புதிய வசதி அளித்தும் பலன் இல்லை பான் - ஆதார் இணைப்பதில் சிக்கல் நீடிப்பு
சென்னை: பான் - ஆதார் இணைக்க புதிய வசதி ஏற்படுத்தப்பட்டும், இவற்றை இணைப்பதில் சிக்கல் நீடிப்பதாக பொதுமக்கள் பலர் தெரிவிக்கின்றனர்.
பான் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பதை மத்திய அரசு கட்டாயம் ஆக்கியுள்ளது. இருப்பினும், பெயர் குழப்பம் காரணமாக, பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க முடியவில்லை. ஆதாரில் தந்தை பெயர் இனிஷியலாக உள்ளது. ஆனால் பெரும்பாலான பான் அட்டைகளில் தந்தை பெயர் பின்னால் சேர்த்து பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை சாப்ட்வேர் ஏற்காததால் இணைக்க முடியவில்லை. இதற்கு மாற்றாக வருமான வரித்துறை இணையதளத்தில் ஒரு முறை பாஸ்வேர்டு மூலம் ஆதாரில் பெயர் மாற்றியோ, பான் கார்டு நகலை அனுப்பியோ இணைக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், வருமான வரி இணையதளத்தில் எளிதாக பான் - ஆதார் இணைக்க புதிய லிங்க்கை வருமான வரித்துறை நேற்று முன்தினம் அறிமுகம் செய்தது. ஆதார், பான் கார்டில் உள்ள பிறந்த தேதி, பாலினம் சரியாக இருந்தாலே எளிதாக இணைக்கலாம் என கூறப்பட்டது. ஆனால், இணைப்பு செய்ய முயற்சித்தவர்கள் பலர் தோல்வியை தழுவினர். ஆதார் இணைப்பு லிங்க்கில் சென்று ஆதார் மற்றும் பான் கார்டுகளில் உள்ள பெயரை பதிவு செய்த பிறகு, ‘ஆதார் மற்றும் பான் கார்டில் உள்ள பெயர் ஒத்துப்போகவில்லை’ என்று தகவல் தோன்றுகிறது. பின்னர், யுஐடிஏஐ இணையதளத்தில் சென்று ஆதார் கார்டு விவரங்களை மாற்றவும், பான் எண் விவரங்களை மாற்றவும் லிங்க் வருகிறது. அதில் சென்றால் ஆதார் விவரம் அடிப்படையில் பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும் பக்கத்துக்கு செல்கிறது. அதில் புதிதாக விண்ணப்பிக்கும்போது வசூலிக்கப்படும் கட்டணத்தை செலுத்தும் நிலை ஏற்படுகிறது. இதனால் வரி செலுத்துவோர் குழப்பம் அடைந்தனர். இதற்கு மாற்று வழி காணவேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

No comments:
Post a Comment