Wednesday, May 24, 2017

ஜூலை 1-ம் தேதி ஜிஎஸ்டி வரி அமல்; சினிமா டிக்கெட் விலை குறையும்..!



நாடு முழுவதும் பொருட்கள், சேவைகள் மீது ஒரே சீரான வரி விதிப்புக்காக சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி.) வருகிற ஜூலை 1–ம் தேதி முதல் மத்திய அரசு அமல்படுத்த திட்டமிட்டு இருக்கிறது.




மத்திய நிதி அமைச்சகம் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் அடங்கிய சேவைகளுக்கு சரக்கு, சேவை வரியை குறைக்க முடிவு செய்து உள்ளது. இதனால் கேபிள் நெட் ஒர்க், சினிமா டிக்கெட் கட்டணங்கள் குறையும் என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''தற்போது சினிமா அரங்குகளில் திரையிடப்படும் சினிமா படங்களுக்கான கேளிக்கை வரி அதிகபட்சமாக 100 சதவிகிதம் வரை உள்ளது. இது ஜி.எஸ்.டி-யில் 28 சதவிகிதமாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் கேளிக்கை வரி உள்ளிட்ட அனைத்துவித வரிகளும் அடங்கிவிடுவதால் இனிமேல் கேளிக்கை நிகழ்ச்சிகள், காட்சிகள் மீது பஞ்சாயத்து அல்லது மாநகராட்சிகள் விதிக்கும் வரி மட்டும் நீடிக்கும். கேபிள் டி.வி மற்றும் டி.டி.எச் சேவைகளுக்கான வரியை 18 சதவிகிதமாக குறைக்க முடிவு செய்து இருக்கிறது. ஸ்மார்ட் போன் வரி ஒரு சதவிகிதம் குறைவதால் அதன் விலையும் குறையும்'' என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2025