Wednesday, May 17, 2017

ஊதியக்குழு பரிந்துரை அரசு குழு முதல் கூட்டம்
 
பதிவு செய்த நாள் 16 மே2017 23:15

சென்னை: மத்திய அரசின் ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ள, திருத்திய ஊதிய விகிதங்களை அமல்படுத்துவது குறித்து ஆராய, தமிழக அரசு அமைத்த அலுவலர் குழுவின் முதல் கூட்டம் நேற்று, சென்னை, தலைமைச் செயலகத்தில் நடந்தது. நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலர், சண்முகம் தலைமையில், குழு உறுப்பினர்களான, உள்துறை செயலர், நிரஞ்சன் மார்டி, பள்ளிக் கல்வித் துறை செயலர், உதயசந்திரன், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை செயலர், ஸ்வர்ணா, உறுப்பினர் செயலர், உமாநாத் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், மத்திய அரசின் ஏழாவது ஊதிக்குழு அடிப்படையில், தமிழக அரசின் தற்போதைய ஊதியம் மற்றும் ஓய்வூதிய விகிதங்களை, திருத்தி அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

அடுத்த கட்டமாக, அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அமைப்புகளை சந்தித்து, கருத்துக்களை கேட்டறிய முடிவு செய்யப்பட்டது.

No comments:

Post a Comment

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள...

DINAMANI வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்...