Thursday, May 25, 2017

18 வயது நிரம்பாத மைனர் பெண்ணின் ஒப்புதலுடன் உறவு கொள்வதும் பலாத்காரம் தான்

2017-05-25@ 01:22:57




பெங்களூரு: பதினெட்டு வயது நிரம்பாத மைனர் பெண்ணை அவரது ஒப்புதலுடன் உறவு கொண்டாலும் அதை பாலியல் பலாத்கார குற்றமாகத்தான் கருத முடியும். அத்தகைய குற்றம் செய்தவருக்கு சட்டத்தில் கண்டிப்பாக தண்டனை வழங்கப்படும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சாம்ராஜ்நகர் மாவட்டம், கொள்ளேகால் தாலுகாவை சேர்ந்த ராமண்ணா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது), திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடந்த மூன்றாண்டுகளாக இளம்பெண்ணை பாலியல் உறவுக்கு பயன்படுத்தி வந்துள்ளார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் ராமண்னாவை கைது செய்து விசாரணை நடத்திய பின் சிறையில் அடைத்துள்ளனர்.

அவர் தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி சாம்ராஜ்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அம்மனு நேற்று முன்தினம் விடுமுறைகால நீதிபதி கே.எஸ்.முதகல் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் வாதம் செய்யும்போது, எனது கட்சிக்காரர் மைனர் பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்யவில்லை. அவரின் ஒப்புதலுடன் தான் உறவு கொண்டுள்ளார். இது பாலியல் பலாத்கார புகாரில் வருவதில்லை. மேலும் எனது கட்சிக்காரர் மீது போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்ததும், அவர் தலைமறைவாகாமல் போலீஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

ஆகவே எனது கட்சிக்காரரை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்றார். அதற்கு மறுப்பு தெரிவித்து அரசு வக்கீல் கே.நாகேஷ்வரப்பா ஆஜராகி வாதிடும்போது, பாதிக்கப்பட்ட பெண்னமனர். அவரை திருமண ஆசை காட்டி தொடர்ந்து மூன்றாண்டுகளாக உடலுறவுக்கு பயன்படுத்தியுள்ளார். மேலும் குற்றவாளிக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. அதை மறைத்து விட்டு மைனர் பெண்ணின்அறியாமையை பயன்படுத்தி அவரை நாசப்படுத்தியுள்ளார். இப்படிப்பட்டவரை ஜாமீனில் விடுதலை செய்தால், சாட்சியை கலைத்து விடுவார். ஆகவே ஜாமீன் வழங்கக்கூடாது என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டபின் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், இக்பால் என்பவர் சிறுமி ஒருவரி–்ன் ஒப்புதலுடன் பாலியல் உறவு கொண்ட புகார் தொடர்பாக வழக்கை விசாரணை நடத்திய கொச்சி மாவட்ட அமர்வு நீதிமன்றம், குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. அதை கேரள மாநில உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. அத்தீர்ப்புகளை எதிர்த்து உச்சநீதிமன்றதில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதை விசாரித்த நீதிமன்றம், சிறுமியின் ஒப்புதலுடன் பாலியல் உறவு கொண்டாலும், அதை ஏற்றுக்கொள்ள முடியாது. குற்றவாளி–்க்கு வழங்கிய தண்டனை சரியானது என்று தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பு இவ்வழக்கிற்கும் பொருந்தும், மைனர் பெண்ணின் அறியாமையை தனக்கு சாதகமாக்கிக் கொண்டவரின் தவறை மன்னிக்க முடியாது. ஆகவே அவரி–்ன் ஜாமீன் மனுவை நிராகரிப்பதாக கூறி தள்ளுபடி செய்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2025