Sunday, May 7, 2017

சித்ரா பவுர்ணமி கிரிவலம் 2,140 சிறப்பு பஸ்கள் இயக்கம்

பதிவு செய்த நாள் 06 மே2017 19:21



சென்னை, சித்ரா பவுர்ணமி கிரிவலத்துக்காக, திருவண்ணாமலைக்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காக, 2,140 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில், பவுர்ணமி கிரிவலம் சிறப்பு வாய்ந்தது; அதிலும், சித்ரா பவுர்ணமி மிக சிறப்பானது. வரும், 10ம் தேதி, சித்ரா பவுர்ணமி விழா கொண்டாடப்படுகிறது. அன்று அதிகாலை, 12:10 மணி முதல், 11ம் தேதி, அதிகாலை, 03:04 மணி வரை, கிரிவலம் செல்ல, உகந்த நேரமாகும்.

அன்று, ௧௦ லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள், கிரிவலம் செல்ல வரலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. வெளியூர்களில் இருந்து, திருவண்ணாமலை வரும் பக்தர்களின் வசதிக்காக, விழுப்புரம், சேலம், திருச்சி மற்றும் கும்பகோணம், அரசு போக்குவரத்துக் கழக கோட்டங்களில் இருந்து, 2,140 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

தற்காலிக பஸ் நிலையங்கள் அமைத்து, அங்கிருந்து, கிரிவலம் புறப்படும் இடத்திற்கு, சிறப்பு பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

BHOPAL NEWS