு, இந்த தொழில் நுட்பங்கள் பயன்படுகின்றன. இதன் மூலம், ஐ.டி., ஊழியர்களின்எண்ணிக்கையை கணிசமான அளவில் குறைக்க, ஐ.டி., நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன.

துவங்கியது ஆட்குறைப்பு

இந்திய - ஐ.டி., நிறுவனங்கள், ஆட்குறைப்பு நடவடிக் கையை, ஏற்கனவே துவங்கியுள்ளன. இந்த ஆண்டு துவங்கியதில் இருந்து, குறைந்த சம்பளத்திற்கு பணியாற்றக்கூடிய, புதிய ஊழியர்களை,

தொழில் நெருக்கடி

இந்திய - ஐ.டி., நிறுவனங்கள் நெருக்கடியை சந்தித்து வருவது குறித்து, அத்துறை நிபுணர் கள் கூறியதாவது:

இந்திய - ஐ.டி., நிறுவனங் கள், ஊழியர்களை ஆட் குறைப்பு செய்யும் நடவடிக்கையில், இறங்கியுள்ளதற்கு, அமெரிக்க அரசின் 'எச் - 1 பி' விசா கட்டுப்பாடு, புதிய தொழில்நுட்பம் என, பல காரணங்கள் கூறப்பட்டாலும், அந்நிறுவனங்களின் வருவாய் குறைவதும், தொழில் போட்டியும் முக்கிய காரணங்கள்.

ஓராண்டுக்கும் மேலாக, தகவல் தொழில் நுட்பம் சார்ந்த புதிய வாய்ப்புகள், வெளிநாடு களை சேர்ந்த நிறுவனங்களுக்கு அதிக அளவில் கிடைத்து வருகின்றன. வெளிநாட்டு நிறுவனங்களுடன் போட்டி போட்டு, புதிய தொழில் வாய்ப்புகளை பெறும் நிலையில், இந்திய - ஐ.டி., நிறுவனங்கள் இல்லை.

ஊழியர் களின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக் கையில், இந்திய - ஐ.டி., நிறுவனங் கள் இறங்கி யுள்ளதற்கு,இதுவும் ஒரு காரணம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
வீட்டுப் பாடத்தைக் குறைக்கும் சிங்கப்பூர்!

குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே அறிவைத் திணித்து, அவர்களை ஞானிகளாகவும், அறிவுஜீவிகளாகவும் உருவாக்கும் நோக்கில்தான் இன்றைய பாடத்திட்டங்கள் அமைந் திருக்கின்றன.

மே 13, 2017, 03:37 PM

சிங்கப்பூர் கல்வி முறையும் அதற்கு விதிவிலக்கல்ல. அந்நாட்டுப் பள்ளிகள், உலக கல்வித்தரப் பட்டியலில் தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகின்றன.
ஆனால் அங்கு கல்வி தொடர்பாக பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் கொடுக்கப்படும் நெருக்கடி அதிகம் என்பது பரவலான கருத்தாக உள்ளது.

இந்நிலையில், தேர்வு மதிப்பெண்களுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதை சிங்கப்பூர் அரசு தற்போது மறுஆய்வு செய்து வருகிறது.
தரப்பட்டியலைவிட, மாணவர்களை எதிர்காலத்துக்குத் தகுந்த மாதிரி தயார்ப்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தத் திட்ட மிடுகிறது.

வீட்டுப்பாடத்தை குறைப்பது, வெளி விளையாட்டுக்களை ஊக்குவிப்பது, புதிய மதிப்பீட்டு முறையை கொண்டுவருவது என்பதே சிங்கப்பூர் அரசின் புதிய திட்டமாக இருக்கிறது. அதன் மூலம், மாணவர்கள் சந்திக்கும் அழுத்தத்தைக் குறைக்க அரசு முயல்கிறது.

தற்போது அங்கு, ஆரம்பப்பள்ளித் தேர்வுகளுக்காகக் கூட பிள்ளைகள் கூடுதல் பயிற்சிக்கு அனுப்பப்படுகிறார்கள்.

அந்தத் தேர்வின் முடிவுகளைப் பொறுத்தே அவர்களுக்கு மேல்நிலைப்பள்ளி இடங்கள் கிடைக்கும், அவர்களின் எதிர்கால வாழ்வின் வெற்றிக்கு அதுவே சரி என்று பெற்றோர் பலரும் நம்பு கிறார்கள்.

இந்நிலையில், சிங்கப்பூர் அரசின் புதிய திட்டம் நடைமுறைக்கு வந்தால், பிள்ளைகளும் பெற்றோரும் கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு விடுவார்கள் என்பது நிச்சயம்.
16 மணி நேரம் பசி, தாகத்தில் வாடிய ராஜ்தானி பயணிகள்

பதிவு செய்த நாள் 13 மே
2017
20:33


ராஞ்சி: ரயில் புறப்பட்டு பல மணி நேரமாகியும், உணவு மற்றும் குடிநீர் வழங்கப்படாததால், ஆத்திரமடைந்த பயணிகள், ரயிலின் பேன்ட்ரி காரை கொள்ளையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில், முதல்வர் ரகுபர் தாஸ் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது.டில்லியில் இருந்து ராஞ்சிக்கு வாரம் இருமுறை இயக்கப்படும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில், பயணிகளுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கப்படாததால், ரயிலின், 'பேன்ட்ரி கார்' எனப்படும் உணவு தயாரிக்கப்படும் பெட்டியை முற்றுகையிட்டனர்.

இது குறித்து, அந்த ரயிலில் பயணம் செய்த, நுஸ்ரா காதுன், 65, என்பவர் கூறியதாவது:கடந்த புதன் கிழமை மாலை, 4:00 மணிக்கு டில்லியில் இருந்து ராஞ்சிக்கு, ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. இந்த ரயில் ராஞ்சிக்கு செல்ல, 16 மணி நேரம் ஆகும்; இரவு, 9:30 மணியாகியும், குடிநீர் மற்றும் இரவு உணவு வழங்கப்படவில்லை.

ரயில் பெட்டியில் உதவியாளரும் இல்லை. பசி தாங்க முடியாமல், பேன்ட்ரி காருக்கு சென்றவர்கள் அங்கிருந்த உணவுகளை எடுத்து சாப்பிட்டனர். மற்றவர்கள், ரயில் நிற்கும் இடங்களில் தேவையான உணவு மற்றும் குடிநீர் பாட்டில்களை வாங்கினோம். மறு நாள் காலை, ராஞ்சி ரயில் நிலையத்தை வந்தடைந்ததும், தென்கிழக்கு ரயில்வேயின் மூத்த அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து, ராஞ்சி ரயில் நிலைய மூத்த மண்டல வர்த்தக மேலாளர் நீரஜ் குமார் கூறியதாவது:

ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலின் கேட்டரிங் சேவையை, வடக்கு ரயில்வே கவனித்து வருகிறது. ரயில் புறப்பட்ட பின், பேன்ட்ரி கார் மற்றும் ரயில் பெட்டிகளில் இருந்த ஊழியர்கள், முன்னறிவிப்பு இன்றி, திடீரென ரயிலை விட்டு இறங்கியுள்ளனர். இதனால், பயணிகள் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ராஜ்தானி மற்றும் சதாப்தி போன்ற பிரீமியம் ரயில்களில் ஒவ்வொரு பெட்டியிலும், இரண்டு உதவியாளர்கள் இருப்பர். ஆனால், ராஞ்சி ராஜ்தானியில் ஒரு பெட்டிக்கு ஒரு உதவியாளர் என்று, 17 உதவியாளர்களே உள்ளனர்.
விருதுநகரில் இல்லை மருத்துவ கல்லூரி:பிளஸ்2 ல் முதலிடம் பெற்றும் புறக்கணிப்பு

பதிவு செய்த நாள் 14 மே2017 02:08

சிவகாசி:விருதுநகர் மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லுாரி நிறுவ வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கடந்த 1987ம் ஆண்டு பிரித்து புதிதாக உருவானதே விருதுநகர் மாவட்டம். கடந்த 30 கல்வி ஆண்டுகளில் கால்நுாற்றாண்டிற்கு மேலாக விருதுநகர் மாவட்டமே பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் முதல் இடத்தை தக்க வைத்து வகிறது.

