ரூ.10 கோடி மோசடி புகாரில் சிக்கிய கெஜ்ரிவால் உறவினர் வீட்டில் ரெய்டு..!
_12222_06588.jpg)
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பல்வேறு நெருக்கடிகளில் சிக்கி தவித்து வருகிறார். அவரது நெருங்கிய உறவினரான சுரேந்தர் குமார் பன்சால் மீது 10 கோடி ரூபாய் மோசடி புகார் எழுந்தது. அவர், கழிவு நீர் வடிகால் அமைக்கும் பணியை செய்த போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் துணையுடன் பல்வேறு நிறுவனங்களின் பெயரால் போலி பில்களை அளித்து மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக தொண்டு நிறுவனம் ஒன்று அளித்த புகாரின் பேரில், 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே சுரேந்தர்குமார் பன்சால் கடந்த 7–ம்தேதி மரணம் அடைந்து விட்டார். இந்த நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசார், 22-ம் தேதி இரவு அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பொதுப்பணித்துறை மூத்த அதிகாரிகளான பவன் குமார், கமல்குமார் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த சோதனைகளில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் கூறுகின்றன.
No comments:
Post a Comment