Monday, April 17, 2017

பட்டச் சான்றிதழ்களில் தந்தையின் பெயரை கட்டாயமாக்க வேண்டாம்: மேனகா காந்தி

By DIN  |   Published on : 16th April 2017 11:30 PM  |   
Menakagandhi
Ads by Kiosked
மாணவர்களின் பட்டப் படிப்புச் சான்றிதழ்களில் தந்தையின் பெயரைக் குறிப்பிடுவதைக் கட்டாயமாக்க வேண்டாம் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறைக்கு மத்திய மகளிர் நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக, மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கணவரைப் பிரிந்து வாழும் தாய்மார்கள் சிலர் என்னை அணுகி, தங்களது பிள்ளைகளின் பட்டப் படிப்புச் சான்றிதழ்களை, தந்தையின் பெயரைக் குறிப்பிடாமல் பெறுவதில் சிரமங்கள் ஏற்படுவதாக முறையிட்டனர்.
மணமுறிவு ஏற்படுவதும், கணவன் - மனைவி பிரிந்து வாழ்வதும் சகஜமாகிவிட்ட இக்காலத்தில், அதற்கேற்ப விதிகளிலும் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும்.
கணவரைப் பிரிந்து வாழும் தாய்மார்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் விதிகளிலும் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டியது அவசியம் என்று அந்தக் கடிதத்தில் மேனகா காந்தி குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்பு, கணவரைப் பிரிந்து வாழும் பிரியங்கா குப்தா என்பவர், அமைச்சர் மேனகா காந்திக்கும், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கும் கடந்த ஆண்டு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
அதில், தனது மகளின் கடவுச் சீட்டில் தனது கணவரின் பெயரைக் குறிப்பிடாத வகையில் விதிகளில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
அதையடுத்து, கடவுச் சீட்டுப் பெற விண்ணப்பிக்கும்போது, தாய், தந்தை ஆகிய இருவரின் பெயர் தேவையில்லை; ஒருவர் பெயர் மட்டுமே போதுமானது என்றும், திருமணமாகி கணவரைப் பிரிந்து வசிப்பவர்கள், திருமணச் சான்றிதழ்களை சமர்ப்பிக்கத் தேவையில்லை என்றும் வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது.

No comments:

Post a Comment

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள...

DINAMANI வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்...