ஒரு சில ஆண்டுகளில் மட்டுமே சற்றே சரிவை சந்தித்தாலும் 2 ம் அல்லது 3 ம் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. அரசு பள்ளிகளும் 100 சதவீத தேர்ச்சி பெற்று வருகிறது. இந்தாண்டும் முதல் இடத்தை தக்க வைத்துள்ளது.
கிடப்பில் திட்டம்

இத்தகையை சிறப்பு வாய்ந்த கல்விக்கு பெயர் பெற்ற மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் உயர் கல்வி நிறுவனங்களை ஏற்படுத்த முயற்சிக்க இல்லை. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2014 ம் ஆண்டு சட்டசபை விதி எண் 110 ன் கீழ் விருதுநகரில் அரசு மருத்துவ கல்லுாரி துவங்கப்படும் என அறிவித்தார். முந்தைய தி.மு.க., ஆட்சி காலத்தில் விருதுநகர் கலெக்டர் அலுவலகம் அருகே மருத்துவ கல்லுாரி அமைய இடம் தேர்வு செய்யும் பணி நடந்தது. ஆனால் திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த மாதம் தற்போதைய முதல்வர் பழனிசாமி விருதுநகரில் பல்மருத்துவ கல்லுாரி அமைய அரசாணை பிறப்பித்தார். இதன்படி இக்கல்வியாண்டில் விருதுநகரில் அரசு பல் மருத்துவ கல்லுாரி அமைய வாய்ப்பு உள்ளது. தனியார் பல் மருத்துவ கல்லுாரிகளில் அரசு ஒதுக் கீட்டு இடங்களில் கூட மாணவர்கள் விரும்பி சேர்வதில்லை.
பலன் தரும் மாவட்டம்

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு உருவான தேர்ச்சி விகிதத்தில் பின் தங்கிய திருவாரூர், தேனி, சிவகங்கை போன்ற மாவட்டங்களில் அரசு மருத்துவகல்லுாரிகள் துவங்கப்பட்டுள்ளன. தென் மாவட்டங்களில் வணிகம் மற்றும் உற்பத்தியில் தமிழக அரசிற்கு அதிக வருவாய் ஈட்டித்தருவது விருதுநகர் மாவட்டமே. இதுபோன்று அரசிற்கு பல்வேறு பலன் தரும் மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லுாரி அமைய வேண்டும் என, மாணவர்கள், ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இங்கு மருத்துவ கல்லுாரி துவங்கப்பட்டால் பட்டாசு ஆலைகளால் சூழ்ந்து இருக்கும் சிவகாசியில், அடிக்கடி நிகழும் வெடி விபத்தில் காயமடையும் தொழிலாளிகளை எளிதில் காப்பாற்ற முடியும். பெருமளவு உயிரிழப்பையும் தடுக்க முடியும்.
பிளஸ் 2 முடித்தோர் அடுத்து என்ன செய்ய வேண்டும்?முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி அறிவுரை 

பதிவு செய்த நாள் 13 மே2017 19:26

'பிளஸ் 2 முடித்த மாணவர்கள், எந்த படிப்பை தேர்வு செய்தாலும், படிக்கும் போதே வேலை வாய்ப்புக்கு ஏற்ற, தனித்திறன்களை வளர்க்க வேண்டும்' என, கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பிளஸ் 2 தேர்வில், மாநிலத்தில் முதல் இடம், இரண்டாம் இடம் என்ற, ரேங்கிங் முறைக்கு, தமிழக அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த முடிவு, பள்ளி மாணவர்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்து சென்றுள்ளது.

தனித்திறன்

எனவே, மாணவர்கள் வெறும் மதிப்பெண் என்ற மனப்பாட கல்வியை விட்டு, தனித்திறன் வளர்க்க வேண்டும் என, கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.இது குறித்து, அண்ணா பல்கலையின் முன்னாள் துணைவேந்தரும், தமிழக பள்ளி கல்வித்துறையின் உயர்மட்ட கமிட்டி ஆலோசகருமான, பாலகுருசாமி கூறியதாவது:

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, நல்ல முடிவு கிடைத்துள்ளது. அவர்கள் தேவையற்ற பயத்தை விட்டு, அடுத்த கட்ட வளர்ச்சிக்கு துணிச்சலுடன் செல்ல வேண்டிய நேரம் இது.
'பிளஸ் 2வில், எத்தனை மதிப்பெண் எடுத்தோம் என்பதை விட, அடுத்து என்ன செய்யப் போகிறோம்' என்பதே அவர்களின் முக்கிய முடிவாக இருக்க வேண்டும்.

வேலை வாய்ப்பு

அதிக மதிப்பெண் எடுத்தாலும், குறைந்த மதிப்பெண் எடுத்தாலும், அனைவருக்கும் உயர் படிப்பு வாய்ப்புகளும், அதிக வேலை வாய்ப்புகளும் உள்ளன. அதில், கடினமான படிப்பு, எளிதான படிப்பு என்பதெல்லாம் இல்லை. வேளாண்மை, இன்ஜினியரிங், மருத்துவம், சட்டம் என, இதில், எந்த படிப்பில் சேர்ந்தாலும், மாணவர்களின் படிப்புடன் தனித்திறன்கள் தான், அவர்களை முன்னேற்றி செல்லும். எனவே, அதற்கான முயற்சிகளில் மாணவர்கள் ஈடுபட வேண்டும்.

இனி வரும் காலங்களில், வெறும் மதிப்பெண்ணுக்கு மட்டுமே வேலை கிடைக்கும் என்ற நிலை மாறும். மதிப்பெண்ணுடன் அவர்களின் சிந்தனை, செயல்திறன் இணையாக இருக்க வேண்டும்.
அதற்கு, மாணவர்கள் தயாராக வேண்டும். படிக்கும்போதே, தனித்திறன் வளர்ப்பு, பொது அறிவை மேம்படுத்துதல், தொழில் நுட்பத்தை தெரிந்து கொள்ளுதல் என, செயல்பாடுகள் விரிவடைய வேண்டும்.

உயர் கல்வியில் சேர்ந்தாலும், பல நுழைவு தேர்வுகள் உள்ளன. அதையும் எதிர்கொள்ள வேண்டும். படிப்பு முடிந்த பின், வேலை வாய்ப்புக்கான போட்டி தேர்வுகள் உள்ளன. அதற்கு புத்தக மதிப்பெண்ணை விட, சிந்தனை திறனே உதவும். அதற்கேற்ப மாணவர்கள், தங்களை தயார்படுத்திக் கொள்வது அவசியம்.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -
நீட்' தேர்வில் மாறுபட்ட வினாத்தாள் ஏன்? விளக்கம் கேட்கிறது மத்திய அரசு

பதிவு செய்த நாள் 14 மே
2017 04:46



பெங்களூரு:''ஹிந்தி, ஆங்கில வினாத்தாள்களை விட, பெங்காலி உள்ளிட்ட மொழிகளில், 'நீட்' வினாத்தாள் கடினமாக இருந்ததாக புகார் வந்துள்ளதால், அது குறித்து, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யிடம் விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது,'' என, மத்திய அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் கூறினார்.

