Friday, April 21, 2017

பொறியியல் படிப்புக்கு எப்போது விண்ணப்பிக்கலாம்?
SAKTHIVEL MURUGAN G

பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான அனைத்துப் பணிகளையும் அண்ணா பல்கலைக்கழகம் மேற்கொண்டு வருகிறது. இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேர்வதற்காக விண்ணப்பம் மே 1 தேதி முதல் வழங்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருக்கிறது. மே 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.



மே-12ம் தேதி பன்னிரண்டாம் வகுப்புக்கான பொது தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அறிவித்து இருக்கிறார். பொதுத்தேர்வில் எவ்வளவு மதிப்பெண் பெற்றிருக்கிறீர்கள் என்ற விவரத்தை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். அதன்பின்பு இணையத்தில் விண்ணப்பித்த விவரங்களை நகலோடு அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பத்தை ஜூன் மாதம் 3-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். ஜூன் மாதம் 20-ம் தேதி ரேண்டாம் எண்ணும், 22-ம் தேதி ரேங்க் பட்டியலையும் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிடும். அதன் பின்பு, ஜூன் மாதம் 27-ம் தேதி கவுன்சிலிங் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு மே 7ம் தேதி நடைபெறுகிறது. நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு அதன் பின்பு மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் நடைபெற வேண்டும். அதன் பின்பு பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங் நடத்தத் திட்டமிட்டு இருப்பதால் கவுன்சிலிங் நடைபெறுவதற்கான தேதி மாற வாய்ப்பு உள்ளது.

பொறியியல் படிப்புக்கான விண்ணப்பத்தை ஆன்லைன் வழியாக விண்ணப்பித்தால் மட்டும் போதுமானது. இணையத்தில் விண்ணப்பிக்கும் போது கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்றவற்றை பயன்படுத்தி விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தலாம். விண்ணப்பக்கட்டணம் குறித்த விவரங்கள் ஏப்ரல் 30 தேதி வெளியிடப்படும். கடந்த ஆண்டு பொதுப்பிரிவு, பிற்படுத்தப்பட்ட பிரிவினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ரூ. 500 ரூபாயும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி பிரிவைச் சார்ந்தவர்களுக்கு ரூ. 250 கட்டணமாகப் பெற்றிருக்கிறது.

விண்ணப்பத்துடன் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழின் நகல், பன்னிரண்டாம் வகுப்பின் மதிப்பெண் நகல் - பொதுத்தேர்வு முடிவு வெளியானவுடன் இணையத்தில் மதிப்பெண் வெளியிடப்படும். அதனை பிரிண்ட் எடுத்து இணைக்கப்பட வேண்டும். இதனுடன் சாதி சான்றிதழ் நகல், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வின் ஹால் டிக்கெட், முதல் பட்டதாரியாக இருந்தால் அதற்கான சான்றிதழையும் இணைத்து அனுப்ப வேண்டும்.

விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர், உடல் ஊனமுற்றோர்களுக்கான பிரிவில் விண்ணப்பிப்பவர்கள் அதற்கான சான்றிதழை இணைக்க வேண்டும். கவுன்சிலிங் போது அனைத்துச் சான்றிதழ்களுடன் மதிப்பெண் சான்றிதழையும், பள்ளி இட மாற்றுச்சான்றிதழ் எடுத்துவர வேண்டும். இதுவரை முதல் பட்டதாரிக்கான சான்றிழையும், சாதி சான்றிதழ் போன்றவற்றைப் பெறாமல் இருந்தால் உடனே விண்ணப்பித்து சான்றிதழ்களைப் பெற்று பிரதிகளை விண்ணப்பத்துடன் இணைக்கவும்.

விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர், உடல் ஊனமுற்றோருக்கான இடங்களுக்கு முன்னதாகவே கவுன்சிலிங் நடைபெறும். அதன் பின்பு பொது கவுன்சிலிங் தொடங்கப்படும். வெக்கேஷனல் பிரிவு படித்தவர்களுக்குத் தனியாகவும் கவுன்சிலிங் நடைபெறும் என்பதை எல்லாம் முன்னரே தெரிந்துகொண்டு விண்ணப்பிப்பது நல்லது.

தமிழ்நாட்டில் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளும், பல்வேறு பாடப்பிரிவுகளில் 1,50,000-க்கும் மேற்பட்ட இடங்கள் இருக்கின்றன. இதில் இடம்பெறத் தவறாமல் விண்ணப்பிப்பது அவசியம். பொதுப்பிரிவை சார்ந்த மாணவராக இருந்தால் 50% மதிப்பெண்ணையும், பிற்படுத்தப்பட்ட பிரிவினைச் சார்ந்த மாணவர் 45% மதிப்பெண்ணையும், இதர பிரிவினர் 40% மதிப்பெண்ணையும் குறைந்தப்பட்ச மதிப்பெண்ணாக பெற்றிருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

விண்ணப்பப் படிவங்கள் பெறுவதற்கும், இதர விவரங்களை தெரிந்துகொள்ளவும் https://www.annauniv.edu/ என்ற இணையத்தளத்தில் உள்ளே சென்று TNEA 2017 என்ற இணைப்பினை கிளிக் செய்தால் அனைத்துத் தகவல்களையும் பெறலாம்.

No comments:

Post a Comment

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள...

DINAMANI வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்...