புகார் தந்த பெண்ணிடம் போலீஸ் ஏ.சி., நக்கல்
பதிவு செய்த நாள் 06 மே2017 19:23
திருச்சி, 'எனக்கு நமீதா, நக்மா, ஜெயப்பிரதா ஆகியோரை பிடிக்கும். அவர்கள் கிடைக்கவில்லை என்பதற்காக நான் தற்கொலை செய்து கொள்ள முடியுமா' என்று தற்கொலைக்கு துாண்டிய வழக்கு விசாரணையில், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் போலீஸ் ஏ.சி., கேட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சொந்த பிரச்னை
திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்தவர் அனுராதா, 37. இவர் திருமணமாகி, தன் கணவருடன் வசித்து வருகிறார். இவருக்கும், இவரது சகோதரர்கள் மற்றும் தாயார் ஆகியோருக்கும் இடையே சொத்து பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் சொத்து பிரச்னையை பேசச் சென்ற அனுராதாவை, அவரது அம்மா நேரிலும், சகோதரர்கள் போனிலும் தரக்குறைவாக பேசியுள்ளனர். இதனால், மனம் வெறுத்த அனுராதா தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அருகில் உள்ளவர்கள் மருத்துவமனையில் சேர்த்து, தீவிர சிகிச்சைக்கு பின் அவர் உயிர் பிழைத்தார். அம்மா, சகோதரர்கள் திட்டி தன்னை தற்கொலைக்கு துாண்டியது குறித்து, அரியமங்கலம் போலீசில் அனுராதா புகார் அளித்தார்.
அதன்படி நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், துணை கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டது. அவர், பொன்மலை உதவி கமிஷனர் விசாரிக்க உத்தரவிட்டார். அதன்படி, கடந்த இரு நாட்களுக்கு முன் விசாரணை நடந்துள்ளது.
அப்போது, உதவி கமிஷனர் சுந்தர்ராஜன், பாதிக்கப்பட்ட அனுராதாவுக்கு எதிராக பேசியதோடு, 'எனக்கு கூட தான் நமீதா, நக்மா, ஜெயப்பிரதா ஆகியோரை பிடிக்கும். அவர்கள் கிடைக்கவில்லை என்பதற்காக தற்கொலை செய்து கொள்ள முடியுமா' என்று கேட்டுள்ளார்.
என் கோட்டைஇதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அனுராதாவும், அவரது கணவரும், எதிர்த்து கேட்க, 'இது என் கோட்டை; இங்கு, நான் சொல்வதைத்
தான் கேட்க வேண்டும். கோர்ட்டுக்கு போய் பார்த்துக் கொள்; தேவையில்லாமல் அவர்களை தொந்தரவு செய்யக்கூடாது' என்று மிரட்டும் தொனியில் பேசியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அனுராதா, வழக்கறிஞர் மூலம் மீண்டும் துணை கமிஷனரிடம் புகார் அளிக்க முடிவு செய்துள்ளார். ஏற்கனவே, திருப்பூரில் மதுவுக்கு எதிராக போராடிய பெண்ணை, போலீஸ், ஏ.டி.எஸ்.பி., தாக்கிய பிரச்னை கடும் விமர்சனத்துக்கு உள்ளான நிலையில், உதவி கமிஷனர் பேசியது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

No comments:
Post a Comment