பத்து மொழிகள்

மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான, பொது நுழைவுத் தேர்வான நீட் தேர்வு, நாடு முழுவதும் சமீபத்தில் நடந்தது. இதில், ஹிந்தி, ஆங்கிலம், தமிழ், பெங்காலி, மராத்தி உட்பட, 10 மொழிகளில் தேர்வு நடந்தது. இதில், ஹிந்தி, ஆங்கில வினாத்தாளிலிருந்து, மற்ற மொழி வினாத்தாள் மாறுபட்டு இருப்பதாக புகார் எழுந்தது. குறிப்பாக, பெங்காலி வினாத்தாள் கடினமாக இருந்ததாக, மாணவ, மாணவியர் புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூரில் நேற்று நடந்த விழாவில், மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, பிரகாஷ் ஜாவடேகர் பேசியதாவது:

ஏற்கனவே நடந்த தேர்வுகளில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்ததை அடுத்து, சமீபத்தில் நடந்த தேர்வுக்கு, உடை விஷயத்தில், கடினமான விதிமுறைகள் பின்பற்றப்பட்டன. இதில், ஒரு சில மாணவ, மாணவியருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது; கேரளாவில் ஒரு மாணவிக்கு நடந்த கெடுபிடி குறித்து, சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக, நான்கு ஆசிரியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.

நடவடிக்கை

ஹிந்தி, ஆங்கில வினாத்தாள்களை விட, மற்ற மாநில மொழி வினாத்தாள் மாறுபட்டு இருந்ததாகவும் புகார் வந்துள்ளது. இந்த பிரச்னைக்கு என்ன காரணம் என, விளக்கம் அளிக்கும்படி, சி.பி.எஸ்.இ.,யிடம் கேட்கப்பட்டுள்ளது. விளக்கம் அளிக்கப்பட்டதும், அது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.
பிளஸ் 2 தற்காலிக சான்றிதழ் நாளை முதல் கிடைக்கும்

பதிவு செய்த நாள் 13 மே2017 19:06

 பிளஸ் 2 மாணவர்களுக்கு, நாளை முதல் தற்காலிக சான்றிதழ் வழங்கப்படுகிறது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள், நேற்று முன்தினம் வெளியாகின. தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், நாளை வெளியாகிறது. www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், நாளை முதல், மாணவர்களே பதிவிறக்கம் செய்யலாம்.

வரும், 17 முதல், மாணவர்களுக்கு, பள்ளியிலும்; தனித் தேர்வர்களுக்கு, தேர்வு மையத்திலும், தற்காலிக சான்றிதழ் வழங்கப்படும். இந்த ஆண்டு, மதிப்பெண் சான்றிதழில் ஆங்கிலத்துடன், தமிழிலும் மாணவர் பெயர் இடம் பெறும்.

தேர்வை சரியாக எழுதியும், மதிப்பெண் முழுமையாக கிடைக்கவில்லை என, சந்தேகம் ஏற்பட்டால், மாணவர்கள் மறுகூட்டலுக்கும், மறுமதிப்பீடுக்கும் விண்ணப்பிக்கலாம். மறுகூட்டல் மட்டும் என்றால், மறுகூட்டலுக்கு மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். மறுமதிப்பீடும் தேவை என்றால், விடைத்தாள் நகலை முதலில் பெற வேண்டும்; அதை ஆய்வு செய்த பின், மறுகூட்டலா, மறுமதிப்பீடா என்பதை முடிவு செய்யலாம்.

இதற்கான விண்ணப்ப பதிவு, நேற்று முன்தினம் துவங்கியது; நாளை முடிகிறது. மாணவர்கள், பள்ளியிலும், தனித்தேர்வர்கள், தேர்வு மையத்திலும், அதற்குரிய கட்டணம் செலுத்தி, விண்ணப்பிக்க வேண்டும் என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

- நமது நிருபர் -

Saturday, May 13, 2017

நன்றி குங்குமம் டாக்டர்

உளவியல் தொடர்


சமீபத்தில் ஒரு நண்பரைச் சந்தித்தேன். 40 வயதான அவரைப் பார்த்த எனக்கு அடையாளமே தெரியவில்லை. 60 வயதையொட்டிய தோற்றம். நரை கூடியிருந்தது. பாதி கேசம் காணோம். விரக்தியாகச் சிரித்தார். அவருக்கு காலை எழுந்ததிலிருந்து ஓட்டம்... ஓட்டம்... ஓட்டம்... இரவு 10 மணிக்கு வீட்டுக்குள் நுழைந்தால் தூக்கம்...மீண்டும் காலை 8 மணிக்கு ஓட்டம் ஆரம்பம். கிடைக்கும் ஒரே ஒரு விடுமுறை நாளும் பாதி நாள் படுக்கையிலேயே கழியும். வீட்டு வாசலில் போடப்பட்ட செய்தித்தாளை எடுக்காமல் அடுத்த நாள் இரண்டு செய்தித்தாள்களாகச் சேர்த்து உள்ளே எடுத்துப்போவார்.

இதற்கெல்லாம் காரணம் மேற்சொன்ன நண்பருக்கு Premature aging பிரச்னை. காரணம் ஸ்டிரெஸ்(Stress) என்னும் மன அழுத்தம். இயல்பை, இயற்கையை மீறிய வாழ்க்கையை வாழ்கிறார். மன அழுத்தம் மிகுதியால் தலைமுடி உதிர்ந்து போவது மருத்துவ ரீதியான ஓர் உண்மையே.இப்போதெல்லாம் திடீரென்று சாலையில் நிறைய ஃப்ளக்ஸ் போர்டுகளை பார்க்க முடிகிறது.இன்னார் காலமாகிவிட்டார் என்று அறிவிக்கும் பேனர்கள். அதிர்ச்சியாக இருக்கும் நமக்கு. நேற்று நன்றாக நடமாடிக் கொண்டிருந்தவர் இன்றைக்கு இல்லை. என்ன ஆயிற்று? 40 வயதைக்கூட தாண்டியிருக்க மாட்டாரே என்று ஆதங்கமாக இருக்கும். என்ன காரணம்? மாரடைப்பு, பக்கவாதம், குடிநோயால் கல்லீரல் பாதிப்பு, குடிநோயால் கணைய அழற்சி நோய் ஏற்பட்டு உயிரிழப்பு, பான்பராக், சிகரெட் பழக்கங்களால் வாய் புற்றுநோய் - இப்படியாகதான் நீள்கின்றன காரணங்கள்.

எங்கே போகிறது நமது இளைய சமுதாயம்? தீய பழக்கவழக்கங்கள்தான் காரணங்கள் என்றில்லை. ‘நேற்று ஒரு டெத் பார்த்தேன், அவருக்கு 35 வயதுதான் இருக்கும். எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. வெற்றிக்கு மேல் வெற்றி பெற்று தொழிலில், குடும்பத்தில் உச்சத்திலிருக்கும் ஆளுமை அந்த நபர். ரத்தக்கொதிப்பு, சர்க்கரை என எந்த நோயும் இல்லை. கடுமையான மாரடைப்பு. அதற்கும் காரணம் அவருடைய தொடர்ந்த மன அழுத்தம்’ என்றார் எனது நண்பர். அவர் இதய நோய் மருத்துவர்.

உழைப்பு வாழ்வில் முக்கியம்தான்; ஆனால் உழைப்பு மட்டுமே முக்கியம் அல்ல. பணமும் வெற்றியும் தேவைதான்; ஆனால், அவை மட்டுமே வாழ்க்கை அல்ல. புகழும் பாராட்டும் தேவைதான்; அவை வரும்போது அனுபவிக்க நாம் உயிருடன் இருக்க வேண்டாமா?
சிறிது நேரம் நண்பர் இதய சிகிச்சை மருத்துவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். நகரம், நரகமாகி வருவதையும் மாறிவிட்ட எந்திரமயமான வாழ்க்கை முறைகள் மரண தேசத்துக்கு வாயிற்படிகளாக மாறிவிட்ட அவலத்தையும் அவரும் நானும் பகிர்ந்து புலம்பி பின் விடைபெற்றோம்.சரி.... இந்த மன அழுத்த அரக்கனிடமிருந்து தப்பிப்பது எப்படி?உபயோகமான சில டிப்ஸ்...

