Thursday, May 25, 2017

ராணுவ வீரரின் மனைவிக்கு 18 ஆண்டு பென்ஷன்

பதிவு செய்த நாள்24மே2017 21:56

சென்னை: முன்னாள் ராணுவ வீரரின் மனைவிக்கு, 18 ஆண்டுகளுக்கான குடும்ப ஓய்வூதியம் அளிக்கும்படி, ராணுவ தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது.

சென்னை, முடிச்சூரை சேர்ந்தவர் கெஜலட்சுமி, 82. அவர், ராணுவ தீர்ப்பாயத்தில் தாக்கல் மனு:

என் கணவர், சிட்டி பாபு, 1942 முதல் 1946 வரை ராணுவத்தில் பணியாற்றினார். பின், 1951 முதல், 1966 வரை, பகுதி நேரமாக பணியாற்றும், பிரதேச ராணுவத்தில் பணியாற்றினார். 

கணவர் இறந்த பின், குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. பிரதேச ராணுவத்தில், 15 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி உள்ளதால், குடும்ப ஓய்வூதியத்தை வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷா சந்திரன், உறுப்பினர் சுரேந்திரநாத் அமர்வு பிறப்பித்த உத்தரவில், 'மனுதாரர், பிரதேச ராணுவ வீரரின் குடும்ப ஓய்வூதியம் பெற தகுதியுடையவர். அவருக்கு, 18 ஆண்டு களுக்கான, குடும்ப ஓய்வூதியத்தை அளிக்க வேண்டும்' என, கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2025