Sunday, May 14, 2017

வெளியேற்றம்?
ஐ.டி., ஊழியர்கள் 56 ஆயிரம் பேர்...
விசா நெருக்கடியால் நிறுவனங்கள் முடிவு 

DINAMALAR

புதுடில்லி:அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், 'எச் --- 1 பி' விசாவுக்கு விதித்துள்ள கட்டுப்பாடு காரணமாகவும், புதிய தொழில்நுட் பத்தின் வரவாலும், இந்த ஆண்டு, 56 ஆயிரம் ஊழியர்களை, ஆட்குறைப்பு செய்ய, ஏழு முக்கிய, ஐ.டி., எனப்படும், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.



அமெரிக்காவில், அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசு பதவியேற்ற பின், அங்கு பணியாற்றும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும், 'எச் - 1 பி' விசாக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கூடுதல் சம்பளம்

மேலும், 'வெளிநாடுகளை சேர்ந்த கம்ப்யூட்டர் புரோகிராமர்களை, எச் - 1 பி விசா மூலம் அமெரிக்காவுக்கு வரவழைத்து பணியமர்த்தும் போது, அவர்களுக்கு கூடுதல் சம்பளம் தர வேண்டும்' எனவும் நிபந்தனைகள் விதிக்கப் பட்டுள்ளன.

இதனால், அமெரிக்காவில் செயல்பட்டு வரும், இந்திய, ஐ.டி., நிறுவனங்கள், இந்தியாவில் இருந்து ஊழியர்களை பணியமர்த்துவதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதையடுத்து, கூடு தல் சம்பளம் மற்றும் விசா கெடுபிடி காரண மாக, பணியில் இருக்கும் ஊழியர்களை ஆட் குறைப்பு செய்ய, ஐ.டி., நிறுவனங்கள் முடிவு செய்துஉள்ளன.

இன்போசிஸ், டெக் மகேந்திரா உட்பட, ஏழு முக்கிய, ஐ.டி., நிறுவனங்கள், இந்த ஆண்டில், 56 ஆயிரம் ஊழியர்களை, ஆட்குறைப்பு செய்ய திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி யுள்ளது.இது குறித்து, ஐ.டி., நிறுவன வட்டாரங்கள் கூறியதாவது:

சர்வதேச போட்டி, தொழில் மந்தநிலை போன்ற காரணங்களால், இந்திய, ஐ.டி., துறை, கடுமை யான நெருக்கடியை சந்தித்து வருகிறது. பல் வேறு வாய்ப் புகளும், வெளிநாட்டு நிறுவனங் களுக்கு செல்கின் றன. இந்நிலையில்,அமெரிக்காவில், அதிபர் டொனால்டு டிரம்ப் அரசு, எச் - 1 பி விசாவுக்கு விதித்து வரும் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக, ஊழியர்களுக்கான செலவு அதிகரித்து வருகிறது; செலவை கணிசமாக குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

ஆட்குறைப்பு

எனவே, திறன் குறைந்த மற்றும் மிக அதிக சம்பளம் பெறும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இந்திய - ஐ.டி., துறை மதிப்பீட்டின் படி, இந்த ஆண்டில், 56 ஆயிரம் ஊழியர்கள் வரை, ஆட்குறைப்பு செய்யப்பட வாய்ப் புள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின. ஐ.டி., நிறுவனங்களின் இந்த முடிவால், அத்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் கலக்கத்தில் ஆழ்ந்து உள்ளனர்.

புதிய தொழில்நுட்பம்

ஐ.டி., துறையில், சமீபகாலமாக, நவீன தொழில்நுட் பங்கள் புகுத்தப்பட்டு வருகின்றன. பல, ஐ.டி., புரோகிராமர்கள் செய்யும் வேலையை, ஒரே ஒரு புரோகிராமர் மூலம், செய்வதற்கு, இந்த தொழில் நுட்பங்கள் பயன்படுகின்றன. இதன் மூலம், ஐ.டி., ஊழியர்களின்எண்ணிக்கையை கணிசமான அளவில் குறைக்க, ஐ.டி., நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன.

துவங்கியது ஆட்குறைப்பு

இந்திய - ஐ.டி., நிறுவனங்கள், ஆட்குறைப்பு நடவடிக் கையை, ஏற்கனவே துவங்கியுள்ளன. இந்த ஆண்டு துவங்கியதில் இருந்து, குறைந்த சம்பளத்திற்கு பணியாற்றக்கூடிய, புதிய ஊழியர்களை,

தொழில் நெருக்கடி

இந்திய - ஐ.டி., நிறுவனங்கள் நெருக்கடியை சந்தித்து வருவது குறித்து, அத்துறை நிபுணர் கள் கூறியதாவது:

இந்திய - ஐ.டி., நிறுவனங் கள், ஊழியர்களை ஆட் குறைப்பு செய்யும் நடவடிக்கையில், இறங்கியுள்ளதற்கு, அமெரிக்க அரசின் 'எச் - 1 பி' விசா கட்டுப்பாடு, புதிய தொழில்நுட்பம் என, பல காரணங்கள் கூறப்பட்டாலும், அந்நிறுவனங்களின் வருவாய் குறைவதும், தொழில் போட்டியும் முக்கிய காரணங்கள்.

ஓராண்டுக்கும் மேலாக, தகவல் தொழில் நுட்பம் சார்ந்த புதிய வாய்ப்புகள், வெளிநாடு களை சேர்ந்த நிறுவனங்களுக்கு அதிக அளவில் கிடைத்து வருகின்றன. வெளிநாட்டு நிறுவனங்களுடன் போட்டி போட்டு, புதிய தொழில் வாய்ப்புகளை பெறும் நிலையில், இந்திய - ஐ.டி., நிறுவனங்கள் இல்லை.

ஊழியர் களின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக் கையில், இந்திய - ஐ.டி., நிறுவனங் கள் இறங்கி யுள்ளதற்கு,இதுவும் ஒரு காரணம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...