பிரச்னைகளை முதலில் எழுதுங்கள். எது முக்கியம்? எது மிக, மிக முக்கியம்? எதற்கு முன்னுரிமை கொடுத்துத் தீர்க்க முயற்சிக்க வேண்டும் என்பதை வரிசைப்படுத்தி எழுதுங்கள். பாதிப் பிரச்னையை அப்போதுதான் இனம் கண்டுகொள்ள முடியும். குடும்பப் பிரச்னை, தொழில் ரீதியான பிரச்னை, உறவுகளில் சிக்கல், உடல்நலக் கோளாறு என்று அனைத்து சிரமங்களையும் ஒரு குப்பைத் தொட்டியில் போட்டு அடைத்தது போன்று உங்கள் மூளையில் சேகரம் செய்யாதீர்கள்.

பிரச்னைகளின் தீவிரத்தைப் பகுத்தாய்ந்து பார்க்கும்போது பாதி பிரச்னைகளுக்கு இப்போது நாம்  உடனடியாகக் கவனம் செலுத்தத் தேவையில்லை என்பது புரியும். உண்மையில் அங்கே நீங்கள் தேவையில்லாமல் போட்டு குழப்பிக் கொண்டிருந்திருக்கிறீர்கள். 2 ஆண்டுகளுக்குப் பின்பு வரும் பிரச்னையை விட நாளை நாம் எதிர்கொள்ளப்போகும் பிரச்னையே முக்கியமானது.நீங்கள் பயந்ததைப் போன்று எத்தனை விஷயங்கள் நடந்து முடிந்திருக்கின்றன? 2 வாரத்திலிருந்து 2 ஆண்டுகள் வரைஉங்கள் பயங்களை பின்னோக்கி கவனித்துப் பாருங்கள். 85 சதவிகிதம் நீங்கள் பயந்த அளவுக்கு மோசமான பின்விளைவுகளை கொண்டிருப்பதில்லை என்பதை உணர்வீர்கள். பாதிப் பேருக்கு மேல் தாங்கள் கற்பனை செய்ததைவிட அந்தப் பிரச்னையை மிக நன்றாகவே கையாண்டு இருப்பதாக
தெரிவிக்கிறார்கள்.

மூச்சுப் பயிற்சிமன அழுத்தம் அதிகமாக இருக்கும் வேளைகளில் ஓரிடத்தில் அமர்ந்து கொள்ளுங்கள். 4 வரை எண்ணிக்கொண்டே ஆழமாக மூச்சை இழுங்கள். மீண்டும் 4 வரை எண்ணிக்கொண்டே இழுத்த மூச்சை உள்ளேயே தக்க வைக்கவும். இப்போது மீண்டும் 4 வரை எண்ணிக்கொண்டு அந்த மூச்சை மெதுவாக வெளியேற்றவும். இப்படி தொடர்ந்து 5 நிமிடங்கள் செய்து பாருங்கள். உங்கள் மன அழுத்தம் லேசாகக் குறைந்திருப்பதை உணர்வீர்கள்.கடின வேலையின் போதோ கோபம் கொந்தளித்து கிளம்பும்போதோ இதனை முயற்சி செய்யலாம். இடம் முக்கியம் அல்ல. செய்வதுதான் முக்கியம். கவனிக்கவும்... சாதாரணமாக மூச்சை இழுப்பது போன்ற செயல் அல்ல இது. நமதுஉதரவிதானம்(Diapharagm), அதாவது நமது நுரையீரலுக்கும் வயிற்றுக்கும் இடையிலுள்ள ஒரு பகுதி - நன்கு மேலும் கீழும் வரும்படியாகச் செய்யும் பயிற்சி இது. இதனை Diapharagmatic breathing என்பார்கள். கிட்டத்தட்ட பிராணாயாமம் போன்றதே இது.

உடற்பயிற்சி நல்ல ஒரு மன அழுத்த போக்கிஅமைதியான சூழலில் நடைபயிற்சி என்பதில் தொடங்கி ஒரு ஹைடெக் உடற்பயிற்சி கூடத்தில் அரை மணி நேரம் ஒர்க் அவுட் செய்வது வரை எல்லாமே இதற்கு உதவும். நீச்சல் மிகச் சிறந்தது. கடுமையான உடற்பயிற்சிக்குப் பிறகு உடலில் சுரக்கும் எண்டார்பின்ஸ்(Endorphins) ஹார்மோன்கள் மன அழுத்தத்துக்கு காரணமான கார்ட்டிசால்(Cortisol) ஹார்மோன்களை குறைக்கும் தன்மை கொண்டது.மசாஜ் என்னும் அற்புதக்கலைமுறையாக, அறிவியல்பூர்வமாக அளிக்கப்படும் மசாஜ் என்பது மருந்து சீட்டில் நாங்கள் மாத்திரை எழுதிக்கொடுப்பதற்கு சமம். ‘தரமான, முறையான மசாஜுக்காக செய்யும் செலவு நல்வாழ்வுக்கான முதலீடாகவே கருதுவேன்’ என்பார் சுயமுன்னேற்ற நூலறிஞரும் பேச்சாளருமான ராபின் சர்மா. உடலின் மீது ஆயுர்வேத எண்ணெய்களும் மூலிகைகளும் உபயோகித்து மசாஜ் செய்யும்போது உடலில் சேகரமாகி இருக்கும் நச்சுப் பொருட்கள் எல்லாம் வெளியேறிவிடுகின்றன. அதனுடனே மன அழுத்தமும்!

ஒரேமாதிரியான பணிகளை ஒரேமாதிரியான பாணியில் தினமும் செய்யாதீர்கள்அதே காரியம், அதே கவலை, அதே பயம், அதே மன அழுத்தம் அப்படியே தொடரும். பணி இடையே சில விஷயங்களை மாற்றிச் செய்யப் பழகுங்கள். உதாரணத்துக்கு நீங்கள் அமர்ந்திருக்கும் இருக்கையை வேறு திசையில் மாற்றிப்போட்டு அமருங்கள்.இளையராஜாவோ, ரஹ்மானோ பிடித்த இசையை மென்மையாக ஒலிபரப்புங்கள். நகைச்சுவை காட்சிகளை தொலைக்காட்சியில் பாருங்கள். வேலையின் அழுத்தம் தீவிரமாகும்போது திடீரென்று அதற்கு ஒரு பிரேக் போடுங்கள். சிறு நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள். இசையும் கேட்கலாம். மனதுக்கு இதமான மெல்லிசை மன அழுத்தத்துக்கான சிறந்த மருந்து என்பது அறிவியல் உண்மை.

