டாக்டர்களை பாதுகாக்க 'அடியாட்கள்' பஞ்சாப் மருத்துவமனைகள் அதிரடி
பதிவு செய்த நாள் 06 மே
2017
00:53
அமிர்தசரஸ்:நோயாளிகள் இறந்துவிட்டால், அவரது உறவினர்கள், டாக்டர்களை தாக்குவதை தடுக்க, 'அடியாட்களை' நியமிக்க, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகள், முடிவு செய்துள்ளன.
பஞ்சாப் மாநிலத்தில், அமரீந்தர் சிங் தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
மாநிலத்தில், சமீபகாலமாக, மருத்துவமனையில் நோயாளி இறந்துவிட்டால், அவரது உறவினர்கள், மருத்துவமனையை சூறையாடுவதும், டாக்டர்களை தாக்குவதும் அதிகரித்துள்ளது.
மூன்று சம்பவங்கள்
அமிர்தசரசில் மட்டும், கடந்த, 10 நாட்களில், இது போன்று, மூன்று சம்பவங்கள் நடந்துள்ளன. அதிலும், தனியார் மருத்துவமனைகள் தான், இதில் அதிகம் பாதிக்கப்படுகின்றன. இதனால், தனியார் மருத்துவமனைகளில், பணியாற்ற டாக்டர்கள் பயப்படுகின்றனர்.இதையடுத்து, டாக்டர்கள் தாக்கப்படுவதை தடுக்க, அடியாட்களை நியமிக்க, தனியார் மருத்துவமனைகள் முடிவு செய்துள்ளன.
இது பற்றி அமிர்தசரசில் உள்ள போர்ட்டீஸ் மருத்துவமனை இயக்குனர், டாக்டர் அருண் சோப்ரா கூறியதாவது:பெரும்பாலான மரணங்கள், நோயின் பாதிப்பு காரணமாகவே ஏற்படுகின்றன. ஆனால், நோயாளி இறந்துவிட்டால், அதற்கு, டாக்டர்களின் அலட்சியமே காரணம் என்ற எண்ணம், மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
அதனால், நோயாளியின் உறவினர்கள், டாக்டர்களை தாக்குவதும், மருத்துவமனையை சூறையாடுவதும், வழக்கமாகிவிட்டது. நாடு முழுவதும், இந்தப் பிரச்னையை, தனியார் மருத்துவமனைகள் சந்தித்து வருகின்றன.நோயாளி இறந்து விட்டதற்காக, அவரது உறவினர்கள், வன்முறையில் ஈடுபடுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
மருத்துவமனைகளில், போதிய பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எனினும், டாக்டர்கள் தாக்கப்படு
வதையும், மருத்துவமனை சூறையாடப்படுவதையும் முழுமையாக தடுக்க முடியவில்லை. இதையடுத்து, சிறப்பு பாதுகாப்பு படை ஒன்றை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
டாக்டர்களை நோயாளியின் உறவினர்களை தாக்க முற்பட்டால், அவர்களிடமிருந்து டாக்டர்களை காப்பாற்றும் பணியில் இந்த சிறப்பு படையில் இடம் பெற்றுள்ளவர்கள் ஈடுபடுவர்.
இவர்கள் மக்களை தாக்க மாட்டார்கள்; டாக்டர் களை தாக்குபவர்களை பிடித்து போலீசில் ஒப்படைப்பர். மருத்துவமனையில், அனைத்து பகுதியிலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
பிரச்னை ஏற்பட்டு, நிலைமை கைமீறி போகும் போது, டாக்டர்களை காப்பாற்றும் பணியில், எங்களின் சிறப்பு பாதுகாப்பு படையினர் ஈடுபடுவர். ஏனெனில், சம்பவம் நடந்து முடிந்து, நிலைமை விபரீதமானபின்தான், போலீசார் வருகின்றனர்.
சிறப்பு பாதுகாப்பு படை
அதனால், டாக்டர்களையும், மருத்துவமனையையும் காப்பாற்ற வேண்டியது அவசியம் என்பதால்தான், இந்த சிறப்பு பாதுகாப்பு படையை நியமிக்க, தனியார் மருத்துவமனைகள் முடிவு
செய்துள்ளன.டாக்டர்களை தாக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டும், இந்த பிரச்னைக்கு தீர்வு ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment