பாலியல் தொழில் குற்றமல்ல குஜராத் ஐகோர்ட் கருத்து
பதிவு செய்த நாள் 06 மே2017 22:48
ஆமதாபாத்,: 'பலவந்தப்படுத்தாதவரை, பாலியல் தொழிலை குற்றச் செயலாக கருத முடியாது' என, குஜராத் ஐகோர்ட் தெரிவித்து உள்ளது.டில்லியில், 2012ல், மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பின், பாலியல் குற்றங்கள் தொடர்பான சட்டங்கள் திருத்தம் செய்யப்பட்டு கடுமையாக்கப்பட்டு உள்ளன. இதன்படி, பாலியல் தொழிலாளியின் வாடிக்கையாளரும், குற்றம் செய்தவராக தான் கருதப்படுகிறார்.
முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கும் குஜராத் மாநிலம், சூரத்தைச் சேர்ந்தவர், வினோத் படேல்; சமீபத்தில், பாலியல் தொழில் நடக்கும் இடத்திற்கு சென்றார். அப்போது, போலீசார் அதிரடி சோதனை நடத்தி, படேல் உட்பட, ஆறு பேரை கைது செய்தனர். படேல் மீது, பல்வேறு வழக்குகள் பதிவு செய்தனர்.
இதை எதிர்த்து, குஜராத் ஐகோர்ட்டில், படேல் மனு தாக்கல் செய்தார்.அதில், 'நான் பாலியல் தொழிலாளியுடன் இருக்கும் போது, போலீசார் என்னை கைது செய்யவில்லை. அங்கு காத்திருந்த போது தான் கைது செய்தனர். அதனால், நான் எந்த குற்றமும் செய்யவில்லை. பலவந்தப்படுத்தியோ, பணத்தாசை காட்டியோ,
பாலியலில் ஈடுபடவில்லை' என, கூறியிருந்தார்.இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி, ஜே.பி.பர்டிவாலா முன்னிலையில் நடந்தது. இருதரப்பு வாதங்களுக்கு பின், நீதிபதி கூறியதாவது:
பாலியல் தொழிலில், சுய விருப்பத்தின்படி ஈடுபடுபவர்கள் மீது, குற்ற வழக்கு பதிவு செய்யக் கூடாது. ஏனெனில், விருப்பத்தின் பேரில், பாலியல் தொழிலில் ஈடுபடுவது குற்றமல்ல. மாறாக, வலுக்கட்டாயமாகவோ, மிரட்டியோ, பணத்தாசை காட்டியோ, ஒருவரை, பாலியல் தொழிலில்
ஈடுபடுத்துவது தவறு.இந்த வழக்கில் தொடர்புடைய மனுதாரருக்கு, பாலியல் தொழில் நடத்திய வர்களுடன், எந்த தொடர்பும் இல்லை; அதை வைத்து சம்பாதிக்கவும் இல்லை. அதனால், அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள, பாலியல் வன்கொடுமை வழக்கு ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி கூறினார்.

No comments:
Post a Comment