மிதமான சூட்டில் கிரீன் டீ அருந்துவதும் பலன் அளிக்கும். பிரியமானவர்களை போனில் அழையுங்கள். வெறுமனே ஒரு ஹாய் போதுமானது. அழுத்தம் நொடியில் உருகிவிடும். அதுவும் இல்லாவிட்டால் கண்ணை மூடி இருக்கையில் தலை சாய்த்து சிறு உளச்சுற்றுலா(Mental tour) செல்லுங்கள். அதாவது, உங்கள் மனதுக்கு பிடித்த இயற்கை சூழல், பிரியமானவர்களுடன் கழிந்த இனிய பொழுதுகள், மன நிறைவு மிக்க அற்புத தருணங்களை அசை போடுங்கள். 5 நிமிடம் போதும், அத்தனை அழுத்தமும் அழிந்தேபோகும். மனம் லேசாகிவிடும்.இந்த ஆக்கப்பூர்வமான காரியங்களைச் செய்தாலே மன அழுத்தத்தை வரவிடாமல் விரட்டிவிடலாம். கனி இருப்ப காய் கவர்வது என்பது போல, இந்த நல்ல வழிகளை விட்டுவிட்டு டென்ஷனை குறைக்கிறேன் பேர்வழி என்று புகைப்பிடித்தால் அதிலுள்ள நிகோடின் இன்னும் மூளையைத் தூண்டி டென்ஷனை அதிகரிக்கவே செய்யும்.மதுவைத் தொட்டாலும் அது தற்காலிக நிவாரணமே அளிக்கும். போதை இறங்கியவுடன் நேற்றைய மன அழுத்தம் இன்று இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்பதை உணருங்கள். ஆல்கஹால் ஒரு கவலை நீக்கி அல்ல. அது ஒரு பதற்றம் கொடுக்கும் பொருள்(Anxiogenic) என்பதை மனதில் ஆழமாக பதிய வைத்துக் கொண்டால், கவலையாக இருக்கிறேன் என்ற பெயரில் அதை நாடவே மாட்டீர்கள்!
 புதிய வசதி அளித்தும் பலன் இல்லை பான் - ஆதார் இணைப்பதில் சிக்கல் நீடிப்பு

சென்னை: பான் - ஆதார் இணைக்க புதிய வசதி ஏற்படுத்தப்பட்டும், இவற்றை இணைப்பதில் சிக்கல் நீடிப்பதாக பொதுமக்கள் பலர் தெரிவிக்கின்றனர்.
 பான் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பதை மத்திய அரசு கட்டாயம் ஆக்கியுள்ளது. இருப்பினும், பெயர் குழப்பம் காரணமாக, பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க முடியவில்லை. ஆதாரில் தந்தை பெயர் இனிஷியலாக உள்ளது. ஆனால் பெரும்பாலான பான் அட்டைகளில் தந்தை பெயர் பின்னால் சேர்த்து பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை சாப்ட்வேர் ஏற்காததால் இணைக்க முடியவில்லை. இதற்கு மாற்றாக வருமான வரித்துறை இணையதளத்தில் ஒரு முறை பாஸ்வேர்டு மூலம் ஆதாரில் பெயர் மாற்றியோ, பான் கார்டு நகலை அனுப்பியோ இணைக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

 இந்நிலையில், வருமான வரி இணையதளத்தில் எளிதாக பான் - ஆதார் இணைக்க புதிய லிங்க்கை வருமான வரித்துறை நேற்று முன்தினம் அறிமுகம் செய்தது. ஆதார், பான் கார்டில் உள்ள பிறந்த தேதி, பாலினம் சரியாக இருந்தாலே எளிதாக இணைக்கலாம் என கூறப்பட்டது. ஆனால், இணைப்பு செய்ய முயற்சித்தவர்கள் பலர் தோல்வியை தழுவினர். ஆதார் இணைப்பு லிங்க்கில் சென்று ஆதார் மற்றும் பான் கார்டுகளில் உள்ள பெயரை பதிவு செய்த பிறகு, ‘ஆதார் மற்றும் பான் கார்டில் உள்ள பெயர் ஒத்துப்போகவில்லை’ என்று தகவல் தோன்றுகிறது. பின்னர், யுஐடிஏஐ இணையதளத்தில் சென்று ஆதார் கார்டு விவரங்களை மாற்றவும், பான் எண் விவரங்களை மாற்றவும் லிங்க் வருகிறது. அதில் சென்றால் ஆதார் விவரம் அடிப்படையில் பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும் பக்கத்துக்கு செல்கிறது. அதில் புதிதாக விண்ணப்பிக்கும்போது வசூலிக்கப்படும் கட்டணத்தை செலுத்தும் நிலை ஏற்படுகிறது. இதனால் வரி செலுத்துவோர் குழப்பம் அடைந்தனர். இதற்கு மாற்று வழி காணவேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

திருவாரூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 88.77 சதவீத மாணவர்கள் தேர்ச்சி

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 88.77 சதவிகிதம் பேர் தேர்ச்சி. தமிழகத்தில் 25வது இடத்தை பிடித்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் நடைப்பெற்ற பிளஸ் 2 பொது தேர்வினை 6 ஆயிரத்து 61 மாணவர்கள், 8 ஆயிரத்து 505 மாணவிகள் என மொத்தம் 14 ஆயிரத்து 566 பேர்கள் எழுதினர். இதில் நேற்று வெளியிடப்பட்ட முடிவில் 5 ஆயிரத்து 134 மாணவர்கள், 7 ஆயிரத்து 796 மாணவிகள் என மொத்தம் 12 ஆயிரத்து 930 பேர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் தேர்வு எழுதியவர்களில் 88.77 சதவிகித தேர்ச்சியாகும்.

கடந்தாண்டு தேர்ச்சி சதவிகிதம் 84.18 என்ற நிலையில் தற்போது 4.59 சதவிகிதம் தேர்ச்சி கூடுதலாக கிடைத்துள்ளது. இதேபோல் கடந்தாண்டு மாநில அளவில் தேர்ச்சி சதவிகித பட்டியலில் திருவாரூர் மாவட்டம் 31வது இடத்தில் இருந்த நிலையில் தற்போது 25வது இடத்தினை பிடித்துள்ளது. மாவட்டத்தில் ராயபுரம் மற்றும் பேரையூர் அரசு மேல்நிலை பள்ளிகள் மற்றும் விஷ்ணுபுரம் ஜார்ஜ் உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி, வாழச்சேரி மதர் இந்தியா சுயநிதி மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சியினை பெற்றுள்ளன. இதேபோல் பேரளம் ஸ்ரீ சங்கரா மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி, நீடாமங்கலம் நீலன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் செயிண்ட் ஜுட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உட்பட மொத்தம் 14 மெட்ரிக் பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சியினை பெற்றுள்ளன.

கடும் நிபந்தனைகளுடன் தேர்வு முடிவு அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 10 ஒன்றியங்களிலும் ஒன்றியத்திற்கு ஒரு இடம் என்ற அடிப்படையில் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு காலை 9.30 மணியளவில் தேர்வு முடிவு குறித்த சி.டி.க்கள் கல்வி துறை அலுவலர்கள் மூலம் பள்ளி நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டது. அதன்படி திருவாரூர் ஒன்றியத்திற்கு புலிவலம் அரசு பள்ளியில் சி.டி வழங்கப்பட்ட நிலையில் 1, 2, 3 ரேங்க் பெற்ற மாணவர்களின் மதிப்பெண் விவரங்களை வெளியிடகூடாது, பரிசுகள் வழங்க கூடாது, தேர்ச்சி சதவிகிதத்தினை தெரிவிக்க கூடாது, டிஜிட்டல் பேனர் போன்ற விளம்பரங்கள் பள்ளி முன்பாக வைக்க கூடாது என பல்வேறு நிபந்தனைகளை கல்வி அலுவலர்கள் தெரிவித்து அதன் பின்னரே சி.டியினை வழங்கினர்.

இதனால் எந்த பள்ளியில் எத்தனை பேர் தேர்ச்சி, எவ்வளவு மதிப்பெண் போன்ற விவரங்களை மற்ற பள்ளிகள் தெரிந்து கொள்ள முடியாத நிலையில் தங்களது பள்ளி குறித்த மாணவர்களின் மதிப்பெண் விபரங்களை கூட வெளியில் விளம்பரப்படுத்த முடியாமல் பள்ளி நிர்வாகிகள் தவித்தனர். மேலும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் மதியம் 12 மணி வரையில் எவ்வித தகவலையும் அலுவலர்கள் கூற மறுத்ததால் மாவட்டத்தின் தேர்வு முடிவுகள் குறித்த விபரத்தினை சேகரிக்க முடியாமல் பத்திரிக்கை மற்றும் தொலைகாட்சி நிருபர்களும் தவித்தனர்.
Dailyhunt

பள்ளித் தேர்வுகள்... விருதுநகர் மாவட்டத்தின் வெற்றி ரகசியம் என்ன?

