மாநில கணக்காயர் குழுவுக்கு முக்கிய ஆவணங்கள் தர-மறுப்பு: ஊழல் அதிகாரிகளை காப்பாற்ற மருத்துவமனை முயற்சி
பதிவு செய்த நாள்24மே2017 01:56

மதுரை:மதுரை அரசு மருத்துவமனையில், ஊழல் அதிகாரிகளை காப்பாற்றும் விதமாக, மருத்துவ உபகரணங்கள் கொள்முதல், கருவிகள் பயன்பாடு போன்றவற்றை ஆய்வு செய்து வரும் மாநில கணக்காயர் குழு கேட்கும் ஆவணங்களை நிர்வாகிகள் தர மறுக்கின்றனர்.
மத்திய அரசு அலுவலகங்களில் பொருட்கள் கொள்முதல், அவற்றின் பயன்பாடு போன்றவற்றை இந்திய தலைமைக் கணக்கு தணிக்கையாளர் (சி.ஏ.ஜி.) அலுவலகம் ஆய்வு செய்கிறது. மாநில அரசு துறைகளை ஆய்வு செய்ய மாநில கணக்காயர் அலுவலகம் செயல்படுகிறது. இவற்றுக்கு நீதிமன்றம் போல் தன்னிச்சையாக செயல்படும் அதிகாரத்தை அரசியல் அமைப்பு சாசனம் வழங்கியுள்ளது. இவை, குறிப்பிட்ட கால இடைவெளியில் மாநில அரசு அலுவலகங்கள், மருத்துவமனை போன்றவற்றில் ஆய்வு பணிகள் செய்து வருகிறது. இது போன்ற ஆய்வுகள் மூலம்தான், 2ஜி, நிலக்கரி சுரங்க ஊழல் போன்றவை வெளிவந்தது.
கடந்த 2012க்கு பிறகு தற்போது கணக்காயர் அலுவலக குழு இம்மருத்துவமனையில் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. முதலில் மூன்று பேர் கொண்ட குழுவினர் பத்து நாட்கள் ஆய்வுப் பணியில் ஈடுபட திட்டமிட்டிருந்தனர். ஆய்வு துவங்கியதும், அமைச்சர் விஜயபாஸ்கர் அழுத்தத்தால் பல லட்ச ரூபாய் செலவில் வாங்கப்பட்டு பயன்பாடின்றி உள்ள 'பேட்டரி' கார்கள் மருத்துவமனை விரிவாக்க கட்டடத்தில் மறைத்து வைக்கப்பட்டன. அரசு காப்பீட்டு திட்ட வருவாயை கையாண்டது குறித்த ஆவணங்களை குழுவுக்கு வழங்க மருத்துவமனை அலுவலர்கள் மறுத்தனர்.
கிடைத்த சில ஆவணங்கள் மூலம் குழுவினர் பொதுப்பணித்துறை பணிகளில் பெரிய அளவில் ஊழல் நடந்ததை குழு கண்டறிந்தது. அதை உறுதிப்படுத்த, அவர்கள் மேற்கொண்டு கேட்ட ஆவணங்கள் தர பொதுப்பணித்துறை மறுத்து விட்டது. இதனால் ஆய்வுப்பணி மேலும் சில நாட்களுக்கு ட்டிக்கப்பட்டுள்ளது.
தோண்ட, தோண்ட பூதம்
டாக்டர்கள் கூறியதாவது: 'தோண்ட, தோண்ட பூதம் கிளம்புவது போல்', கணக்காயர் குழு ஆய்வில் பல்வேறு முறைகேடு வெளியாகி வருகிறது. அரசு காப்பீட்டு திட்டம் மூலம் ஆண்டுக்கு 25 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது.
இதனை முன்னாள் நோடல் அதிகாரி சந்திரகுமார் கையாண்டது குறித்த ஆவணங்களை அலுவலர்கள் தர மறுத்ததால், மருத்துவமனை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பும் நிலை ஏற்பட்டது. உள்ளூர் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு கொடுக்கப்படும் 'கமிஷன்' போக, 50 சதவீத நிதி கூட பொதுப்பணித்துறை திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுவதில்லை.
இது போன்றவற்றை, ஆய்வு செய்ய குறைந்தது 20 அதிகாரிகளை கணக்காயர்
அலுவலகம் அனுப்ப வேண்டும்.
கடந்த 2012 - 2014 வரை மருந்து கொள்முதலில் ஊழல் செய்ததாக முன்னாள் டீன் மோகன் உள்ளிட்டோருக்கு அரசு ஊழியர் ஒழுங்கு நடவடிக்கை விதி, பிரிவு '17பி'யின் படி அரசு 'மெமோ' அனுப்பியுள்ளது. ஆனால் அதற்குள் ஓய்வு பெற்றுவிட்டனர். இப்படித்தான் அரசின் நடவடிக்கை உள்ளது.
இம்மருத்துமனையில் நடந்துள்ள முறைகேடுகளை கண்டறிய கணக்காயர் ஆய்வுதான் ஒரே நம்பிக்கையாக உள்ளது என்பதால், முழுமையாக ஆய்வுப் பணியில் ஈடுபட்டு, முறைகேடுகளை கண்டறிந்து, ஊழல்வாதிகளிடமிருந்து மருத்துவமனையை காப்பாற்ற முன்வர வேண்டும்.

No comments:
Post a Comment