Sunday, May 7, 2017

மது குடித்த எலிகள்: பீஹார் போலீசார் 'காமெடி'

பதிவு செய்த நாள் 06 மே2017 22:47



பாட்னா, பீஹாரில், போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு, கிடங்குகளில் வைக்கப்பட்டிருந்த, ஒன்பது லட்சம் லிட்டர் மது பானங்களை, எலிகள் குடித்து விட்டதாக, உயர் அதிகாரிகள் கூட்டத்தில், போலீசார் தெரிவித்தது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீஹாரில், ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த நிதிஷ் குமார் முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தில், ஆர்.ஜே.டி., எனப்படும் லாலு பிரசாத்தின், ராஷ்ட்ரீய ஜனதா தளம் - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது.
தேர்தல் பிரசாரத்தின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், கடந்த ஆண்டு ஏப்ரல் முதல், பீஹாரில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது.

எனினும், அரசின் உத்தரவை மீறி, பல இடங்களில் மதுபானங்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. இதை தடுக்கும் வகையில், மாநில போலீசார் அதிரடி சோதனை நடத்தி, மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இவை அனைத்தும், அந்தந்த போலீஸ் ஸ்டேஷன்களுக்கு சொந்தமான கிடங்குகளில் வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை அழிப்பது தொடர்பாக, கோர்ட் மற்றும் மாநில அரசிடம் அனுமதி பெறுவது குறித்து, போலீஸ் அதிகாரி களின் கூட்டம் நடந்தது. அப்போது, உயர் அதிகாரி
களிடம், தங்கள் அறிக்கையை சமர்ப்பித்த போலீசார், கிடங்குகளில் வைக்கப்பட்டிருந்த மதுவில் பெரும்பாலான அளவு, எலிகள் குடித்ததால், காலியாகி விட்டதாக தெரிவிக்கப்பட்டது.போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட, ஒன்பது லட்சம் லிட்டர் மதுபானங்கள் எலிகள் குடித்ததில் தீர்ந்து விட்டதாக கூறப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, மது பாட்டில்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்குகளை ஆய்வு செய்ய போலீஸ் உயர் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

BHOPAL NEWS