எம்.குமரேசன்

விருதுநகர் மாவட்டத்துக்குப் பல பெருமைகள் உண்டு. ஆம், தமிழகத்தின் அரசுச் சின்னமான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கொண்டது, ரமண மகஷிரி அவதரித்த திருச்சுழி அமைந்திருப்பது, கல்விக்கண் திறந்த காமராஜரைத் தந்தது... என இந்த மாவட்டத்தின் பெருமைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். கடந்த 1985-ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து பிரிந்து விருதுநகர் மாவட்டம் உருவானது. பட்டாசுக்கு சிவகாசி, டெக்ஸ்டைலுக்கு ராஜபாளையம், எண்ணெய்த் தயாரிப்புக்குப் புகழ்பெற்ற அருப்புக்கோட்டை போன்ற நகரங்களும் இந்த மாவட்டத்தில்தான் உள்ளன.

இவை தவிர, விருதுநகர் மாவட்டத்துக்கு மேலும் ஒரு சிறப்புப் பெருமையும் உள்ளது. தமிழ்நாட்டிலேயே பள்ளித்தேர்வுகளில் விருதுநகர் மாவட்டம்தான் தொடர்ந்து முதல் இடத்தைப் பிடித்துவருகிறது. குறிப்பாக, பத்தாம் வகுப்புத் தேர்வில் கிட்டத்தட்ட26 ஆண்டுகளாக விருதுநகர் மாவட்டம்தான் முதல் இடம். ஒரே ஒருமுறை மட்டும் 0.13 என்ற விகிதத்தில் தூத்துக்குடி மாவட்டம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இன்று வெளியான ப்ளஸ் டூ தேர்விலும் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ-மாணவியர் 97.85 சதவிகிதம் பேர் தேர்வாகி மாநிலத்திலேயே முதல் இடத்தைப் பிடித்திருக்கின்றனர். பக்கத்து மாவட்டமான ராமநாதபுரம் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது.

விருதுநகர் மாவட்டத்தைப் பொறுத்தவரை 1,373 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. இவற்றில் 984 அரசுத் தொடக்கப் பள்ளிகள், 227 நடுநிலைப் பள்ளிகள், 132 உயர்நிலைப் பள்ளிகள், 145 மேல்நிலைப் பள்ளிகள் அடங்கும். தனியார் பள்ளிகளுடன் அரசுப் பள்ளிகள் போட்டிபோடுவதை இந்த மாவட்டத்தில் பார்க்க முடியும். அரசுப் பள்ளிகளில் சேர்க்கை குறைந்தால் உடனடியாக ஆசிரியர் - ஆசிரியைகள் வீடு வீடாகச் சென்று பெற்றோர்களைச் சந்தித்துப் பேசுவார்கள். அரசுப் பள்ளிகளில் மாணாக்கர்களுக்கு உள்ள வசதிகள் குறித்து விளக்குவார்கள். விருதுநகர் மாவட்டத்தில் 14 விதமான மாணவர்நலத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஆங்கிலவழிக் கல்வியும் அரசுப் பள்ளிகளில் வழங்கப்படுகிறது. பெற்றோர் - ஆசிரியர் சங்கங்களும் சிறந்த முறையில் இயங்குகின்றன. இதனால், பள்ளிக்கு மட்டம்போடும் மாணவர்களைப் பார்ப்பதே அரிது. இடை நிற்றலும் குறைவு. தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளில் மாணாக்கர்களுக்குச் சிறப்புப் பயிற்சி, பாடம்வாரியாகத் தேர்வுக்கு வழிகாட்டுதல், சிரமப்படும் பாடங்களில் மாணவர்கள் மீது தனிக்கவனம் செலுத்துதல், தேர்வில் குறைவான மதிப்பெண்கள் எடுப்பவர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்துவது, முக்கியப் பாடங்களை உள்ளடக்கிய மாதிரித் தேர்வு நடத்துவது போன்ற விஷயங்களால் ஆசிரியர்கள் மாணவர்களைப் பட்டைத்தீட்டுகின்றனர்.

இந்த மாவட்டத்தில் இன்னொரு விஷயத்தையும் பார்க்க முடிகிறது. ஆசிரியர்- ஆசிரியைகளை, பக்கத்துப் பள்ளிகளுக்குப் பயிற்சிக்காக அனுப்புகின்றனர். பல விஷயங்களை அவர்களும் புதிதாகக் கற்றுக்கொள்கின்றனர். பாடம் நடத்தும்விதத்தில் பல நுணுக்கங்களைத் தெரிந்துகொள்ள முடிகிறது. இதனால் தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளுக்கிடையே தேர்ச்சி விகிதத்தில் பெரிய வித்தியாசம் தெரிவதில்லை.

படிப்பில் படுமோசமாக இருக்கும் மாணவர்களுக்கு ஊக்கமளித்து பத்தாம் வகுப்பு வரை தேர்ச்சி பெற வைத்துவிடுகிறார்கள். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுவிட்டால் மேற்படிப்பு படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் மாணவர்களிடையே ஏற்பட்டுவிடும் என்பதற்காகத்தான் இந்த உத்தியை ஆசிரியர்கள் கடைப்பிடிக்கின்றனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலரில்இருந்து கடைநிலை ஊழியர் வரை அந்த மண்ணைச் சேர்ந்த அனைவருமே கல்வி விஷயத்தில் பொறுப்புமிக்கவர்களாக இருக்கின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவன் ஒருவன், மாஸ்கோவில் உள்ள ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பயிற்சிபெற தேர்வாகியிருந்தான். சிறுவனை ரஷ்யாவுக்கு அனுப்பும் வசதி, பெற்றோரிடம் இல்லை. இதைக் கேள்விப்பட்ட ரஷ்யாவில் வசிக்கும் விருதுநகரைச் சேர்ந்த தொழிலதிபர், அந்த மாணவனைத் தனது சொந்த செலவிலேயே மாஸ்கோவுக்கு வரவழைத்து, ஆராய்ச்சி மையப் பயிற்சிக்குத் தேவையான உதவிகளைச் செய்தார். விருதுநகர் மாவட்ட மக்கள் எங்கே சென்றாலும் மண் மீது பற்றுடன் இருப்பதால், திறமைமிகுந்த மாணவர்களுக்கு எளிதாக உதவி கிடைத்துவிடுகிறது. அந்தத் தொழிலதிபரிடம் பேசியதுபோது, ''எங்க ஊர் பையன்... அவனுக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு. அதை அவன் இழந்துடக் கூடாதுங்கிறது என்னோட எண்ணம்'' என்றார் மண்வாசனையுடன்.

விருதுநகர் மாவட்டத்தின் அடுத்த இலக்கு பொதுத்தேர்வுகளில் 100 சதவித தேர்ச்சியை எட்டுவதுதான். விருதுநகர் மாவட்டம்போலவே தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டமும் மாறவேண்டும் என்பதே நமது ஆசையும்!

'வைலட் பூ'... ஃபேஸ்புக்கின் புது வரவு!



ஃபேஸ்புக்கில் அன்பு, கோபம், வருத்தம் இதனுடன் இனி, நன்றியையும் வெளிப்படுத்தலாம். "Grateful" என்னும் வைலட் நிற லைக் குறியீட்டை அறிமுகப்படுத்தியுள்ளது, ஃபேஸ்புக்.

