Saturday, May 13, 2017

திருவாரூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 88.77 சதவீத மாணவர்கள் தேர்ச்சி

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 88.77 சதவிகிதம் பேர் தேர்ச்சி. தமிழகத்தில் 25வது இடத்தை பிடித்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் நடைப்பெற்ற பிளஸ் 2 பொது தேர்வினை 6 ஆயிரத்து 61 மாணவர்கள், 8 ஆயிரத்து 505 மாணவிகள் என மொத்தம் 14 ஆயிரத்து 566 பேர்கள் எழுதினர். இதில் நேற்று வெளியிடப்பட்ட முடிவில் 5 ஆயிரத்து 134 மாணவர்கள், 7 ஆயிரத்து 796 மாணவிகள் என மொத்தம் 12 ஆயிரத்து 930 பேர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் தேர்வு எழுதியவர்களில் 88.77 சதவிகித தேர்ச்சியாகும்.

கடந்தாண்டு தேர்ச்சி சதவிகிதம் 84.18 என்ற நிலையில் தற்போது 4.59 சதவிகிதம் தேர்ச்சி கூடுதலாக கிடைத்துள்ளது. இதேபோல் கடந்தாண்டு மாநில அளவில் தேர்ச்சி சதவிகித பட்டியலில் திருவாரூர் மாவட்டம் 31வது இடத்தில் இருந்த நிலையில் தற்போது 25வது இடத்தினை பிடித்துள்ளது. மாவட்டத்தில் ராயபுரம் மற்றும் பேரையூர் அரசு மேல்நிலை பள்ளிகள் மற்றும் விஷ்ணுபுரம் ஜார்ஜ் உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி, வாழச்சேரி மதர் இந்தியா சுயநிதி மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சியினை பெற்றுள்ளன. இதேபோல் பேரளம் ஸ்ரீ சங்கரா மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி, நீடாமங்கலம் நீலன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் செயிண்ட் ஜுட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உட்பட மொத்தம் 14 மெட்ரிக் பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சியினை பெற்றுள்ளன.

கடும் நிபந்தனைகளுடன் தேர்வு முடிவு அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 10 ஒன்றியங்களிலும் ஒன்றியத்திற்கு ஒரு இடம் என்ற அடிப்படையில் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு காலை 9.30 மணியளவில் தேர்வு முடிவு குறித்த சி.டி.க்கள் கல்வி துறை அலுவலர்கள் மூலம் பள்ளி நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டது. அதன்படி திருவாரூர் ஒன்றியத்திற்கு புலிவலம் அரசு பள்ளியில் சி.டி வழங்கப்பட்ட நிலையில் 1, 2, 3 ரேங்க் பெற்ற மாணவர்களின் மதிப்பெண் விவரங்களை வெளியிடகூடாது, பரிசுகள் வழங்க கூடாது, தேர்ச்சி சதவிகிதத்தினை தெரிவிக்க கூடாது, டிஜிட்டல் பேனர் போன்ற விளம்பரங்கள் பள்ளி முன்பாக வைக்க கூடாது என பல்வேறு நிபந்தனைகளை கல்வி அலுவலர்கள் தெரிவித்து அதன் பின்னரே சி.டியினை வழங்கினர்.

இதனால் எந்த பள்ளியில் எத்தனை பேர் தேர்ச்சி, எவ்வளவு மதிப்பெண் போன்ற விவரங்களை மற்ற பள்ளிகள் தெரிந்து கொள்ள முடியாத நிலையில் தங்களது பள்ளி குறித்த மாணவர்களின் மதிப்பெண் விபரங்களை கூட வெளியில் விளம்பரப்படுத்த முடியாமல் பள்ளி நிர்வாகிகள் தவித்தனர். மேலும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் மதியம் 12 மணி வரையில் எவ்வித தகவலையும் அலுவலர்கள் கூற மறுத்ததால் மாவட்டத்தின் தேர்வு முடிவுகள் குறித்த விபரத்தினை சேகரிக்க முடியாமல் பத்திரிக்கை மற்றும் தொலைகாட்சி நிருபர்களும் தவித்தனர்.
Dailyhunt

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...