ஃபேஸ்புக், நாளுக்கு நாள் புதுப்புது சிறம்பம்சங்களை அறிமுகப்படுத்திவருகிறது. 2015ஆம் ஆண்டு வரை லைக் செய்யும் ஆப்ஷன் மட்டுமே இருந்தது. 2016 ஆம் ஆண்டில் அன்பு, ஹாஹா, வாவ், சோகம், கோபம் ஆகிய உணர்வுகளை வெளிப்படுத்தும் ஆறு ஈமோஜிக்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

அண்மையில், பதிவுகளின் கீழ் போடப்படும் கமென்ட்டுகளுக்கும் இந்த ஆறு உணர்வுகளின் குறியீட்டு 'லைக்'குகள் அறிமுகம் செய்யப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, நன்றி தெரிவிக்கும் வைலட் பூ ஈமோஜியை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது, ஃபேஸ்புக். 'எல்லா ஆப்ஷனும் வருகிறது. ஆனால், பதிவுகளுக்கு அன்லைக் செய்யும் ஆப்ஷன் மட்டும் இன்னும் வரவில்லை' என்று கடிந்துகொள்கின்றனர் நெட்டிசன்ஸ்.

ஒவ்வொரு ஆண்டும் அன்னையர் தினத்தை சிறப்பிக்கும் விதமாக தற்காலிமாக ஒரு ஈமோஜியை அறிமுகப்படுத்துவது வழக்கம். இந்த வைலட் பூவும் மே 14 ஆம் தேதி வரவுள்ள அன்னையர் தினத்துக்காக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கலாம் என்றுக் கூறப்படுகிறது.

Dailyhunt

தேர்ச்சி விகிதத்தில் கடைசி இடம்... களையெடுக்கப்படும் கடலூர் மாவட்டக் கல்வித்துறை!

இன்று வெளியான பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் மாநிலத்திலேயே கடைசி இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது கடலூர் மாவட்டம். ஏற்கெனவே நோய்வாய்ப்பட்டிருக்கும் கடலூர் மாவட்டம் கல்வியிலும் பின்னோக்கிப் போவது சமூக ஆர்வலர்களிடையே பெரும் குமுறலை ஏற்படுத்தியிருக்கிறது

இதுகுறித்து சமூக ஆர்வலர் நிஜாமுதீன், "எப்போதும் கடைசி இடத்தைப் பிடிப்பதற்கு விழுப்புரம் மாவட்டமும், கடலூர் மாவட்டமும்தான் போட்டிபோடும். இந்த முறை அந்த இடத்தை கடலூர் மாவட்டம் பிடித்துவிட்டது.

அரசுப் பள்ளிகளில் அதிகளவில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதும், கடலூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகள் பெருமளவில் கடற்கரையோரங்களிலும், கிராமப் புறங்களிலும் அமைந்திருப்பதும்தான் இதற்குக் காரணம். அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் நகர்ப்புறங்களில் குடியிருப்பதால் சரியான நேரத்துக்கு அவர்கள் பணிக்குச் செல்வதில்லை. ஏதோ கடமைக்கு வந்து செல்கிறார்கள். அதை அதிகாரிகளும் கவனிப்பதில்லை. இரண்டு வருடத்துக்கு முன் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதை எஸ்.எம்.எஸ் மூலம் அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தும் முறை இருந்தது. அப்போது ஓரளவுக்கு ஆசிரியர்கள் பயந்துகொண்டு பள்ளிக்கு வந்தார்கள். அதை மீண்டும் கொண்டுவரவேண்டும். அதேபோல், ஆசிரியர்களை அவர்கள் பணிபுரியும் பகுதிகளிலேயே குடியமர்த்த அரசு ஏற்பாடு செய்யவேண்டும். மேலும், அரசு ஆசிரியர்கள் தனியார் பள்ளி மாணவர்களுக்கு மணிக்கணக்கில் தனி வகுப்பு நடத்தி தங்கள் வருமானத்தைப் பெருக்கிக்கொள்வதில்தான் குறிக்கோளாக இருக்கிறார்கள். எனவே, அரசு ஆசிரியர்கள் தனி வகுப்பு நடத்த தடை விதிக்கவேண்டும்.

அரசுப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கைக்காக அரசு சிறப்புக் கவனம் செலுத்துவதில்லை. தனியார் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்புப் பாடத்தைப் பதினொன்றாம் வகுப்பிலேயே நடத்தி முடித்துவிடுகிறார்கள். இரண்டு வருடம் ஒரு பாடத்தைப் படிப்பதால் அந்த மாணவர்கள் அதிக மதிப்பெண்களை வாங்கி அரசுப் பள்ளி மாணவர்களைப் பின்னுக்குத் தள்ளிவிடுகிறார்கள். இந்நிலை மாறவேண்டுமானால், மாவட்ட நிர்வாகமானது அரசுப் பள்ளிகள்மீதும், ஆசிரியர்கள்மீதும் சிறப்புக் கவனம் செலுத்தி கல்வி வளர்ச்சிக்கு வழிவகை செய்யவேண்டும்" என்றார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜேஷ், "மாவட்டத்தில் கல்வித்தரம் இவ்வளவு மோசமானதற்கு என்ன காரணம் என்று, கல்வித்துறை அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தவுள்ளோம். அதன் மூலம் அடுத்த ஆண்டு கல்வி வளர்ச்சிக்காக அனைத்து நடவடிக்கைகளும் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்படும்" என்றார்.
Dailyhunt

அரசு மருத்துவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த சிவகங்கை கலெக்டர்!

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மலர்விழி, தனது மகனுக்கு அந்த மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டார்.

சிவகங்கை மாவட்ட கலெக்டராக இருப்பவர் மலர்விழி. நேற்று சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவமனையில் டீன் மருத்துவர்களின் சாதனைக்கான கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதில் மாவட்ட ஆட்சியர் மலர்விழியும் கலந்துகொண்டார். அப்போது, மானாமதுரையைச் சேர்ந்த பெண்ணின் வயிற்றில் 10 கிலோ கட்டி அகற்றியதற்காகவும், திருப்புவனத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு சிக்கலான இடத்தில் ஆப்ரேசன் செய்து சக்சஸ் செய்ததற்காகவும் பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது, கலெக்டர் தன்னுடைய மகனுக்கு கண் சம்மந்தமான பிரச்னை இருந்ததால் அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டார்.

Dailyhunt

மதங்களைக் கடந்த மானாமதுரை நிலாச்சோறு திருவிழா!

அனைத்து மதத்தினரும் கலந்து கொண்ட நிலாச் சோறு திருவிழா மானாமதுரையில் அமர்க்களமாக நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரைத் திருவிழா நடைபெறும். இதில் பத்தாவது நாள் விழாவாக நிலாச் சோறு சாப்பிடுவதும் ஒரு திருவிழா தான். சுத்துப்பட்டு கிராமங்களில் இருந்து சின்ன யானை வாகனத்தில் மக்கள் சாரைசாரையாக வருவார்கள். சாம்பார் சாதம், புளியோதரை என சைவம் சாப்பிடுபவர்களும் சிக்கன், மட்டன், காடை என அசைவம் சாப்பிடுபவர்களும் குடும்பத்துடன் வந்து உணவுப் பரிமாறும் நிகழ்வு நடைபெறும். இதில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என சகல மதத்தினரும் கலந்துகொள்வார்கள். மனக் கவலைகளை மறந்து உற்சாகமாக பேரக் குழந்தைக்கு உணவு ஊட்டிக்கொண்டிருந்த அங்குமணியிடம் பேசுகையில்,

“நான் 40 வருசமா நிலாச் சோறு திருவிழாவுக்கு வந்துட்டு இருக்கேன். அப்ப ஆத்துல மணல் மெத்தை மாதிரி இருக்கும், இப்ப கட்டாந்தரையில உட்காரவேண்டி இருக்கு. சமீபகாலமாகத்தான் எல்லா மதத்துக்காரவுகளும் இங்கே வர்றாங்க. உறவுக்காரவுங்க பக்கத்து வீட்டுக்காரவுங்கனு நாங்க கொண்டு வந்த சாப்பாட்ட பகிர்ந்துக்குவோம். செலவ பத்தி கவலைப்படுறது இல்ல'' என்கிறார் பூரிப்புடன். மேலும், தீபாவளி, பொங்கல் கூட இப்படி கொண்டாட மாட்டோம். இன்னைக்குத் தான் கறிகடைகள்ல கூட்டம் அலைமோதும். கிராமங்கள்ல ஆடு பிடிச்சு, கறி கூறு போடுவாங்க என்கிறார் அந்த ஊர்க்காரர்.

எத்தனை திருவிழா இருந்தாலும் இந்தத் திருவிழாவுல இருக்குற சந்தோசம் வேற எதுலயும் இருக்காது என்கிறார் கைக்குழந்தையோடு வந்திருந்த டீச்சர் ஸ்டெல்லா.
Dailyhunt
சென்னையின் முதல் சுரங்கப் பாதை மெட்ரோ ரயில் சேவை, நாளை முதல் தொடங்குகிறது.

 
 
சென்னையில் கோயம்பேட்டில் இருந்து பரங்கிமலை வரையும், சின்னமலை முதல் விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவை ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரையிலான சுரங்கவழி மெட்ரோ ரயில் சேவை நாளை தொடங்குகிறது.

சுமார் எட்டு கி.மீ தொலைவுக்கு இந்த சுரங்க ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு மெட்ரோ கட்டுப்பாட்டு அறையில் இருந்து, இந்த ரயில் சேவை இயக்கப்பட உள்ளது.
இதற்கிடையே, நாளை தொடங்க உள்ள சென்னை திருமங்கலம்- நேரு பூங்கா வரையிலான சுரங்க மெட்ரோ ரயிலில், செல்போன் சிக்னல் கிடைக்காது என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து, மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் திட்ட இயக்குநர் ராஜீவ் ப்ரீவீதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "சுரங்கப்பாதையில் ரயிலை இயக்க அதிகசெலவாகும் என்பதால், கட்டணம் குறையாது. இந்தாண்டு இறுதிக்குள், சென்ட்ரல் வரையிலான, மெட்ரோ சேவை தொடங்கப்படும்.

மெட்ரோ சுரங்கப்பாதையில் செல்போன் சிக்னல் வசதியை சரிசெய்ய, இன்னும் இரண்டு மாதங்கள் ஆகும். குறிப்பாக, சிக்னல் வசதியை மேம்படுத்த ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. சென்னையில், அடுத்தாண்டு முழு மெட்ரோ ரயில் சேவையும் பயன்பாட்டுக்கு வரும்" என்றார்.
Dailyhunt

"செட் டாப்" பாக்ஸ் இலவசமாக தரும் அரசு கேபிள் நிறுவனம் - ரூ.125க்கு 200 சேனல் பார்க்கலாம்

தமிழகத்தில் பொதுமக்களின் பொழுது போக்குக்காக பல்வேறு சேனல்கள் ஒளிபரப்பப்படுகிறது. இதில், சிறுவர்களுக்கான சேனல்கள், விளையாட்டு, சீரியல், செய்திகள் என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தனித்தனி சேனல்கள் உள்ளன.

இதுபோன்ற சேனல்களில் நிகழ்ச்சிகளை பார்க்க ஒவ்வொரு ஏரியாவுக்கு ஒரு கட்டணம் என தனியார் கேபிள் நிறுவனங்கள் வசூலிக்கின்றன. இதனை தடுக்க அரசு சார்பில் கேபிள் நிறுவனம் தொடங்க முடிவு செய்தது. அதன்படி விரைவில் ‘டிஜிட்டல் கேபிள்’ தொடங்கப்பட உள்ளது.
இந்த டிஜிட்டல் சேவையில் மாதம் ரூ.125 செலுத்தினால், 200 சேனல்கள் வரை நிகழ்ச்சிகளை வழங்க, அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதற்கான உரிமத்தை பலகட்ட போராட்டத்துக்கு பின், தமிழக அரசு கேபிள், 'டிவி' நிறுவனத்துக்கு, மத்திய தொலைத்தொடர்பு ஆணையமான, 'டிராய்' வழங்கியுள்ளது.

மேலும், வரும் ஜூலை 17ம் தேதிக்குள், வாடிக்கையாளர்களுக்கு, 'செட் - டாப் பாக்ஸ்'களை வழங்காவிட்டால், டிஜிட்டல் உரிமத்தை ரத்து செய்துவிடுவோம் எனவும் கண்டிஷன் வைத்துள்ளது.
இதைதொடர்ந்து தமிழக அரசு கேபிள் நிறுவனம் சார்பில், 70 லட்சம், 'செட் - டாப் பாக்ஸ்' கொள்முதல் செய்ய டெண்டர் கோரியுள்ளது. டிஜிட்டல் சேவை மூலமாக, தனியார் நிறுவனங்களை விட, அதிக சேனல்களை வழங்கவும் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு கேபிள் நிறுவன அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது, கேபிள் வாடிக்கையாளர்களுக்கு, ரூ.130 கட்டணத்தில் குறைந்தது, 100 சேனல்கள் வழங்க வேண்டும் என டிராய் அறிவித்துள்ளது.
அதற்கு அதிகமான சேனல்களை வழங்கு விரும்பினால் கூடுதல் செலவு செய்து, பெற்று கொள்ளலாம். அதன் அடிப்படையில், அரசு கேபிள் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு மாதம் ரூ.125க்கு வழங்க இருக்கிறோம். அதில், 200 சேனல்களை பார்க்கலாம்; 'செட் - டாப் பாக்ஸ்' இலவசமாக தருவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Dailyhunt

"உருவம் மட்டுமல்ல செயல்களிலும் எங்களுக்கு வெற்றியே..." - ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டையர்கள்

சேலம் மாவட்டம், கொங்கணாபுரத்தை அடுத்த குண்டிருசன்பாளையம் கிராமத்தை சோந்தவர் மாணிக்கம். டெய்லர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு கார்த்திகா, கீர்த்திகா என்ற மகள்கள் உள்ளனர். இவர்கள் இரட்டையர்கள்.

கார்த்திகா, கீர்த்திகா ஆகியோர் கொங்கணாபுரம் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து, பொது தேர்வு எழுதினர். இதன் முடிவு நேற்று வெளியாகி, இருவரும் தேர்ச்சி பெற்றனர்.

ஒரே உருவ அமைப்பில்  இருந்து ஆச்சரியம் அடைய செய்து வரும் அவர்கள், பிளஸ் 2 தேர்வில் ஒரே மதிப்பெண்ணை (1117) பெற்று ஆச்சரியம் அடைய செய்துள்ளனர்.
 
இதுகுறித்து மாணவிகள் கூறுகையில், ஒரே உருவ அமைப்பில் மட்டுமின்றி, எங்களது எண்ணமும், செயலும் ஒரே மாதிரியாகவே இருக்கும். அதை போலவே எங்களது பிளஸ் 2 மதிப்பெண்ணும் கிடைத்துள்ளது.
மேலும், எதிர் வரும் காலங்களில் நாங்கள் இருவரும் ஒரே கல்லூரியில், ஒரே துறையில் படித்துஅதிலும் சாதனை செய்வோம் என்றனர்.
Dailyhunt

NEWS TODAY 18.12.2025